Br Dr Ziyad AIA

இது பல ஆண்டுகளாக மருத்துவ விஞ்ஞானிகளிடமும் மீடியாக்களிலும் சர்ச்சையாக பேசப்பட்ட ஒரு விடயம். மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி என்பது ஆய்வுகளின் அடிப்படையில் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டே செல்லும்.

உதாரணமாக பல தசாப்த காலங்களாக மதுபானம் ஆண்கள் 3 Unit அருந்துவதும் பெண்கள் 2 Unit அருந்துவதும் ஆபத்தில்லை என்பதோடு அவை இதயத்திற்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் சில ஆய்வுகள் கூறிவந்தன. இது பலரையும் குடிகாரர்கள் ஆக்கியது.
இவை எல்லாவற்றையும் தூக்கி விழுங்குவதுபோல் சமீபத்திய Big Scale ஆய்வறிக்கை மதுபானத்தின் எந்த ஒரு அளவும் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என நெத்தியடியாக நிரூபித்தது.(ஆதாரம் (1)
எனவே புதிய ஆய்வு முடிவுகளை அறியாமல் “காந்தி செத்துட்டாரா?” என்ற அளவுக்கு Reaction கொடுக்க வேண்டாம். 

Declaimer:-

“எனது LankaHealthTamil.Com மூலமான ஆக்கங்கள் ஆதாரமற்ற வெறுமனே Copy & Paste பண்ணப்பட்டவையாகவோ வாயால் வடை சுடுவதாகவோ இருக்காது. ஒவ்வொரு ஆக்கத்துக்கும் அதற்குரிய ஆய்வு ஆதாரம் 1,2,3… என இடப்பட்டிருக்கும். அதனை கீழ் உள்ள  ஒவ்வொரு ஆதாரம் என இலக்கமிடப்பட்டவற்றை கிளிக் பண்ணி பார்வையிடலாம். கம்பு சுத்த வருவோர் அவற்றை பார்வையிட்டு விட்டு வரவும்.”                                            By;- Dr Ziyad.A,I,A

 

தேங்காய் எண்ணெய் என்பது ஆதி மனிதன் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள். 5000 ஆண்டுகளுக்கு மேட்பட்ட வரலாற்றை கொண்டது. ஆனால் மர்க்கறி எண்ணெய் என்பது 20 ஆம் நூற்ராண்டின் கண்டுபிடிப்பு. 

தேங்காய் எண்ணெய் என்பது நிரம்பிய கொழுப்பமிலங்களை (Saturated Fat) கொண்டது. 
மரக்கறி எண்ணை என்பது நிரம்பாத கொழுப்பு களைக் (Unsaturated Fat) கொண்டது.
தேங்காய் எண்ணெயில் காணப்படுகின்ற நிரம்பிய கொழுப்புகளால் (Saturated Fat) இதய நோய்கள் உண்டாவதாக American Heart Association தெரிவித்த கருத்தையே சிலர் இன்றும் கொண்டுள்ளனர். பல புதிய ஆய்வுகள் நிரம்பிய கொழுப்புக்கள் ஆபத்து அற்றவை என நிரூபித்துள்ளன. ஆதாரம் (2) , (3)

இருபதாம் நூற்றாண்டில் கிளப்பி விடப்பட்ட ஒரு கதைதான் நிரம்பிய கொழுப்புகள் தான் இதயத்துக்கு பாதிப்பு என்று. அதனை பல ஆய்வுகள் பொய்ப்பித்து உள்ளன. அதை வைத்துக் கொண்டே மரக்கறி எண்ணெய் பரிந்துரைக்கப்பட்டது.

உண்மையில் தேங்காய் உற்பத்தியானது கிழக்காசிய நாடுகளிலும் பிரேசிலிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. ( see picture 01) இதிலிருந்தே இவற்றுக்கு எதிரான பிரச்சாரங்களின் அரசியல் பின்னணி புரியும். 

உண்மையில் சிலர் மரக்கறி எண்ணை என்றதும் பச்சை மரக்கறிகள் போல இவையும்   ஆரோக்கியமானது என்று நினைக்கின்றனர். ஆனால் அது அவ்வாறு இல்லை.

உண்மையில் மரக்கறி எண்ணெய் (Vegetable Oil) என்பவை பச்சை காய்கறிகளால் செய்யப்படுபவை அல்ல.

மரக்கறி எண்ணை என பொதுவாக குறிப்பிடப்படுபவை பாம் எண்ணெய் (Palm Oil),சோயா எண்ணெய் (Soyabean Oil), சூரியகாந்தி எண்ணெய் (sun flower Oil), சோள எண்ணெய் (Corn Oil), கடுகு எண்ணெய் (Canola Oil), பருத்தி விதை எண்ணெய் (Cotton seed Oil), குங்குமப்பூ எண்ணெய் (Safflower oil) இப்படி பல.

