தீவிரவாதிகள் மனித வெடிகுண்டாய் மாற போதைப் பொருளும் காரணமா?
Jihadist Drug என்றால் என்ன?    By Dr.A.I.A.Ziyad

Arab news இணையத்தில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு..
தீவிரவாத இயக்கங்கள் போதைப்பொருள் மற்றும், மன பிரம்மையை உருவாக்கும் (Hallucinogens) களுக்கு அடிமையாக்குவதன் மூலம் மனித வெடிக்குண்டாக மாற்றப்பகிடுகின்றனர்.

அத்தகைய மருந்துகள் அவர்களை சிந்தனைத் திறனை இழக்கச் செய்து Alert ஆகவும் இருக்க செய்கிறது.
Saudi Pharmaceutical Society Pharmacist Mr Sobhi Al-Haddad இன் கருத்துப்படி தற்கொலையாளிகள் stimulant வகை மருந்துகள், psychotropic மற்றும் போதைப் பொருட்களை உபயோகிக்கின்றனர்.

போதைப் பொருட் களாக Amphetamine Group ஐ சேர்ந்த Congo, Bazooka, Captogon மற்றும் Abu Malaf போன்ற வர்த்தகப் பெயர்களில் அழைக்கப்படும் போதை மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவை மயக்கம் , சோர்வு போன்றவற்றை ஏட்படுத்தியபோதும் மன மாற்றம் மற்றும் மன பிரம்மையை (Halucinations) ஏட்படுத்தக்கூடியவை.

King Saud University’s Faculty of Pharmacology பேராசிரியர் Hisham Abu Oden கருத்து தெரிவிக்கையில் “Captagon” எனும் வர்த்தக நாமம் கொண்ட போதை மாத்திரை தீவிரவாதிகள் மத்தியில் பொதுவாக பாவனையில் உள்ள ஒன்று.

இதனை பயன்படுத்துவோருக்கு வலி, உணர்ச்சிகள், மரண பயம் என்பன அற்றுப்போகிறது. இதனால் இது “Jihadist’s drug” என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது.

இதனை உபயோகிப்போர் மன்னிக்கவே தெரியாத மரண இயந்திரங்களாக மாறிவிடுகின்றனர். Paris attacks இன் போதும் தற்கொலைதாரிகள் இதனை உபயோகிப்பதற்கு சான்றுகள் உண்டு.

சமீபத்தில் நிகழ்ந்த மும்பை தீவிரவாத தாக்குதலின் போதும் கொக்கைன் போன்ற போதைப் பொருட்கள் 60 மணி நேரத்துக்கு மேல் Alert ஆக இருக்க பயன்பட்டது.

Dr Abdul gafoor Turkistani (Researcher – King Saud University) கருத்து தெரிவிக்கையில் Amphetamine மற்றும் அதன் வழிவந்த போதை மருந்துகள் தீவிரவாதிகளால் தட்கொலைதாரிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களை அடிமையாக்கி சிந்தனா சக்தியை இழக்க செய்து தமது கட்டளைக்கு அடிபணியவைக்கிறது.

BBC யின் செய்திப்படி Opioid உட்பட Tramadol போன்ற போதை மாத்திரைகள் Boko Haram , Al-Qaeda பாவித்து இளம் சிறார்களை மனித வெடிக்குண்டாக மாற்றுகிறார்கள்.

Newyork Post இன் செய்திப்படி ISIS பயங்கரவாதிவகள் Captagon (Fenethylline) எனும் போதை மாத்திரையை தைரியமூட்டும் “Chemical Courage” ஆக பயன்படுத்துகின்றனர். Captagon நீண்ட நேரம் Alert ஆக இருக்க உதவும்.
Lebonan ஐ சேர்ந்த Phychiatrist Ramzi Haddad என்பவர் The Guardian க்கு கருத்து தெரிவிக்கையில் இப்போதைப்பொருள் ஒருவரை Euphoria என்ற நிலைக்கு இட்டுச்சென்று “அதிகம் கதைத்தல், தூக்கமின்மை, பசி இன்மை, அதிக சக்திவாய்ந்தவராக” மாற்றுகிறது.

மத்திய கிழக்கில் இயங்கும் Diyaruna செய்தி நிறுவனத்தின் தகவல்படி ISIS தீவிரவாதிகள் Captagon எனும் போதை மாத்திரையை பாவிப்பது பொதுவானது.
Iraq Sociologist Mohamed Abdul Hassan இப்போதைப்பொருள் மேலே சொன்ன குணங்களை உறுதிப்படுத்தியதோடு அச்சமற்ற ஒரு மனநிலையை இம்மருந்து உருவாக்குகிறது.
அவர் மேலும் தெரிவிக்கையில் இம்மருந்துகளோடு சேர்த்து சுவர்க்கத்து கன்னிகளின் ஆசையும் ஊட்டப்படுவதால் தீவிரவாதிகள் illution or Hallucinations எனும் கற்பனை உலகுக்கு சென்றுவிடுகின்றனர்.

இஸ்லாமிய மார்க்கப்படி போதைப்பொருள் பாவனை தடைசெய்யப்பட்டிருந்தாலும் ISIS தீவிரவாதிகள் நிர்ப்பந்தமான நிலையில் தடைசெய்யப்பட்டதும் ஆகுமாகும் (Necessary overrides what is prohibited)
என்ற மார்க்க தீர்ப்பை வழங்கி அடிமையாக்குகின்றனர் என்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற தட்கொலை தாக்குதல்களில் போதைப்பொருள் பாவனைக்கான உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லாதபோதும்,
ஒரு குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு , மறுபுறம் மழலையின் அழுகுரல் கேட்டுக்கொண்டு மனித வெடிகுண்டாய் மாறுவதாக ஒரு காட்சி சினிமாவில் இடம்பெற்றால் கூட Logic எல்லை மீறிய ஒரு காட்சியாகவே எண்ண தோன்றும்.

Sources:-
01. http://www.arabnews.com/node/952996/saudi-arabia
02. https://nypost.com/2017/08/18/the-drug-that-turns-isis-into-unforgiving-killing-machines/
03. https://www.theguardian.com/world/shortcuts/2014/jan/13/captagon-amphetamine-syria-war-middle-east
04. https://www.bbc.com/news/world-africa-42326253
05. http://diyaruna.com/en_GB/articles/cnmi_di/features/2017/06/15/feature-02

3,239 total views, 1 views today