By Dr Ziyad AIA

உண்மை வரலாற்றுக் கதை:-

கி. பி. 1021 ( நபிகள் நாயகம் (ஸல்) மரணித்து 400 ஆண்டுகளின் பின்) இங்கிலாந்தில் இடம்பெற்ற சம்பவம்.

Rob Cole என்பவன் தன் தாய் தங்கையுடன் இங்கிலாந்து London இல் வசித்து வருகிறான். திடீரென தனது தாயின் வலது பக்க வயிற்றின் அடிப்பகுதியில் காய்ச்சலுடன் கூடிய வலி ஏற்படுகிறது. அக்காலத்தில் இதனை Side sickness என்று அழைத்தனர். (தற்காலத்தில் இந்நோய் நிலைமையை Appendicitis எனப்படுகிறது.)

அக்காலத்தில் Side sickness (Appendicitis) என்பது ஒரு குணப்படுத்த முடியாத நோய். அது இறைவனின் சாபம். அதற்கு எந்த நிவாரணமும் இல்லை அப்படி நிவாரணம் செய்ய முயற்சிப்பது இறைவனின் நியதிக்கு எதிராக போராடுவதாகவும் என கிறிஸ்தவ பாதிரிமார்கள் உபதேசித்து வந்தனர்.

இது மத்திய ஐரோப்பிய இருண்ட யுகம். வைத்தியர்களோ வைத்தியசாலைகளோ இல்லாத காலகட்டம். Barbers எனப்படும் குறைந்த மருத்துவ அறிவு கொண்டவர்களையே மருத்துவ தேவைக்கு மக்கள் நம்பி இருந்தனர். அதே காலகட்டத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யம் காணப்பட்ட இடங்களில் மருத்துவ அறிவு வியாபித்து காணப்பட்டது.

Rob Cole இன் தாயின் உடல்நிலை மோசமாக அவள் மயக்கம் அடைந்தாள்.
அங்கே ஓரளவுக்கு மருத்துவம் செய்து கொண்டிருந்த Barber என அழைக்கப்படும் வைத்தியரை அழைத்து வந்து தனது தாய்க்கு வைத்தியம் செய்யுமாறு மன்றாடினான். Barbar ஓ தனக்கு இதற்கு வைத்தியம் தெரியாது என்றும் இது இறைவனின் சாபம் அப்படியே விட்டுவிடு என்று கூறினார்.

தனது கண் முன்னாலேயே தாய் நோயினால் இறந்தாள். இது Rob Cole இன் மனதில் ஆறாத வடுவானது. இதனால் தனக்கு மருத்துவம் கற்க வேண்டும் என்ற ஆசை மேலோங்க Barber ரிடமே சென்று சீடனாக இணைந்துகொண்டான்.

அங்கு பல நோயாளிகளுக்கு கொடூரமான முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கால் கை விரல்களில் சீள், சிரங்குகளுடன் குணப்படுத்த முடியாத நிலையில் வருபவர்களை வலியுடன் துடிதுடிக்க பழுதடைந்த பகுதிகள் வெட்டி நீக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டனர்.

நாட்கள் உருண்டோடின. Rob Cole பெரியவன் ஆகிவிட்டான். தனது குரு Barber க்கும் வயதாகியது. Barber கண்புரை எனும் Cateract நோய் வந்து பார்வை இழக்க ஆரம்பித்தார்.

இந்த நேரத்தில் தான் இந்த கண்புரை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் முஸ்லிம்கள் ஒரு பகுதியில் இருப்பதாக Rob Cole அறிந்து கொள்கிறான். எனவே தனது குருவை அங்கே அழைத்துச் செல்ல அவரிடம் அனுமதி கேட்கிறான்.
அதற்கு அவர் நான் அவர்களிடம் வரமாட்டேன். அவர்கள் சிறுவர்களுக்கு விருத்தசேதனம் (கத்னா) செய்து ஆண் குறியை அறுப்பவர்கள். எனக்கு அவர்களை பிடிக்காது என்கிறார்.
இருப்பினும் Rob Cole இன் பிடிவாதத்தால் அங்கு செல்கிறார்.

