சிகரட், மது பாவனையாளர்களால் உண்மையில் நாட்டுக்கு வரி வருமானம் கிடைக்கிறதா?
By:- Dr Ziyad Aia
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் Budget வாசிக்கும்போது கட்டாயம் விலையில் கைவைத்து குடிமக்களின் தலையில் அடிக்கும் விடயம் தான் சிகரெட் மற்றும் மதுபானம். ஆனால் அவற்றினால் அரசுக்கு தேறிய வரி வருமானம் கிடைக்கிறதா?

இலங்கையில் தனிநபர் மதுபாவனை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும்போது 5 மடங்கு அதிகம். 
தெற்காசியாவிலேயே இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளிலேயே தனிநபர் (Per Capita) மதுபாவனை அதிகமாக உள்ளதாக National Authority on Tobacco & Alcohol Chairman Dr Palitha Abeykoon தெரிவித்தார்.

இதே நேரம் இலங்கையில் தனிநபர் மதுபாவனை 3.5 லீட்டார் ஆக இருக்கும் அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் இது 0.5 லீட்டார் ஆக காணப்படுகிறது. அதேவேளை ஐரோப்பிய நாடுகளில் 95 வீதமான மக்கள் மது பாவனையாளர்களாக கருதப்பட்டாலும் இலங்கையில் 80 வீதமான மக்கள் மது அருந்துவதில்லை என்று கணிப்பிடப்பட்டுள்ளது. ( நிரந்தர குடிகாரர்களை பற்றி சொல்கிறார்கள்.)

இலங்கையில் 40% (6 million) ஆன ஆண்கள் மற்றும் 3% ஆன பெண்கள் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதேநேரம் 40,000 பாடசாலை மாணவர்கள் புகைத்தலுக்கு பழக்கப்பட்டுள்ளார்கள்.

இலங்கையில் கிராம சேவகர் பிரிவுகளை எடுத்துக் கொண்டால் மாதாந்தம் 2 லட்சம் மதுபானத்துக்காகவும் 1.5 லட்சம் சிகரட்டுக்காகவும் செலவிடப்படுகிறது. (இது முழு கிராமத்துக்குமான 2 மாத கால சமூர்த்தி கொடுப்பனவுக்கு சமனானது)

நாட்டின் வரி வருமானத்தை எடுத்துக் கொண்டால் சிகரெட் மற்றும் மது பாவனையாளர்களால் ஆண்டொன்றுக்கு 143 billion வரி வருமானம் கிடைக்கிறது.

But, நாணயத்தின் மறுபக்கம் சிகரெட், மது பாவனையாளருக்கான சுகாதார செலவினம் 212 billion ( புகைத்தல் 71.5 billion, மதுபானம் 141 billion)
இவை நேரடியான மருத்துவ செலவினங்களாக காணப்பட்டாலும் மறைமுகமாக ஏற்படும் செலவுகள் இதையும் தாண்டும். ஆகக் குறைந்தது ஆண்டொன்றுக்கு 69 billion இழப்பு சிகரெட் மற்றும் மது பாவனையாளர்களால் அரசாங்கத்துக்கு ஏற்படுகிறது.

சிகரெட் மது பாவனையாளர்களால் மேலைத்தேய நாடுகளில் உண்மையில் வரி வருமானம் கிடைக்கிறது. காரணம் மதுவின் மூலம் நேரடியாகக் கிடைக்கும் வரி மற்றும் அங்கே மருத்துவ செலவிற்காக தனிநபர் அல்லது இன்சூரன்ஸ் கம்பெனி கட்டணம் செலுத்த வேண்டி இருப்பதால் அதன் மூலமும் Tax வருமானம் அரசுக்கு கிடைக்கிறது.

ஆனால் இலங்கை போன்ற இலவச சுகாதார சேவை இருக்கும் நாடுகளில் அதுவும் மது, புகைத்தலுக்கு அடிமையானவர்கள் குடும்பங்களால் கைவிடப்பட்டு அரச வைத்தியசாலையிலேயே தஞ்சமடைவதால் நாட்டுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்துகிறது.
புகைப்பவர்களால் புற்றுநோய்க்கான செலவினமும் மது பாவனையாளர்கள் விபத்து மற்றும் வயிறு சம்பந்தமான சிகிச்சைக்களுக்காக பாரிய செலவினங்கள் முதன்மை பெறுகின்றன.

புகைத்தல், மது பாவனைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் எந்த அரசும் அதை தடை செய்வதில்லை.
(இலங்கையில் சிகரட் உற்பத்தி மற்றும் விற்பனை Ceylon Tobacco Company PLC (CTC) க்கு தனி உரிமம் இருக்கும் அதேவேளை இந்நிறுவனம் British American Tobacco (BAT) வின் கீழ் இயங்குகிறது. இது Ceylon Tobacco Company இன் 84.13% பங்குகளை கொண்டுள்ளது. (அப்போ அதுவும் போச்சா)

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

உசாத்துணை:-
http://www.dailynews.lk/2016/08/04/local/89497

https://bit.ly/2Hbi8mP

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

 

1,891 total views, 1 views today