விமர்சனத்துக்கு உள்ளாகும் இலங்கையின் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை (Postmortem) முறைமை!
By  Dr A.I.A.Ziyad

என்னதான் தாய், தந்தை, பிள்ளை, கணவன், மனைவி என உரிமை கொண்டாடினாலும் ஒரு உயிர் மரணித்துவிட்டால் அந்த உடல் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். நாட்டின் சட்டதிட்டங்கள், மற்றும் நடைமுறைகளுக்கு அமையவே அதன் இறுதி கிரியைகள் அமையும்.

ஒரு உயிர் மரணித்தால் அந்த மரணத்துக்கான காரணம் அறியப்பட வேண்டும். அது இயற்கையானதாகவோ, அகால மரணமாகவோ அமையலாம்.
பலருக்கு மரணத்தை எவ்வாறு தாங்கமுடியாமல் இருக்கிறதோ, அதைவிட மனஉளைச்சலை தருவது பிரேத பரிசோதனை  (Postmortem).

இலங்கையில் படித்தவர் முதல் பாமரர் வரை Postmortem பற்றிய நடைமுறை அதன் சட்டங்கள் பற்றிய குழப்பத்தில் உள்ளது புரிகிறது. அதை நிவர்த்திக்கும் முகமாக இப்பதிவு அமையும் என நம்புகிறேன். நீண்ட பதிவாக இருந்தாலும் தெளிவு பெற பொறுமையாக வாசியுங்கள்.

By: Dr A.I.A.Ziyad
MBBS (Pera)
MSc Biomedical Informatics (Colombo)
Registrar in MD Health Informatics (PGIM)

01. பிரேத பரிசோதனை Postmortem என்றால் என்ன?

PostMortem என்பது மரணித்த உடலில்
01. மரணத்துக்கான காரணம் (Cause of Death)
02. மரணித்த விதம் manner (circumstances) of Death eg: natural / accidental / homicidal / suicidal
கண்டறிய செய்யப்படும் மருத்துவ பரிசோதனை. (mortem என்பது Latin மொழியில் இறப்பை குறிக்கும்)

மரண விசாரணை பற்றிய சட்டம் இலங்கையில்  Code of Criminal Procedure
(CCP) of Sri Lanka (1980) இன் 369 தொடக்கம் 373 வரையான Section களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பிரேத பரிசோதனை Post mortem செய்வதற்கு கட்டளை இட அதிகாரம் பெற்றவர் யார்? Or Post mortem செய்ய வேண்டுமா இல்லையா என தீர்மானிப்பவர் யார்?

( Doctor or Coroner or Magistrate )
இந்த விடயத்தில் பலர் தெளிவின்றி உள்ளனர்.

Section 21 (b) of the CCP இன் பிரகாரம் ஒரு மரணத்தை கண்ணுற்றால் (பொதுமகனோ / வைத்தியரோ) அது திடீர் மரணம், அகால மரணம், வன்முறை, சந்தேகத்துக்கு இடமான முறை or  மரணத்துக்க்கான கரணம் அறியப்படாத நிலையில் மரணித்தால் அதுபற்றி அருகிலுள்ள போலீஸ் நிலையம், நீதவான், சமாதான நீதவான் or கிராம சேவகருக்கு அறியத்தர வேண்டும்.

Section 370 (1) of the CCP பிரகாரம் திடீர் மரண விசாரணை அதிகாரி (ISD/Coronar) மரண விசாரணை (Inquest) செய்வார். பொதுவாக Police க்கு கிடைக்கும் முறைப்பாடு மரண விசாரணை அதிகாரி or நீதிவானுக்கு அறிவிக்கப்படும். மரண விசாரணை அதிகாரி (ISD/Coroner) யினால் விசாரிக்கப்பட்டு அறிக்கையை நீதவானுக்கு சமர்ப்பிப்பார்.

Section 370 (4) of the CCP பிரகாரம் நீதவான் (Magistrate) தன்னிடம் நேரடியாக சமர்ப்பிக்கப்படும் முறைப்பாட்டுக்கான மரண விசாரணையை மேற்கொள்வார்.
 
(வேறு முறையில் சொல்வதானால் நீதவானின் வேலையை இலகுவாக்கவே இந்த திடீர் மரண விசாரணை அதிகாரி.)

section 371 of the CCP பிரகாரம் பின்வரும் 3 நிலைமைகளின்போது நீதிவானே (Magistrate) மரண விசாரணையை மேற்கொள்ள வேண்டும். (இதனை மரண விசாரணை அதிகாரி (ISD/Coroner) மேற்கொள்ள முடியாது.)

01. கொலை/கொலை என சந்தேகிக்கப்படுபவை
02. Police காவலில் இருக்கும் கைதியின் மரணம்
03. மனநல (mental) /தொழுநோய் (Leprosy) வைத்தியசாலைகளில் நிகழும் மரணங்கள்

02. திடீர் மரண விசாரணை அதிகாரி ~ Coroner இன் அடிப்படை தகைமை என்ன?