அங்குதான் அவனுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. எந்தவிதமான வலியும் இல்லாமல் தனது குருநாதருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரது தெளிவான பார்வை மீள கிடைக்கிறது.
Bob Cole மகிழ்ச்சியில் மிதக்கிறான். அவன் அந்த முஸ்லிம் வைத்தியரிடம் இந்த வைத்தியக் கலையை நீங்கள் எங்கு கற்றீர்கள். இதுபோல் எனது தாய்க்கு வந்த Side sickness (Appendicitis) ஐ குணப்படுத்தியிருக்க முடியுமா? என்று கேட்கிறான்.

அதற்கு அந்த முஸ்லீம் வைத்தியர் நான் இக்கலையை உலகின் தலைசிறந்த வைத்தியர் இப்னு சீனா (ibn Sena or Avicenna) விடம் இருந்து கற்றுக்கொண்டேன் அவர் Isfahan எனும் நாட்டில் (தற்போதைய ஈரானின் ஒரு பகுதி) வசித்து வருகிறார். அவரது “மதரஸா” என்பதே உலகில் உள்ள ஒரே மருத்துவம் கற்பிகும் பல்கலைகழகம் என்று கூறுகிறார்.
உடனே Rob Cole அவரை சென்று பார்க்க முடியுமா என கேட்கிறான். அதற்கு அந்த முஸ்லிம் வைத்தியர் சிரித்துக்கொண்டே நீ அங்கு செல்ல குறைந்தது ஒரு வருடமாவது தேவைப்படும். மேலும் நீ எகிப்தை தாண்ட முடியாது. நீ எகிப்தை அடைந்தவுடன் உன்னை கொன்று விடுவார்கள். ஏனென்றால் அந்த இடத்தில் இருந்து தான் அரேபிய சாம்ராஜ்யம் ஆரம்பிக்கிறது. அதற்கு அப்பால் யூதர்களும் முஸ்லிம்களும் மட்டுமே செல்ல முடியும் உன் போன்ற கிறிஸ்தவர்களை கண்டால் கொன்று விடுவார்கள் என்று கூறுகிறார்.

இருந்தும் Rob Cole தனது ஆர்வமிகுதியால் பலதரப்பட்ட சவால்கள், சோதனைகளை வெற்றிகரமாக தாண்டி Isfahan ஐ அடைந்து இப்னு சீனாவிடம் மதரஸாவில் சீடனாக இணைகிறான்.

அவரின் மதரசாவில் கணிதவியல், வானவியல், தத்துவவியல், மருத்துவம் உட்பட பல கலைகளையும் கற்கிறான்.

அதேநேரம் அக்கிராமத்தில் கொள்ளை நோய் (Plaque) பரவுகிறது. மனிதர்கள் கொத்து கொத்தாக இறந்து எரிக்கப்படுகிறார்கள். கொள்ளை நோய் பரவிய கிராமமே தடுப்புச் சுவரால் தடுக்கப்படுகிறது. மருத்துவ குழுவும் அதில் அகப்படுகிறது.
இப்னு சீனாவும் அவரது மருத்துவக் குழுவும் கொள்ளைநோய் எலியினால் பரவுவதை கண்டுபிடித்து அவற்றை அழிப்பதன் மூலம் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

ஆனால் இவர்களுக்கு எதிராக செயற்பட்டு வந்த மதகுருமார் இப்னு சீனா குழுவினால்தான் கொள்ளைநோய் பரப்பப்பட்டது எனும் குற்றச்சாட்டை முன்வைத்து இருவருக்கும் மரண தண்டனை விதித்தனர்.

இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா? Rob Cole தான் தேடிய Side Sickness எனும் Appendicitis க்கு வைத்தியத்தை கண்டுபிடித்தானா? என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் 2013 இல் வெளியான The Physician எனும் திரைப்படம்.

