தொற்றுநோய்கள் பற்றிய முதலாவது விஞ்ஞானபூர்வமான ஆய்வுக்கட்டுரையை எழுதியவர் Muhammad ibn Zakariyya al-Razi ( محمّد زکرياى رازى Rhazes or Rasis) என்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ⁉️
By: Dr Ziyad Aia

Infectious disease Al Razi Lanka Health tamil Dr Ziyad Aia

கி.பி 854–925 காலப்பகுதியில் வாழ்ந்த இவர் மேற்கத்தியர்களால் Rhazes or Rasis என அறியப்படுகிறார். இவரது தொற்றுநோய்கள் சம்பந்தமான மகத்தான சேவையை நினைவுகூர்ந்து

May 1970 இல் வெளியான WHO வின் சஞ்சிகையில் (The Bulletin of the World Health Organization) பின்வரும் வாசகம் இடம்பெற்றுள்ளது.

💓 “His writings on smallpox and measles show originality and accuracy, and his essay on infectious diseases was the first scientific treatise on the subject”. – (The Bulletin of the World Health Organization, May 1970) 💓

💞 “பெரியம்மை மற்றும் தட்டம்மை நோயைப் பற்றிய அவரது (ஸகரிய்யா அல் ராஸீ) எழுத்துக்கள் அசல் தன்மையையும், துல்லியத்தையும் காட்டுகின்றன, மேலும் தொற்று நோய்கள் குறித்த அவரது கட்டுரை இந்த விஷயத்தில் பதிவான முதல் அறிவியல் கட்டுரையாகும்”. (ஆதாரம் 01 & 02) 💞

பாரசீகத்தில் பிறந்த இவர் மருத்துவர், வேதியியலாளர், தத்துவவாதி, கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் என பன்முகப்பட்ட திறமைகளை கொண்டிருந்தார். (A Persian polymath, physician, chemist, philosopher and a theoretician in astronomy and grammar)

💞 மருத்துவ துறை சம்பந்தமான Al-Razi இன் சேவைகள், கண்டுபிடிப்புகளை சுருங்க கூறின்:


 Smallpox vs. measles க்கு இடையிலான வேறுபாட்டை கண்டறிய அவற்றின் நோய் உருவாக்கம், அவற்றின் ஆரம்ப அறிகுறிகள், மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி விஞ்ஞானபூர்வமாக விளக்கியிருந்தார். இது 1911 இல் வெளியான Encyclopædia Britannica விலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. (ஆதாரம் 01)

 small pox பரவுவதை தவிர்க்க நோய்த்தொற்று உள்ளான ஒருவரில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்பதை விஞ்ஞான பூர்வமாக விளக்கி இது மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவுவதையும் விளக்கினார்.

 அதேபோல் Small pox வந்த ஒருவருக்கு இரண்டாம் முறை அது வருவதில்லை என்பதற்கு மனித உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியே காரணம் என விளக்கினார். இதுவே “பெற்றுக்கொண்ட நீர்ப்பீடனம்” பற்றிய முதலாவது கோட்பாடாக கருதப்படுகிறது. (the first theory of acquired immunity.) (ஆதாரம் 02 – Reference 17)

 இவர் மதுசாரத்தை (Alchohol) முதன்முதலாக மருத்துவ பயன்பாட்டுக்காக பிரித்தெடுத்து காட்டினார். (ஆதாரம் 01 & 02)

 இவரே Salfuric acid ஐ கண்டுபிடித்தார். இதுவே நவீன இரசாயனவியலின் “work horse” என அழைக்கப்படுகிறது. (ஆதாரம் 02) இவை பற்றி அவரது நூல்களான Kitab al-Asrar (The Book of Secrets) and Sirr al- Asrar (The Secret of Secrets) குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஒளிக்கு கண்மணியின் சுருங்கி விரிதல் செயன்முறையை விளங்கியதோடு கண்புரை எனும் Cataract க்கு சத்திரசிகிச்சை செய்வது பற்றிய குறிப்பையும் வெளியிட்டார். (ஆதாரம் 02; Reference 18 & 19)

 பாலியல் மூலம் பரவும் நோயாகிய மேக நோய் எனும் Gonorhoea பற்றி முதலில் குறிப்பிட்ட மருத்துவராக கருதப்படுகிறார். (ஆதாரம் 02; Reference 20)

 allergic rhinitis எனும் அடிக்கடி தும்மல் , தடிமல் ஏற்படும் நோய் நிலைமை பற்றி விபரித்துள்ளார்.