இலங்கையில் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் Minister of Justice க்கு உள்ளது. மரண விசாரணை அதிகாரி நியமனத்துக்கு எந்தவித அடிப்படை கல்வித்தகைமையும் குறிப்பிடப்படாததால் யாரை வேண்டுமானாலும் நியமிக்கள்லாம். (சமாதான நீதிவான் போல்).

இவர்களுக்கே மரண விசாரணை செய்து Postmortem செய்ய கட்டளை இட அதிகாரம் உள்ளதால் சட்ட மருத்துவம் தொடர்பில் தெளிவின்மையால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.  இது பிற நாடுகளாலும் விமர்சிக்கப்பட்ட விடயம்.
சில இடங்களில் ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆயுர்வேத வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.
UK போன்ற நாடுகளில் Doctors or Lawyers களே Coroner ஆக உள்ளனர்.
அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வைத்தியர்களே மரண விசாரணை அதிகாரிகளாக செயற்படுகின்றனர்.
(Colombo தேசிய வைத்தியசாலையில் சட்டத்தரணி ஒருவரும் Coroner ஆக உள்ளார்.)

திடீர் மரண விசாரணை அதிகாரி ~ Coroner இன் அதிகாரங்கள் என்ன?

மரணம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் உரிய இடத்துக்கு விஜயம் செய்வார்.
Subsection (5) of section 370 of  CCP பிரகாரம் Coroner க்கு மரண விசாரணையின்போது வாய்மூல or ஏதாவது Documents ஐ சமர்ப்பிக்கும்படி witness க்கு கட்டளை (Sammon) இட முடியும்.  
Section 370(2) இன் பிரகாரம் மரண விசாரணை அறிக்கையை நீதிவானுக்கு சமர்ப்பிப்பார்.

எவ்விதமான மரணங்களுக்கு மரண விசாரணை (Inquest) செய்யப்பட வேண்டும்?
subsection 371 of CCP பிரகாரம்

01. அகால மரணங்கள் ( இயற்கைக்கு முரணானவை)

A) விபத்துக்கள்:-  வீதி விபத்துகள், தீப்பிடித்து இறத்தல்,  மின்னல் தாக்குதல், மின்சாரம் தாக்குதல், உணவு நஞ்சாதல் அல்லது நஞ்சு அருந்துதல், மூச்சுத் திணறல்

B)  தற்கொலை:- நீரில் மூழ்குதல், தூக்கில் தொங்குதல், நஞ்சருந்துதல், தனக்குத் தானே தீ மூட்டுதல்

C) கொலை:- அடித்து கொல்லுதல், (கழுத்தை) நெரித்து கொல்லுதல், துப்பாக்கிச் சூடு, கத்திக் குத்து, கயிற்றில் தொங்க வைத்தல்.

02.மிருகங்களாலும் இயந்திரங்களாலும் கொல்லப்படுதல்:-
பாம்பு கடி, Rabies, மிருகங்கள் மோதல் or அடித்தல், வேலைத்தள விபத்துகள்

03. இறப்புக்கான காரணம் தெரியாதவை.
(இந்த இடத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் நிகழும் மரணங்களுக்கு மரண விசாரணை அவசியமில்லை. அது இங்கிலாந்தில் உள்ள சட்டம். இலங்கையில் இல்லை. மரணத்துக்கான காரணம் தெரிந்தால் அது இங்கு குறிப்பிட்ட ஏனைய காரணங்கள் இல்லாது இருந்தால் Death Certificate வழங்க முடியும்.)

04. சந்தேகத்துக்கு இடமான முறையில் நிகழும் மரணங்கள்/ மருத்துவ புறக்கணிப்பால் நிகழும் மரணங்கள்.

05. போலீஸ் தடுப்புக்காவல், சிறைச்சாலை, மனநல வைத்தியசாலை, தொழுநோய் வைத்தியசாலை, தனிமைப்படுத்தல் (Quarantine) நிலையங்களில் நிகழும் மரணங்கள்.

06. ஈர்ப்பு வலியால் (Tetanus) நிகழும் மரணங்கள்.

07. Criminal செயட்பாடுகளால் நிகழும் மரணங்கள் Eg: கருக்கலைப்பு (Abortion)

08. மயக்க மருந்து/ சாத்திரசிகிச்சையின்போது நிகழும் மரணங்கள்.

மரண விசாரணை (Inquest)  செய்யப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பிரேத பரிசோதனை Post mortem செய்ய வேண்டுமா?

