பொதுமக்கள் Face Mask அணிவது பற்றி சுகாதார அமைச்சு!

பொதுமக்கள் Face Mask அணிவது தொடர்பாக Police மா அதிபருக்கு சுகாதார பணிப்பாளரின் கடிதம்.
தமிழில் Dr Ziyad Aia

IGP
Police head quarters
Colombo

COVID-19: தடுப்பு குறித்த சிறப்பு அறிவிப்பு 25.03.2020

COVID-19 நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான ஆதரவுக்கு உங்களுக்கும் இலங்கை காவல்துறையினருக்கும் சுகாதார அமைச்சகம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகிறது.

இந்த நாட்களில் முகமூடிகள் (facemasks) தொடர்பாக சமூகத்தில் மூடநம்பிக்கைகள்/பிழையான கருத்துக்கள் பரவி வருவதாக தெரிகிறது. அவற்றை சரிசெய்ய உங்கள் ஆதரவை நாங்கள் நாடுகிறோம்.

எனவே பின்வரும் விஷயங்களுக்கு கவனம் செலுத்துமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.

1. தற்போது, சுகாதார அமைச்சகம் பின்வரும் நிலைமைகளுக்கு மாத்திரமே facemasks களை பரிந்துரைக்கிறது,
– நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள்
– நோய் சந்தேகக்கப்படும் நபர்களின் நெருங்கிய தொடர்புகள்
– நோயாளிகளை கவனிக்கும் சுகாதார ஊழியர்கள்
– சுவாச அறிகுறிகள் உள்ள நோயாளிகள் மற்றும் அவர்களோடு மருத்துவமனைக்கு வருபவர்கள்

2. பின்வரும் காரணங்களால் அன்றாட நடவடிக்கைகளில் பொது மக்களுக்கு முகமூடிகளை சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கவில்லை,
– ஃபேஸ்மாஸ்களின் பொருத்தமற்ற பயன்பாடு நோயின் பரவலை அதிகரிக்கும்.
– முகமூடிகளை முறையற்ற முறையில் அகற்றுவது நோயின் பரவலை அதிகரிக்கும்.
– கிடைக்கக்கூடிய ஃபேஸ்மாஸ்க்கள் உண்மையான தேவைப்படும் நேரங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

3. COVID-19 நோயைப் பெறுவதையும், பரப்புவதையும் தடுக்க பரிந்துரைக்கப்பட்ட முறைகள்,
– இரண்டு நபர்களுக்கு இடையில் குறைந்தது 1 மீட்டர் தூரத்தை வைத்திருத்தல்
– குறைந்தபட்சம் 20 விநாடிகளுக்கு அடிக்கடி கை கழுவுதல்
– அழுக்கு கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்ப்பது
– தும்மும்போது அல்லது இருமும்போது முழங்கையின் உட்புறத்திலிருந்து மூக்கு மற்றும் வாயை மூடுவது or கைக்குட்டையை பாவித்தல்.

4. சுகாதார அமைச்சகம் இந்த நேரத்தில் ஆரோக்கியமான பொதுமக்களுக்கு முகமூடிகளை பரிந்துரைக்கவில்லை என்றாலும், முகமூடி அணிவதற்கான அவர்களின் முடிவை நாங்கள் கண்டிக்க விரும்பவில்லை.

முகமூடி அணியாமல் இருப்பது ஒரு குற்றமாக கருதி ஆரோக்கியமான பொதுமக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அமைச்சகம் தயவுசெய்து கேட்டுக்கொள்கிறது.

5. ஆரோக்கியமான பொது மக்களால் முகமூடி அணிவதற்கு தற்போது எந்தவிதமான விஞ்ஞான ஆதாரமும் இல்லை என்பதை மேலும் வலியுறுத்த விரும்புகிறோம்.

இது தொடர்பாக உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்

Dr. Anil Jasinghe
DGHS
Ministry of health

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

886 total views, 1 views today