 சிறுவர்களை தாக்கும் வலிப்பு நோய் பற்றி விபரித்ததோடு சிறுவர்களில் ஏட்படும் spina bifida எனும் முண்ணாண் பிரச்சினை, hydrocephalus எனும் தலை பெருத்த குழந்தைகள், microcephaly எனும் தலை சிறுத்த குழந்தைகள் பிறப்பது பரம்பரை மற்றும் பிற காரணிகளால் என்பதை விளங்கியதோடு அவை குணப்படுத்த முடியாதவை என்றும் விபரித்தார். (இன்றுவரை அவற்றை குணப்படுத்தும் மருத்துவம் வளரவில்லை.)

 “medical ethics” எனும் மருத்துவ முறைமையின் காட்டுக்கோப்புகள் பற்றி விபரித்துள்ளார்.

 நுண்ணுயிரியல் பற்றிய விளக்கம் இல்லாத அக்காலத்தில் ஈரானில் உள்ள பக்தாத் நகரில் வைத்தியசாலை ஒன்றை அமைக்க அவரிடம் கோரியபோது அவர் கைக்கொண்ட நடவடிக்கை இன்றும் பிரம்மிக்க வைக்கிறது.

பக்தாத் நகரில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில் புதிதாக எடுத்த இறைச்சியை கட்டி தொங்கவைத்தார்.

சில நாட்களின் பின்னால் எந்த இறைச்சி குறைந்த அளவு பழுதடைந்துள்ளதோ அந்த இடமே வைத்தியசாலை அமைக்க பொருத்தமானது என தெரிவுசெய்தார்.

 Kitab al-Hawi fi al-Tibb எனும் நூலில் மருந்துகள் (Pharmacology) பற்றி விபரித்துள்ளார். இதனால் இவரது பிறந்த தினமாகிய August 27 Pharmacology Day ஆக ஈரானில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

💞 விரிவஞ்சி Muhammad ibn Zakariyya al-Razi இன் வரலாறு, நூல்கள், மேலும் பல சாதனைகள் பற்றி குறிப்பிடவில்லை. ஆதாரம் 01 & 02 இல் pdf வடிவில் உள்ள ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தால் மேலதிக விபரங்களை பெறலாம். இவை பிரபல மருத்துவ ஆய்வுகள் பதிவாகும் PubMed இல் பிரசுரிக்கப்பட்டவை.

 Al-Razi இன் நூல்கள் மற்றும் இப்னு சீனாவின் Avicenna’s Canon of Medicine என்பவை பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ பல்கலைக்கழகங்களில் பாடப்புத்தகங்களாக இருந்தவை.

 Al-Razi இன் மருத்துவ சேவையை பாராட்டி பல நாடுகள் முத்திரை வெளியிட்டுள்ளன. தற்போதும் இவரது உருவப்படம் பாரிஸில் உள்ள School of Medicine லும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கீழுள்ள படம் Vienna வில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள உருவச்சிலையாகும்.

தொடரும்
By Dr Ziyad Aia

ஆதாரம் 01
https://drive.google.com/file/d/1o4LvRWPr-RmtI9HZZfRCgN9W45_jGbzi/view?usp=sharing

ஆதாரம் 02
https://drive.google.com/file/d/1W7NjdZ77UBOIy8bNXIz1Qu6tceH2Wqqr/view?usp=sharing

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

796 total views, 2 views today