கொரோனா Virus காற்றினால் பரவும் எனும்மற்றுமொரு செய்தி மக்களை பீதி கொள்ளச்செய்துள்ளது. (Is COVID-19 Airboarne? Covrona Virus Spread by Air?)

கொரோனா Virus 8 மணி நேரம் காற்றில் இருக்கும் என்பதாகவும், எல்லோரும் Mask அணியவேண்டும் என்பதாக WHO பணிப்பாளர் சொன்னதாக ஒரு செய்தி உலாவருகிறது. உண்மையில் இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட செய்தியாகும்.

COVID-19 நோயாளிகளை அறை ஒன்றில் வைத்து அவர்களில். Nebulizer மூலம் தும்மல், இருமலை தூண்டி அதனை aerosal ஆக மாற்றி ஆராய்ந்தபோது காற்றிலே 3 மணி நேரம் வரை COVID-19 க்குரிய Virus கள் காணப்பட்டதை அவதானிக்க முடிந்ததாக British Medical Journal இல் வெளியான ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதை வைத்தே கொரோனா Virus காற்றினால் பரவும் என பீதியை கிளப்பி விடப்பட்டுள்ளது.

(The team used a nebulizer to simulate a person coughing or sneezing, and found that the virus became an aerosol — meaning its particles became suspended in the air — making it detectable for almost three hours.)

அதாவது COVID-19 நோயாளியின் தும்மல், இருமலின்போது வரும் சாரலின் நீர்த்துளிகள் வரும் வைரஸ்கள் 3 மணி நேரம் வரை காற்றில் நிலைத்து நிற்கலாம். இது சூழலின் ஈரப்பதன் மற்றும் வெப்பநிலைகளால் மாறுபடலாம். எனவே இருமல், தடுமல் உள்ள யாராக இருந்தாலும் Mask or கைக்குட்டை பாவிப்பது அவசியம். ஏனையவர்கள் எல்லோரும் பாவிக்கவேண்டிய கட்டாயமில்லை.

COVID-19 வைரஸ்கள் செப்பு மேட்பரப்புகளில் 4 மணி நேரமும், Card board அட்டைகளில் 24 மணி நேரமும், Plastic மற்றும் Stainless Steel இல் 2 -3 நாட்களும் உயிர்ப்புடன் இருக்கும்.
எனவே கைகளை அடிக்கடி கழுவுவது பரிந்துரைக்கப்படுகிறது.

COVID-19 வைரஸ்கள் 3 மணிநேரம் காற்றில் நிலைத்து நிட்கும் சாத்தியம் உள்ளதால் நோயாளிகளை கையாளும் சுகாதார ஊழியர்கள் கவனமாக இருக்குமாறே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்கள் COVID-19 நோயாளிகளை கையாளும்போது, அல்லது அவர்கள் தங்கும் வைத்தியசாலைகளுக்கு செல்லும்போதே Mask அணியும் தேவை ஏற்படும்.

சாதாரண Disposable Surgical Mask ஐ விட N95 Mask யே பரிந்துரைக்கப்படுகிறது. N95 Mask கூட 95% மான காற்று துணிக்கைகளையே கட்டுப்படுத்தும். அதனாலேயே அதட்கு N95 என பெயரிடப்பட்டுள்ளது. (இதன் மூலம் சுகாதார ஊழியர்கள் எத்தகைய Risk எடுக்கிறார்கள் என்பது புரியும்.)

எனவே முடிந்த அளவு மக்கள் மத்தியில் இந்த நோய் பரவலை தடுக்கும் முறைகளை பற்றி அறிவுறுத்தி , அரசாங்கம் விடுக்கும் விழிகாட்டல்களுக்கு கட்டுப்பட்டு நடப்போம்.

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

860 total views, 1 views today