கொரோனா சடலங்களை இலங்கையில் அடக்கம் செய்ய முடியும் என இலங்கை வைத்தியர்கள் சங்கம் (SLMA) அறிவிப்பு..!
Source: Adaderana

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்களை இலங்கையில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க முடியும் என இலங்கை வைத்திய சங்கம் (Sri Lanka Medical Association – SLMC) தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

விஞ்ஞான ரீதியான தகவல்களை அடிப்படையாக கொண்டு வைத்திய சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வின் ஊடாக சடலங்களை அடக்கம் செய்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை கருத்தில் கொண்டு, வைத்தியர்கள் சங்கம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் சடலங்கள் குறித்து அவசர ஆய்வு ஒன்றை நடத்தியிருந்தது.

அதனடிப்படையில் கொவிட் சடலங்கள் குறித்து இலங்கை வைத்தியர்கள் சங்கம் ஏழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பரிந்துரைகளின் அடிப்படையில், கொரோனா தொற்று சுவாசக் குழாய் வழியாக மட்டுமே ஏற்படுவதாகவும், குறித்த வைரஸ் உயிரணுக்களில் மட்டுமே பரவும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

1,198 total views, 1 views today