பொதுவாக மக்கள் மத்தியில் புரைஓடி போய் இருக்கும் ஒரு நம்பிக்கை சீனி/சக்கரை வியாதி என்பது இனிப்பால் வருவது எனவே இனிப்பு சுவை உடைய பழங்களை தவிர்க்க வேண்டும். சில அரைகுறை அறிவு படைத்த வைத்தியர்களும் இதனை தவிர்க்க வேண்டும் என ஆலோசனை வழங்குவது கவலை அளிக்கிறது.

உண்மையில் சீனி/சக்கரை வியாதிக்கு காரணமாவது Glucose அளவு இரத்தத்தில் அதிகரிப்பது. இது நாங்கள் உண்ணும் சீனியில் (Added Sugar) இல் நேரடியாகவும் , அரிசி, கோதுமை போன்ற மாப்பொருள் கலந்த உணவுகளின் சாமிப்பாட்டு இறுதி வடிவமாகவும் ( மாப்பொருள் சமிபாடு அடைந்து இறுதியாக Glucose ஆக மாறும்.) இரத்தத்தில் சேருகிறது.

சாதாரணமாக பழங்களில் காணப்படுபவை Fructose எனும் இனிப்பு பதார்த்தம் ஆகும். இதனால் சீனி நோயாளிகளுக்கு  பாதிப்பு குறைவு . அதேநேரம் பழங்களில் காணப்படும் குளுகோஸ் அளவு ஏனைய உணவுகளோடு பார்க்கும் போது குறைந்த அளவே உள்ளது.

உணவு பொருட்களில் உள்ள குளுக்கோஸ் அளவை Glycemic Index மூலம் அறிந்து கொள்ளலாம். போதுவாக பழங்கள் நாம் உண்ணும் அரிசி , கோதுமைகளை விட குறைந்த Glycemic index கொண்டவை.

சர்க்கரை உயர்த்தல் குறியீடு (Glycemic index) என்பது ஓர் உணவுப்பொருளானது, இரத்த குளுக்கோசு அளவை, உடனடியாக எந்த அளவிற்கு உயர்த்துகிறது என்பதைக் குறிக்கும் ஓர் அளவீடு. சாப்பிட்ட உடனே இரத்த குளுக்கோசு அளவைக் கூட்டும் உணவுப் பொருளுக்கு குறியீட்டு மதிப்பு அதிகமாக இருக்கும். கீழே உள்ள அட்டவணையில் சில உணவுப் பொருட்களின் குறியீட்டு மதிப்புகள் தரப்பட்டுள்ளன.

வகை சர்க்கரை உயர்த்தல் குறியீடு உதாரணம்
குறைவான 55 அல்லது அதற்கும் கீழ் முழு தானியம், பயறு வகைகள், ஃபிரக்டோசு, பெரும்பாலான காய் கனிகள்
நடுத்தர 56–69 முழு கோதுமை, பாஸ்மதி அரிசி, இனிப்பு உருளை, சுக்ரோசு
அதிக 70 மற்றும் மேலே வெள்ளை பிரட், வெள்ளை சாதம், கார்ன் ஃபிளேக், குளுக்கோசு, மால்டோசு

உண்மையில் உணவு வேளைகளுக்கு இடையில் சீனி நோயாளிகள் பழங்களை உண்பது நன்மை பயக்கும்.

பழங்களை சாப்பாட்டுக்கு முன் உண்ண சொல்வதன் காரணம். ( குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு.)
01. பசிக்கு பழங்களை உண்பதால் அவை வயிற்றை நிரப்புவதால் பின்னர் உண்ணும் சோற்றின் அளவு குறையும்.

02. பழங்களை உண்டபின் சோற்றை உண்பதால் பழங்களில் உள்ள நார்ச்சத்து சோற்றை முழுமையாக அகத்துறிஞ்ச விடாமல் தடுத்து உடல் குளுகோஸ் அளவு சடுதியாக அதிகரிப்பதை தடுக்கும்.
( முற்றிலும் தீட்டப்படாத சிவப்பரிசி உண்ண சொல்வதன் தத்துவமும் அதுவே. அதில் உள்ள நார்ச்சத்து சோறு உடனடியாக சமிபாடு அடைவதை தடுத்து இரத்தத்துக்கு சீரான வேகத்தில் குளுகோசை அனுப்புவதுடன் மேலதிகமானது மலமாக வெளியேற்றும். )
Lankahealthtamil.com இணையம் ஆனது வெறுமனே தகவலை மட்டும் குறிப்பிடாது அதற்குரிய ஆதாரங்களையும் முன்வைக்கும்.

01. படத்தில் காட்டப்பட்டுள்ள இலங்கை தொற்றாநோய் பிரிவின் நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு ஆலோசனையில் சாப்பாட்டுக்கு இடையில் பழங்களை சாப்பிட அறிவுறுத்தி உள்ளது.

02. Harvard University ஆல் கணிப்பிட்டு வழங்கப்பட்ட Glycaemic Index.
நாம் வழமையாக உண்ணும் உணவுகளை விட பழங்கள்  குறைவாக அளவு Glycaemic Index கொண்டுள்ளன.

https://www.health.harvard.edu/diseases-and-conditions/glycemic-index-and-glycemic-load-for-100-foods

03. American Diabetic Association சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடுவதை பரிந்துரை செய்கின்றன.

http://www.diabetes.org/food-and-fitness/food/what-can-i-eat/making-healthy-food-choices/fruits.html

 

04. பழங்கள் சாப்பிடுவது தொற்றா நோய்களை குறைக்கும் WHO வின் பரிந்துரை 

http://www.who.int/elena/titles/bbc/fruit_vegetables_ncds/en/

http://www.who.int/mediacentre/factsheets/fs394/en/

http://www.who.int/dietphysicalactivity/fruit/en/

05. Oxford University ஆல் சீனாவில் 0.5 million மக்களில் 7 வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் பழங்கள் சாப்பிடுவது நீரிழிவு அது தொடர்பான நோய்களை குறைக்கும் என கண்டுபிடிக்க பட்டுள்ளது.

https://www.medicalnewstoday.com/articles/316857.php

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/?term=Fresh+fruit+consumption+in+relation+to+incident+diabetes+and+diabetic+vascular+complications%3A+A+7-y+prospective+study+of+0.5+million+Chinese+adults

06. இலங்கையில் உள்ள உணவுகளின் Glycemic Index கீழே link இல்.

http://www.nrc.gov.lk/SAG/

https://www.omicsonline.org/open-access/glycemic-index-of-traditional-foods-in-northern-sri-lanka-2161-1017.1000154.php?aid=38165

 

Take Home Message:-

நாம் நாளாந்தம் உண்ணும் அரிசி , கோதுமையில் பழங்களை விட அதிகளவு Glucose உண்டு. எனவே அவற்றை குறைத்து பகரமாக பழங்களை உண்பது ஆரோக்கியம் அளிக்கும். சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிட கூடாது என்பது ஒரு மூட நம்பிக்கை.

 

இலங்கையின் பிரதான உணவுகளின் Glycaemic Index

Source:- https://www.omicsonline.org/open-access/glycemic-index-of-traditional-foods-in-northern-sri-lanka-2161-1017.1000154.php?aid=38165

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

6,001 total views, 2 views today