நச்சு கலந்த தேங்காய் எண்ணெய் சந்தைக்கு வந்த, சந்திக்கு வராத கதைகள்!!
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவை? Postmortem Report!
தமிழில்: Dr Ziyad Aia
https://bit.ly/3m7PYg7
புற்றுநோயை உண்டாக்கும் அஃப்லாடொக்சின் (aflatoxin) அடங்கிய 13 கச்சா தேங்காய் எண்ணெய்கள் (crude coconut oil), கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கண்டறியப்பட்டபோது கணிசமான சர்ச்சையை ஏற்படுத்தியது, சுங்க சட்டத்திற்கு முரணாக சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இலங்கை சுங்க திணைக்களத்துக்கு (SL Customs) பகுப்பாய்வு மாதிரி அறிக்கைகள் இலங்கை தர நிர்ணய நிறுவனம் (Sri Lanka Standards Institution (SLSI)I) மற்றும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுப்பாட்டு நிர்வாக பிரிவு (Food Control Administration Unit (FCAU)) ஆகியவற்றின் அறிக்கை வழங்கப்படும் வரை இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் எந்த மாற்றமும் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய் மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல என்று கூறி சுங்க பகுப்பாய்வு மாதிரி அறிக்கைகளை FCAU அனுப்பிய போதிலும் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
FCAU இன் தலைவர் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டாலும், அதில் உள்ள அஃப்லாடாக்சின் அழிக்கப்படாது என்று வலியுறுத்தினார்.
மாதிரி அறிக்கைகளை வழங்க FCAU க்கு ஒரு வாரத்திற்கு மேல் ஆகும், அந்த நேரத்தில்தான் தேங்காய் எண்ணெயை ஒரு சுத்திகரிப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
FCAU கண்டுபிடிப்புகளின்படி, இறக்குமதியாளரால் கொண்டு வரப்பட்ட கச்சா தேங்காய் எண்ணெய் அடங்கிய 22 கொள்கலன்களிலும் அஃப்லாடொக்சின் இருந்துள்ளது. இருப்பினும் 22 கொள்கலன்களில் 13 ல் இருந்து தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கொள்கலன் 18 மெட்ரிக் டன் கச்சா தேங்காய் எண்ணெயை கொள்ளும். Sunday Times ன் கேள்விகளுக்கு பதிலளித்த சுங்க பணிப்பாளர் Major-General (ret.) Vijitha Ravipriya, தான் விசாரணை நடத்துவதாகக் கூறினார். “எந்தவொரு இறக்குமதியாளரும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தால், அந்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
மார்ச் 24 அன்று, SLSI வழங்கிய அனுமதியின்படி சர்ச்சைக்குரிய எண்ணெய் கொள்கலன்கள் இறக்குமதியாளர்களின் தனியார் கிடங்குகளுக்கு (Ware House) விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“ஆனால், மார்ச் 4 ம் தேதி இரண்டு தொழிலதிபர்கள் 183,055 கிலோகிராம் தேங்காய் எண்ணெயை அஃப்லாடாக்சின் என்ற புற்றுநோயை உருவாக்கும் நச்சு கலந்து இறக்குமதி செய்துள்ளதை நாங்கள் அறிந்தோம். இந்த எண்ணெய் Container களை மீண்டும் ஏற்றுமதி செய்ய இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே நாளில் எழுத்துப்பூர்வமாக அறிவித்தேன், ”என்று அவர் கூறினார்.
SLSI Director-General Dr. Siddhika Senaratne வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக அறிக்கைகளுக்கு மறுப்பு தெரிவித்து, SLSI அல்லது வேறு எந்த அதிகாரசபையோ நுகர்வோருக்கு அந்த எண்ணெய்களை விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
“நுகர்வோர் விவகார அதிகாரசபையும் (Consumer Affairs Authority) இந்த இறக்குமதிகள் குறித்து கடுமையான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் 4 இறக்குமதியாளர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
Ali Brothers Pvt Ltd,
Sena Mills Refineries,
Edirisinghe Edible Oils
Katana Refineries
Sunday Times இந்த நிறுவனங்களைத் தொடர்பு கொண்டபோதும் பின்னர் பதிலளிப்பதாக கூறப்பட்டது.
தேங்காய் எண்ணெயின் கொள்கலன்களில் அஃப்லாடாக்சின் இருப்பதை அதிகாரிகள் கடந்த டிசம்பரிலிருந்து அறிந்திருப்பதாக FCAU பணிப்பாளர் டாக்டர் திலக் சிறிவர்தேன தெரிவித்தார்.
சாதாரண நடைமுறை என்னவென்றால், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் துறைமுகத்திற்கு வந்தவுடன் SLSI மற்றும் FCAU இந்த பொருட்களின் மாதிரிகளைப் பெற்று பின்னர் தரசான்றிதழ்களை வழங்குகின்றன.