என்றால் CCP இன் பிரகாரம் அதனை தீர்மானிக்கும் அதிகாரம், Coroner க்கோ நீதிவனுக்கோ உண்டு.
இங்குதான் Coroner இன் கல்வித்தகைமை, சட்ட வைத்திய அறிவு செல்வாக்கு செலுத்தும்.
இதனால் பல குளறுபடிகள் வருவதை அறிந்த நீதி அமைச்சு பின்வரும் சுற்றுநிரூபத்தை Coroner களுக்கு வெளியிட்டது. அதில் பின்வரும் நிலைமைகளின்போது கட்டாயம் பிரேத பரிசோதனைக்கு (Mandatory Postmortem க்கு) உத்தரவு இடவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
The circular 3/2008, issued on 2008.10.02 by thesecretary of the ministry of justice:
அவையாவன:
01. கர்ப்பிணி தாய் மரணம் – Maternal deaths
02. விபத்து மரணங்கள் – Deaths due to accidents
03. தற்கொலை – Deaths due to suicides
04. சுட்டுக்கொல்லல் – Deaths due to shootings
05. மரணத்துக்கான காரணம் அறியப்படாதவை Deaths in which cause of death is not known

இந்த Circular சட்ட விதிகளை மேவியதாகவே உள்ளது. இதனாலேயே பொதுவாக மரண விசாரணைக்கு உள்ளாகும் பெரும்பாலான நிலைமைகளில் Postmortem தேவைப்படுகிறது.

மரண விசாரணை நிகழும் முறை:

பொதுவாக வைத்தியசாலைக்கு வெளியே நிகழும் மரணங்கள் Police ஊடாக Coronar or நீதவானுக்கு அறிவிக்களிப்பட்டு மரணித்த உடல் அருகில் உள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படும்.

மரண விசாரணையின் பின்னர் Coronar or நீதவான் Post Mortem க்கு உத்தரவு இட்டால் அந்த வைத்தியசாலை பொறுப்பதிகாரி (MOIC/DMO/MS/Director) பிரேத பரிசோதனையை தனது வைத்ர்த்தியசாலையில் உள்ள Consultant JMO or JMO ஆக செயற்படும் MBBS வைத்தியர் அல்லது வைத்திய பொறுப்பதிகாரியே செய்யவேண்டும்.

மரணம் வைத்தியசாலையினுள் நிகழ்ந்தால் or மரணித்த உடல் நேரடியாக வைத்தியசாலைக்கே கொண்டுவரப்பட்டால்:
வைத்தியசாலை பொறுப்பதிகாரி ஊடாக BHT இன் ஊடாக வைத்தியசாலை police or அருகிலுள்ள police நிலையம் அல்லது Coroner க்கு அறிவிக்கப்படும். பின்னர் மேலே கூறியபடி விசாரணை தொடரும்.

விதிவிலக்கு:

மேலே கூறப்பட்டவை judicial Postmortem எனும் சட்ட ரீதியான பிரேத பரிசோதனை. இங்கு உறவினர்களின் ஒப்புதலோ, அனுமதியோ தேவை இன்றி சட்ட ரீதியான Postmortem நிகழும்.

இன்னுமொரு வகை உண்டு. அதுதான் Pathological Postmortem. இங்கு பிரேத பரிசோதனையானது அறிவியல் நோக்கத்துக்காக நோயின் தன்மை, ஆய்வு நோக்குக்கு செய்யப்படுவது. இதற்கு நெருங்கிய உறவினரின் ஒப்புதல் அவசியம். (அங்கும் தீர்மானிக்கும் உரிமை நெருங்கிய உறவினருக்கே உண்டு.)
இலங்கை போன்ற நாடுகளில் இது அரிது. இவ்வாறு Postmortem க்கு அனுமதி கேட்டால் தவிர்ந்துகொள்ளலாம்.

Take Home Message:

அகால மரணம் , மற்றும் சந்தேகத்துக்கிடமான, காரணம் அறியப்படாத மரணங்களுக்கு சட்டத்தின் பிரகாரம் மரண விசாரணை அவசியம்.
Postmortem செய்வதை தீர்மானிக்கும் அதிகாரம் Coroner மற்றும் நீதிவானுக்கே உண்டு.
வைத்தியரின்/வைத்தியசாலையின் அதிகாரம் மரணத்தை அறிவிப்பதும், Coroner மற்றும் நீதிவானின் உத்தரவுக்கு அமைய Postmortem மேற்கொள்வதும்.

Climax Twist:

 மரணத்துக்கான காரணம் அறியப்படாத (Deaths in which cause of death is not known) மரணங்களுக்கு இதுதான் (இந்த நோய்தான்) காரணம் என வைத்தியர் தீர்மானித்துவிட்டால்…… இங்கே தீர்மானிக்கும் அதிகாரம்…….

தொடரும்………

 

References

1. Parliament of the Democratic Socialist Republic of Sri Lanka. Code of criminal procedure act, No. 15 of 1979. Department of Government Press. 1979. p 145

2. Parliament of the Democratic Socialist Republic of Sri Lanka. The Penal code. Department of Government Press. 1970. p. 332

3. Ministry of Justice. Circular No 3/2008of 02.10.2008

4. 092 New Law Report V-71. Available from:
https://www.lawnet.gov. lk/1977 /12/31/g-a-d-seneviratne-petitioner-and-the-attorney-general-and-2-others -respo/

 

Inquest Procedure: Medical Officers’ Point of View

 

Inquests and doctors

3,755 total views, 1 views today