ஆனால் மக்களை திசை திருப்ப பல தயாரிப்புகளில் மரக்கறி எண்ணெய் என்றும் சமையல் எண்ணெய் என்றும் குறிப்பிட்டு நாளாந்தம் பாவிக்கும் உடலுக்கு ஆரோக்கியமான மரக்கறிகள் படங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இலங்கை சந்தையில் பெரும்பாலும் Palm எண்ணையே மரக்கறி எண்ணையாக குறிப்பிடப்பட்டு சிறிய எழுத்தில் Label பண்ணப்பட்டிருக்கும். (See the picture 2)

 

தாவர உட்பத்தியாக இருந்தாலும் தேங்காய் எண்ணெய் , ஒலிவ் எண்ணெய் (Olive Oil) என்பன மரக்கறி எண்ணெய்க்குள் அடங்காது.

மரக்கறி எண்ணெய்கள் சமையலுக்கு ஏன் ஆபத்தானவை:-
01. உண்மையில் மறக்கறி எண்ணெய்கள் இயற்கைத்தன்மை குறைந்தவை. இவற்றில் அதிகளவான ஒமேகா-6 எனப்படும் நிரம்பாத கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன இவை இதயத்திற்கு ஆபத்தானவை. Omega-3 உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. Omega-6 உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும். இவை சரியான விகிதத்தில் பேணப்பட வேண்டும். (ஆதாரம் (4) எனவே மரக்கறி எண்ணெய்களில் அடங்கி இருக்கும் Lenolic Acid எனும்  Omega-6 உடல் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும்.

02.மரக்கறி எண்ணைகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் Trans கொழுப்பமிலங்களை கொண்டு இருப்பதால் ஆபத்தானவை:-

மரக்கறி எண்ணை உடலுக்கு கேடு விளைவிக்கும் LDL Cholesterol ஐ குறைக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுகின்றபோதும் அதனை சமையலுக்கு உபயோகிப்பது கேடு விளைவிக்கும்.

மரக்கறி எண்ணைகள் குறைந்த Smoke Point ஐ கொண்டிருப்பதால் இலகுவில் ஆவி ஆகி புகையாக வெளியேறக்கூடியவை.இதனை தவிர்ப்பதட்காக செயற்க்கை முறையில் ஹைட்ரஜனேற்றம் செய்யப்படுகின்றன.

இவ்வாறு hydrogenation செய்வதால் அவற்றின் வெப்ப உறுதி நிலை அதிகரிப்பதோடு , வாழ்நாளும் (Life time) அதிகரிக்கிறது. இது வியாபாரிகளுக்கு நன்மை பயக்கின்றபோதும் நுகர்வோருக்கு பாரிய கெடுதல்களை உண்டாக்குகிறது.

நிரம்பாத Trans Fat ஆனது மிகவும் ஆபத்தானவை. இவை இருதய நோய்கள் , Cancer , சக்கரை நோய் என்பவற்றை உருவாக்குவதாக பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ( ஆதாரம் (5) (6) (7) )

இந்த hydrogenation இன் பக்க விளைவுகள் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் பல நாடுகள் இதை தடை செய்துள்ளன. அமெரிக்க சந்தையில் தற்போது வரும் மரக்கறி எண்ணெய்கள் அவ்வாறு hydrogenation செய்யப்படவில்லை என விளம்பரப்படுத்தப்பட்டு விட்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றில் 0.56% to 4.2% Trans கொழுப்புகள் இருந்தது நிரூபிக்கப்பட்டு உள்ளன. (ஆதாரம் (8)

03.மரக்கறி எண்ணெய் பாவனை மேலும் பல சுகாதார பிரச்சினைகளுடன் தொடர்புடையதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

மரக்கறி எண்ணெய்கள் வெப்ப உறுதி அற்றவை. அதனால் இலகுவில் ஒட்சியேற்றம் அடையக்கூடியவை. இதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியிடும். ( ஆதாரம் (9)

Omega-6 அதிகளவில் காணப்படும் தாய்ப்பாலை அருந்தும் குழந்தைங்களுக்கு ஒவ்வாமை மற்றும் மூச்சு நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். ( ஆதாரம் (10)

மரக்கறி எண்ணெயில் காணப்படும் Omega-6 ஆனது Cancer உடன் தொடர்புள்ளது என சில ஆய்வுகள் கூறுகின்றன. (ஆதாரம் (11) (12)

மரக்கறி எண்ணெயில் காணப்படும் Omega-6 ஆனது  மன அழுத்தத்துடன்  தொடர்புள்ளது என சில ஆய்வுகள் கூறுகின்றன. ( ஆதாரம் (13)

 

தேங்காய் எண்ணெய்  ஏன் சமையலுக்கு உகந்தது?