1995 இல் Noah Gorden இன் உண்மை சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட நாவலை தழுவி 2013 இல் Phillip Stozl இனால் இயக்கப்பட்ட திரைப்படமே The Physician .

சினிமா என்ற ரீதியில் Heroism, சில மிகைப்படுத்தல்கள் இடம் பெற்று இருந்தாலும் இஸ்லாமியர்கள் மருத்துவத்துறைக்கு ஆற்றிய சேவையை நம் கண் முன்னே கொண்டு வரும் ஒரு படைப்பு. யூத, கிறிஸ்தவர்கள் அவர்களாகவே வழங்கும் ஒப்புதல் வாக்குமூலம் தான் The Physician (2013) எனும் இந்த திரைப்படம்.

அதில் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் ஒரு சம்பவம்:- இப்னு சீனா இறக்கும் தறுவாயில் தனது மருத்துவப் புத்தகங்களை Bob Cole இடம்  (கிறிஸ்தவர்களிடம்) வழங்கி “எனது கண்டுபிடிப்புகளுடன் உங்களது உடற்கூற்று படங்களையும் சேர்த்து இதனை உலகறியச் செய்யுங்கள்” என்கிறார். அந்த முழு வரலாறும் இந்த ஒரு வசனத்திலேயே அடங்கிவிடுகிறது.

மருத்துவ துறையில் உள்ள மற்றும் அதில் ஆர்வமுள்ள அனைவரும் (18+) பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் .

இஸ்லாமிய சாம்ராஜ்ய வீழ்ச்சியுடன் முஸ்லிம்களின் அறிவியல் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இஸ்லாமியர்கள் கொண்டுவந்த நவீன வைத்திய முறை இப்போது யூத கிறிஸ்தவர்கள் உடையதாக மாற்றப்பட்டு விட்டது. இஸ்லாமிய வைத்தியம் என்பது வெறும் தகடு, தாயத்துகளாக சித்தரிக்கப்படுகிறது.

இப்னு சீனா எழுதிய மருத்துவ நூல்கள் 16 ஆம் நூற்றாண்டு வரை நவீன மருத்துவ பாடப்புத்தகங்களாக உலகளாவியரீதியில் பாவிக்கப்பட்டன.

யார் இந்த இப்னு சீனா? மருத்துவ துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்ன?

 

 

இஸ்லாமியர்களிடம் இருந்து இருட்டடிப்பு செய்யப்படும் நவீன சத்திர சிகிச்சை உரிமமும் உபகரணங்களும்

நவீன சத்திர சிகிச்சை உபகரணங்களின் கண்டுபிடிப்பாளர், நவீன சத்திர சிகிச்சை முறைமைகளின் ஆரம்ப கர்த்தா என அறியப்பட்ட நவீன சத்திர சிகிச்சையின் தந்தை Al-Zahravi or Abulcasis (A. D. 936-1013) பற்றி எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

 

இத்திரைப்படத்தை English Subtitle லுடன் பார்வையிட கீழே உள்ள Youtube Link க்கு சென்று CC என்பதை Click செய்வதன் மூலம் பார்வை இடலாம்.


Settings சென்று  தமிழ் மொழி மூலமும் Subtitle பார்க்கும் வசதி இருந்தாலும் சரியான மொழிபெயர்ப்புகள் சில இடங்களில் வரவில்லை.

இதோ அத்திரைப்படம்:-

 

10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் Al-Zahrawi கண்டுபிடித்த சத்திர சிகிட்சை முறைகள் , சத்திர சிகிட்சை உபகரணங்கள் , மருந்துகள் பற்றிய தெளிவான வரலாறுகள் உண்டு.
எல்லாவற்றையும் யூத கிறிஸ்தவர்களுக்கு தாரைவார்த்துவிட்டு மடமையில் மூழ்கிக் கிடக்கிறோம்.

4,507 total views, 2 views today