Nosophobia – Fear of Disease
நோய் பற்றிய (அதீத மற்றும் பொருத்தமில்லாத) பயம்!!
BY Dr. A.I.A.ZIYAD, MBBS, MD – Health Informatics
Nosophobia என்பது ஒரு குறிப்பிட்ட நோய் தன்னிடம் உள்ளதோ என அதீத மற்றும் பொருத்தமில்லாத பயம்.
nosos’- disease and phobos – fear in Greek
இது பல்நெடுங்காலமாக “மருத்துவ மாணவர்களின் நோய்” Medical student syndrome என்றும் குறிப்பிடப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பல்வேறு நோய்களைப் பற்றிய தகவல்களால் சூழப்பட்ட மருத்துவ மாணவர்களை பெரும்பாலும் பாதிக்கும் என்ற முந்தைய அனுமானங்களிலிருந்து இந்த பெயர் உருவாகிறது. (ஆதாரம் 01) ஆனால் சமீப காலங்களில் மேட்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இது பொதுமக்களையும் பாதிப்பதை தெளிவாக காட்டுகிறது. (ஆதாரம் 02)
உங்கள் சமூகத்தில் கடுமையான சுகாதார நிலைமைகள் பரவும்போது சில கவலைகளை உணருவது பொதுவானது. ஆனால் நோசோபோபியா உள்ளவர்களுக்கு, இந்த கவலை அதிகமாக இருக்கும், இது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும்.
சமீப காலமாக , nosophobia ஆனது cyberchondria என்றும் அழைக்கப்படுகிறது. இணைய தளங்களில் (“cyberspace”) பகிரப்படும் நோய் பற்றிய செய்திகளை அடிக்கடி வாசிக்கும்போது இந்த மனநிலை உருவாகிறது. (ஆதாரம் 03)
Nosophobia க்கான பிரதான காரணிகள்:
நோய் மற்றும் நோய்களால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய அடிக்கடி செய்திகளை கேட்டல், இணைய வழியாக அவ்வாறான செய்திகளை அடிக்கடி படித்தல்.
கடந்த காலங்களில் அதிர்ச்சிகரமான உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்திருத்தல்
கடுமையான நோய்களால் / தீராத நோய்களால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பாதிக்கப்பட்திருத்தல். அவர்கள் பற்றி அடிக்கடி கேள்விப்படல்.
அடிக்கடி உடல் உபாதைகள், காரணமின்றி உடல் வலி (somatization disorder) என்று வைத்தியரை அடிக்கடி நாடுபவர்கள். (ஆதாரம் 04)
COVID-19 தொற்றுநோய் போன்ற பெரிய உலகளாவிய நோய் (Pandamic) தனிநபர்களில் நோசோபோபியாவைத் தூண்டக்கூடும்.
நோய் பயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் அறிகுறிகள்:
தலை சுற்றல் – dizziness
குமட்டல் – nausea
அதிக நாடித்துடிப்பு – increased pulse
வியர்வை – sweating
வேகமான சுவாசம் – rapid breathing
தூக்கமின்மை – trouble sleeping
இவ்வாறான பாதிப்பை உடையவர்கள் நோயைப் பற்றி மேலும் எதுவும் தெரிந்து கொள்ள பயப்படுவார்கள். செய்திகளிலோ அல்லது மற்றவர்களிடமோ இதைக் கேட்பது மன உளைச்சலைத் தூண்டும். அல்லது, நீங்கள் பொது போக்குவரத்து அல்லது மளிகைக் கடைகள் போன்ற இடங்களைத் தவிர்க்கலாம்.
மறுபுறம், நோசோபோபியா கொண்ட சிலர் சில நோய்களைப் பற்றி தங்களால் இயன்றவரை கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் தங்களது நிலையைப் பற்றி அறிய மணிநேரம் செலவிடலாம் அல்லது outbreak பற்றிய செய்திகளை அதிக ஆர்வத்தோடு தேடலாம்.
Nosophobia எனும் நோய் பற்றிய பயத்தில் இருந்து எவ்வாறு மீளலாம்:
01, Cognitive behavioral therapy உளவள பயிட்சி மற்றும் ஆலோசனை பெறல்:
இதில் தனது மனநிலை பற்றி சுய பரிசோதனை செய்துகொள்ளல், கவனத்தை திசை திருப்பும் செயற்பாடுகளில் ஈடுபடல். தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளல், தேவை ஏற்படில் உளவள ஆலோசகரின் அறிவுரைகளை பெற்றுக்கொள்ளல். (ஆதாரம் 05)
02. Meditation (தியானம்) – தொழுகை, குர்ஆன் ஓதுதல், Yoga போன்றவை.
03. medications: நோய் பயம் control பண்ண முடியாத அளவு இருந்தால் வைத்திய ஆலோசனையுடன் beta blockers or benzodiazepines போன்ற மருந்துகளை குறுகிய காலத்துக்கு (short-term or occasional use) பெற்றுக்கொள்ளலாம்.
ஆதாரபூர்வமான, உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருக்க.
Sources:
01, Prevalence of hypochondriac symptoms among health science students in China: A systematic review and meta-analysis
https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0222663
02. Medical student syndrome: fact or fiction? A cross-sectional study
https://journals.sagepub.com/doi/10.1177/2042533313512480
03. Cyberchondriacs Just Know They Must Be Sick
https://www.scientificamerican.com/article/cyberchondriacs-just-know-they-must-be-sick/
04. Anxiety and psychosomatic symptoms in palliative care: from neuro-psychobiological response to stress, to symptoms’ management with clinical hypnosis and meditative states
apm.amegroups.com/article/view/16016/18514
05. Specific Phobias – Treatment
https://adaa.org/understanding-anxiety/specific-phobias/treatment
06. The effectiveness of listening to the Holy Quran to improve mental disorders and psychological wellbeing: Systematic review and meta-analysis
https://www.researchsquare.com/article/rs-44376/v1.pdf
2,117 total views, 1 views today