தேங்காய் எண்ணெயானது ஏனைய சமையல் எண்ணெய்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

இதற்கு காரணம் இதில் 90% நிரம்பிய கொழுப்புகள் அடங்கி உள்ளது.

நிரம்பிய கொழுப்புக்களில் பிரதானமானது Lauric Acid ஆகும். இது 40% உள்ளது.

நிரம்பிய கொழுப்புக்கள் வெப்ப உறுதி வாய்ந்தவை. இதனால் இலகுவில் ஒட்சியேற்றம் அடைந்து Trans கொழுப்பாக மாறாது. ( ஆதாரம் (14)

வெப்ப உறுதி நிலை காரணமாக இதற்கு Hydragenation உம் அவசியமற்றது. ஆனால் ஒரே  தேங்காய் எண்ணெயை திரும்ப திரும்ப பாவிக்கும்போது Tans கொழுப்புக்கள் உருவாகின்றன. அதனாலேயே கடைகளில் திரும்ப திரும்ப பாவிக்கும் எண்ணெய்களில் செய்த Short eats களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப் படுகிறது.

தேங்காய் எண்ணெயானது Medium chain fatty acid எனும் Capralic Acid ஐ கொண்டுள்ளது.

சமீபத்திய ஆய்வுகள் முன்பு நம்பப்பட்டது போல் தேங்காய் எண்ணெய் ஆபத்து விளைவிக்கும் LDL Cholesterol ஐ அதிகரிக்காது என நிரூபித்துள்ளன. ( ஆதாரம் (15)

இன்னுமொரு ஆய்வில் தேங்காய் எண்ணெய் LDL Cholesterol ஐ குறைத்து உடலுக்கு உபயோகமான HDL Cholesterol ஐ அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. ( ஆதாரம் (16)

வரலாற்று ரீதியான சில தகவல்களை நோக்குமிடத்து நிரம்பிய கொழுப்பை கொண்ட தேங்காய் எண்ணையை பாவித்த மக்களிடத்தில் இருதய நோய்கள், பாரிசவாதம் என்பன குறைவாக இருந்ததை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ( ஆதாரம் (17) (18)

 

Take Home Message:-

இலங்கை சுகாதார அமைச்சின் அறிவுரை.

(நாம் சமைப்பதற்காக பாவிக்கும் தேங்காய், தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் என்பன கொழுப்புச்சத்தைக் கொண்டுள்ளன. எண்ணெயில் (கூடியளவு நேரம்) பொரித்தல், இயன்றளவு தவிர்க்கப்படல் வேண்டும்.

பல தலைமுறைகளாக நாம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் பொரிப்பதற்கு மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில் அவை வெப்ப உறுதி கொண்டவையாகும்.

பாம் எண்ணெய், மரக்கறி எண்ணெய், மாஜரின் போன்றவை ஆழப் பொரித்தலுக்கோ, மீள் பொரித்தலுக்கோ உகந்தவையல்ல.

நிரம்பாத கொழுப்பு அமிலங்களை அதிக வெப்பநிலையில் சூடாக்கும் போது இந்த வகையான கொழுப்புகள் உருவாகின்றன. ட்ரான்ஸ் கொழுப்பின் மூலமாக உடலில் உருவாகின்ற கொலஸ்ரோல் வகைகள் உயர்வடையும். குருதி நாளங்களில் தடைகளை ஏற்படுத்துதல் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்யும்.

பாம் எண்ணெய், மரக்கறி எண்ணெய் போன்ற அனைத்து வகையான நிரம்பாத எண்ணெய்யைப் பாவித்து அதிகமான எண்ணெய்யில் பொரித்து எடுக்கும் போது இவ்வகையான ட்ரான்ஸ் எண்ணெய்களை உருவாகின்றன. ஆதலினால் இவ்வகையான மரக்கறி எண்ணெய்களைப் பாவித்து உணவுகளை ஆழமான எண்ணெய்யில் பொரித்து எடுப்பதை தவிர்த்தல் வேண்டும்.

இதுவே இலங்கை சுகாதார அமைச்சின் அறிவுரை. 

 

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட போசணை பற்றிய ஆலோசனை தமிழ் நூலில் இருந்து இரு பக்கங்களை கீழே காண்க.

