சீனாவில் புதிய, நிமோனியா போன்ற வைரஸால் இரண்டாவது நபர் இறந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் Wuhan நகரில் இந்த மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இதற்கிடையில், ஜப்பான் தனது முதல் வைரஸ் நோயாளியை உறுதிப்படுத்தியது. – தாய்லாந்திற்குப் பிறகு சீனாவுக்கு வெளியே இரண்டாவது நாடக ஜப்பான் பதிவாகியுள்ளது.
தற்போது Wuhan Virus என பெயரிடப்பட்டுள்ள இந்த Virus Corona Virus இனத்தை சேர்ந்தது என உறுதியாகியுள்ளது.
இது பொதுவான தடிமல் முதல் ஆபத்தான சார்ஸ் (SARS) வரை நோய்களை ஏற்படுத்தும். இவ்வகையான Corona Virus இதற்கு முன் மனிதனில் அடையாளம் காணப்படவில்லை.

இவ்வைரஸ் Wuhan இல் உள்ள மீன் மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்யும் சந்தையில் பலபேரை தாக்கியதால் அச்சந்தை January 1 முதல் மூடப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கை அதிகாரிகளுக்கும் பிற நாடுகளுக்கும் இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளது, இது இப்போது மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவல் நிகழவில்லை என நம்பப்படுகிறது. பெரும்பாலும் கடல் உணவுகள், இறைச்சிகள் மூலம் பரவலாம் என்று ஆரம்ப கட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

Corona Virus என்றால் என்ன?
கொரோனா வைரஸ்கள் ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்து பல்வகைப்பட்ட Virus களாகும். அவை பொதுவான தடிமல் முதல் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (Middle East Respiratory Syndrome -MERS-CoV) மற்றும் Severe Acute Respiratory Syndrome (SARS) போன்ற கடுமையான சுவாச நோய்களுக்கு காரணமாகின்றன.

நோயின் அறிகுறிகள் என்ன?
இதன் அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் என்பன ஏற்படும். நோய் நிலைமை கூடினால் நியூமோனியா , சடுதியான சுவாச பாதிப்பு , சிறுநீரக பாதிப்பு , மரணம் கூட ஏற்படலாம்.

நோய் தடுப்பு முறைகளாக:-
01. தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை பாவித்தல்
02. கையை நீர், சோப் கொண்டு கழுவுதல்
04. சன நெரிசலான இடங்களில் தேவையில்லாமல் கூடுவதை தவிர்த்தல்
05. மீன் , முட்டை, இறைச்சி போன்றவற்றை நன்றாக சமைத்து உண்ணல்.

Al-Jazeera , மற்றும் BBC இன் பிந்தி கிடைத்த செய்திகளின்படி இதுவரை இருவர் பலியானதோடு நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இலங்கைக்கு Tin மீன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதோடு , தலைநகரில் சீனர்களின் நடமாட்டம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sources:-
01. https://www.newsfirst.lk/2020/01/17/mystery-china-virus-who-informs-sl-to-be-cautious/
02. https://srilankamirror.com/news/16739-mystery-chinese-virus-how-worried-should-we-be
03. https://www.aljazeera.com/news/2020/01/patients-infected-china-virus-thousand-study-200117234508163.html
04. https://www.bbc.com/news/health-51148303
05. https://edition.cnn.com/2020/01/18/asia/china-coronavirus-study-intl/index.html

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

2,489 total views, 1 views today