புற்று நோயை (Cancer) உருவாக்கக்கூடிய ஆபத்தான காரணிகள் எவை?
1. புகையிலை பாவனை மற்றும் புகை பிடித்தல்
❌ மாரடைப்பு, சுவாச நோய், பாரிசவாதம் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும்.
❌ நுரையீரல் மற்றும் வாய்க்குழியில் மட்டுமல்லாது ஏனைய அங்கங்களிலும் புற்றுநோய் ஏற்படும்.
❌ புகைப்பிடிக்கும் ஒருவரிற்கு அருகில் இருப்பதன் மூலம் புகை பிடிக்காத நீங்களும் ஆபத்திற்குட்படலாம்.
✅ அதிகமான புற்றுநோய் சிகரெட் மற்றும் புகையிலையுடன் தொடர்பான உற்பத்திகளை பாவிப்பதை நிறுத்துவதன் மூலம் தடுத்துக் கொள்ள முடியும்.
2. வெற்றிலைப் பாக்கு மெல்லல்
❌ வெற்றிலைப் பாக்கிலுள்ள புகையிலை, பாக்கு, மற்றும் சுண்ணாம்பு வாய், தொண்டை மற்றும் கழுத்தில் புற்றுநோய் ஏற்பட காரணமாகும்.
❌ பாக்கு மற்றம் புகையிலை தொடர்பான உற்பத்திகளைப் பாவிப்பதன் மூலம் (பாபுல், பீடா) வாய்ப்புற்று நோயை ஏற்படுத்தும்.
3. மதுபானப் பாவனை
❌ மதுபானப் பாவனை வாய், தொண்டை , குரல் வளை, இரைப்பை, ஈரல், பெருங்குடல் மற்றும் மார்பகங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும்.
✅ புகையிலை, சிகிரெட், வெற்றிலைப் பாக்கு மற்றும் மது பாவனை உள்ளவராயின் நீங்கள் விரைவாக அதிலிருந்து மீளுங்கள் …!
✅ மேற்கூறியவற்றை பாவிக்காதவராயின் நீங்கள் அந்தப் பழக்கங்களை தொடர்ந்தும்பின்பற்றவும்…..!
4.சுகாதாரத்திற்கு பொருத்தமற்ற உணவுப் பழக்கம்:
❌ பொருத்தமற்ற உணவுப்பழக்கங்கள் பல புற்றுநோய்களிற்கு காரணமாகும்.
❌ சொசேஜஸ், மீட்போல்ஸ் போன்ற தயாரிக்கப்பட்ட இறைச்சிப் பாவனையை தவிர்ப்போம்.
❌ சிவப்பு நிற இறைச்சி வகையை உட்கொள்வதை எல்லைப்படுத்துவோம். கொழுப்புடன் கூடிய பால், பட்டர் போன்ற நிரம்பிய கொழுப்பு கொண்ட உணவுகளை அளவுடன் உட்கொள்வோம்.
❌ எண்ணெய், சீனி மற்றும் உப்பு அதிகமான உணவுகள் உட்கொள்வதை தவிர்ப்போம்.
✅ பொருத்தமான உணவுகள்:
✅ பல்வேறு நிறங்கள் மற்றும் சுவைகள் அடங்கிய இயற்கையான காய்கறி பழங்கள் மற்றும் கீரைவகைகள் என்பவற்றை அதிகளவில் உட்கொள்வோம்.
✅ நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளதால் மீனை உணவுடன் சேர்த்துக் கொள்வோம்.
✅ இறைச்சியில் உள்ள கொழுப்பை அகற்றிய பின் உட்கொள்வோம்.
✅ உயரத்திற்கேற்ற நிறையை பேணிக் கொள்ளக் கூடியவாறு மாப்பொருள் அடங்கிய உணவை உட்கொள்வோம்.
5. சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை:
❌ உடற்பயிற்சி செய்வதால் உங்களிற்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும். (விசேடமாக பெருங்குடல், மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் )
✅ சிறுவர் மற்றும் கட்டிளமைப்பருவத்தினர் தினந்தோறும் ஒரு மணித்தியாலம் உடற்பயிற்சியில் அல்லது உடற் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
✅ மூத்தோர் மற்றும் முதியோர் நாள் தோறும் 30 நிமிடங்கள் வீதம் வாரத்திற்கு 05 நாட்கள் உடற்பயிற்சியில் அல்லது உடலை வருத்திச் செய்யும் வேலைகளில் ஈடுபட வேண்டும்.
✅ உடற் பயிற்சிகள் ஒரு நாளில், தொடர்ந்து செய்ய முடியாவிடின், அதை 10 நிமிடங்கள் அல்லது 15 நிமிடங்கள் பகுதி பகுதியாக வகுத்து மேற்கொள்ள வேண்டும்.
6. மன அழுத்தம்:
❌ மன அழுத்தம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை குறைப்பதால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும்.
மன அழுத்தத்திலிருந்து விடுபடுவது என்றால்
✅ சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்
✅ தியானம் செய்வோம்
✅ பொழுது போக்குகளில் ஈடுபடுவோம்
✅ இலகுவான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடுவோம்.
▶️ மன அழுத்தத்தைக் குறைத்துக் கொண்டு புற்று நோயிலிருந்து பாதுகாப்புப் பெறுவோம்.
7. சூழல் மாசடைதல்
❌ சூழல் மாசடைதல் புற்று நோய் ஏற்பட காரணமாகும்.
❌ பொலித்தீனை எரிப்பதால் வெளிவரும் புகை புற்று நோயை ஏற்படுத்தும்.
❌ விவசாய இரசாயனப் பொருள் பாவனை,
❌ கதிர்வீச்சு மற்றும் நச்சுப் புகைகளிற்கு உட்படல் புற்று நோய் ஏற்படக் காரணமாகும்.
▶️ சூழல் மாசடைதலை தவிர்த்து புற்று நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.
சுகாதாரமான வாழ்க்கை முறைக்காக மேலும் தகவல்களை பெற எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
தேசிய புற்றுநோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம்
சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு

1,025 total views, 1 views today