  References:-

 1. No Amount of Alcohol Use Is Safe, Analysis of Studies Finds. 2018 Aug 23 [cited 2018 Oct 17]; Available from: https://www.bloomberg.com/news/articles/2018-08-23/no-amount-of-alcohol-use-is-safe-analysis-of-studies-finds
 2. Siri-Tarino PW, Sun Q, Hu FB, Krauss RM. Meta-analysis of prospective cohort studies evaluating the association of saturated fat with cardiovascular disease. Am J Clin Nutr. 2010 Mar;91(3):535–46.
 3. USDA Food Composition Databases [Internet]. [cited 2018 Oct 12]. Available from: https://ndb.nal.usda.gov/ndb/
 4. Chowdhury R, Warnakula S, Kunutsor S, Crowe F, Ward HA, Johnson L, et al. Association of Dietary, Circulating, and Supplement Fatty Acids With Coronary Risk: A Systematic Review and Meta-analysis. Ann Intern Med. 2014 Mar 18;160(6):398.
 5. Consumption of Trans Fatty Acids Is Related to Plasma Biomarkers of Inflammation and Endothelial Dysfunction | The Journal of Nutrition | Oxford Academic [Internet]. [cited 2018 Oct 17]. Available from: https://academic.oup.com/jn/article/135/3/562/4663700
 6. Effect of Dietary trans Fatty Acids on High-Density and Low-Density Lipoprotein Cholesterol Levels in Healthy Subjects | NEJM [Internet]. [cited 2018 Oct 17]. Available from: https://www.nejm.org/doi/full/10.1056/NEJM199008163230703
 7. Ascherio A, Willett WC. Health effects of trans fatty acids. Am J Clin Nutr. 1997;66(4 Suppl):1006S-1010S.
 8. O’keefe S, Gaskins‐Wright S, Wiley V, Chen I-C. Levels of Trans Geometrical Isomers of Essential Fatty Acids in Some Unhydrogenated U. S. Vegetable Oils1. J Food Lipids. 1994 Sep 1;1(3):165–76.
 9. Grootveld M, Silwood CJL, Addis P, Claxson A, Serra BB, Viana M. HEALTH EFFECTS OF OXIDIZED HEATED OILS1. Foodserv Res Int. 2001 Oct 1;13(1):41–55.
 10. Breast milk fatty acids and allergic disease in preschool children: The Prevention and Incidence of Asthma and Mite Allergy birth cohort study – ScienceDirect [Internet]. [cited 2018 Oct 17]. Available from: https://www.sciencedirect.com/science/article/pii/S009167490502316X
 11. de Lorgeril M, Salen P. New insights into the health effects of dietary saturated and omega-6 and omega-3 polyunsaturated fatty acids. BMC Med. 2012 May 21;10(1):50.
 12. Gago-Dominguez M, Yuan J-M, Sun C-L, Lee H-P, Yu MC. Opposing effects of dietary n-3 and n-6 fatty acids on mammary carcinogenesis: The Singapore Chinese Health Study. Br J Cancer. 2003 Nov 3;89(9):1686–92.
 13. Depressive Symptoms, omega-6:omega-3 Fatty Acids, and Inflam… : Psychosomatic Medicine [Internet]. [cited 2018 Oct 17]. Available from: https://journals.lww.com/psychosomaticmedicine/Abstract/2007/04000/Depressive_Symptoms,_omega_6_omega_3_Fatty_Acids,.1.aspx
 14. Prabhu HR. Lipid peroxidation in culinary oils subjected to thermal stress. Indian J Clin Biochem IJCB. 2000 Aug;15(1):1–5.
 15. Khaw K-T, Sharp SJ, Finikarides L, Afzal I, Lentjes M, Luben R, et al. Randomised trial of coconut oil, olive oil or butter on blood lipids and other cardiovascular risk factors in healthy men and women. BMJ Open. 2018 06;8(3):e020167.
 16. Assunção ML, Ferreira HS, dos Santos AF, Cabral CR, Florêncio TMMT. Effects of dietary coconut oil on the biochemical and anthropometric profiles of women presenting abdominal obesity. Lipids. 2009 Jul;44(7):593–601.
 17. Lindeberg S, Lundh B. Apparent absence of stroke and ischaemic heart disease in a traditional Melanesian island: a clinical study in Kitava. J Intern Med. 1993 Mar;233(3):269–75.
 18. Cholesterol, coconuts, and diet on Polynesian atolls: a natural experiment: the Pukapuka and Tokelau island studies. – PubMed – NCBI [Internet]. [cited 2018 Oct 18]. Available from: https://www.ncbi.nlm.nih.gov/pubmed/7270479

4,424 total views, 4 views today