பொதுவாக, இறக்குமதியாளர்களின் தனியார் கிடங்குகளுக்கு எண்ணெய் Container கள் விடுவிக்கப்படும்போது, சுங்கம் இறக்குமதியாளர்களிடமிருந்து bank bond ஐ பெறுகிறது.
அத்தகைய வங்கி பத்திரம் கிடைத்தவுடன், இறக்குமதியாளர்களின் கிடங்குகளில் பொருட்களின் கணக்கை வைத்திருக்க சுங்கம் ஒரு வலுவான பொறுப்பைக் கொண்டுள்ளது என்று சுங்க உள் வட்டாரங்கள் தெரிவித்தன. (இது எந்த அளவு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதே கேள்வி)
“நாங்கள் ஒரு bank bond ஐப் பெறுகிறோம், பின்னர் இறக்குமதியாளர்கள் இந்த பொருட்கள் தொடர்பாக எந்த மாற்றங்களையும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை அடிப்படையில், தனியார் கிடங்குகளுக்கு பொருட்களை வெளியிடுகிறோம்” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த சுங்க அதிகாரி ஒருவர் கூறினார்.
“Customs என்ற அடிப்படையில், இந்த இறக்குமதியாளர்கள் இந்த பொருட்களுக்கு சட்டவிரோதமாக ஏதாவது செய்கிறார்களா என்பதில் நாங்கள் வலுவான கவனம் செலுத்த வேண்டும். “இது தொடர்பான சுங்க அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றவில்லை. அதனால்தான் இறக்குமதியாளர்களுக்கு இந்த எண்ணெய் Container களை சுத்திகரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, ”என்று அந்த அதிகாரி கூறினார்.
சுங்க இயக்குநர் ஜெனரல் கூறுகையில், எண்ணெய் சட்டவிரோதமாக சுத்திகரிக்கப்பட்டிருந்தால், இறக்குமதியாளர்களின் Bank Bond களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
Director (Consumer Affairs and Information) of the Consumer Services Authority ) Asela Bandara தெரிவிக்கையில் கொள்கலன்களிலிருந்து வரும் புற்றுநோய்க்கான எண்ணெய் இதுவரை சந்தைக்கு வெளியிடப்படவில்லை” என்றார்.
“கடந்த சில நாட்களில், சந்தேகத்துக்குரிய இறக்குமதியாளர்களின் தனியார் கிடங்குகளை (private warehouses) நாங்கள் ஆய்வு செய்தோம். தேங்காய் எண்ணெய் Container கள் அங்கேயே இருப்பதை நாங்கள் கவனித்தோம். எனவே, மக்கள் அச்சமடைய எந்த காரணமும் இல்லை, ”என்றார்.
மூன்று இறக்குமதியாளர்கள் மட்டுமே நாட்டிற்கு கொண்டு வந்த எண்ணெய் Container களை மீண்டும் ஏற்றுமதி செய்ய ஒப்புக் கொண்டதாக FCAU வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு இறக்குமதியாளர் தனது எண்ணெய் Container களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான உத்தரவை நிராகரித்தார், அவர் FCAU இன் தரக் கட்டுப்பாட்டு அறிக்கைகளை ஏற்க முடியாது என்றும் மற்றொரு அறிக்கையை கோருகிறார் என்றும் கூறினார். இந்த இறக்குமதியாளர் எண்ணெய் சுத்திகரிக்கப்படும்போது அஃப்லாடாக்சின் அழிக்கப்படுவதாகவும் கூறியதாகக் கூறப்படுகிறது.
இது தவறானது, தேங்காய் எண்ணெயில் உள்ள அஃப்லாடாக்சின் சுத்திகரிப்பு மூலம் (Refining) அகற்ற முடியாது என்று டாக்டர் சிரிவர்தன கூறினார். அஃப்லாடாக்சின் கொண்ட உணவுகளை அழிப்பதற்கு வேறு வழியில்லை என்றும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் (President of the Public Health Inspectors’ Union) உபுல் ரோஹான கருத்து தெரிவிக்கையில் PHI மார், சாதாரண நடைமுறையைப் போலவே, நாடு முழுவதும் இருந்து தேங்காய் எண்ணெயின் மாதிரிகளைப் பெறுகிறார்கள், தற்போதைய சேகரிப்பு நடந்து வருகிறது. “நாங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், நாங்கள் சேகரிக்கும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளை அரசாங்க ஆய்வாளருக்கு (Government Analyst) அனுப்புவது மட்டுமே. அவர்களின் அறிக்கை ஒரு மாதத்திற்குள் பெறப்பட உள்ளது, ”என்றார்.
இலஞ்சம் , ஊழல் புரையோடிக்கிடக்கும் ஒரு நாட்டில் இறக்குமதியாளரை இறக்குமதி செய்த பொருளின் தர சான்றிதழ் கிடைக்கும்வரை அவரது குடோனிலேயே அதனை சேமித்து வைக்கசொல்வதை என்னவென்பது.
நன்றி: Sunday Times (28-03-2021)
தமிழில்: Lankahealthtamil.
944 total views, 1 views today