கொரோனாவை தொடர்ந்து ஹண்டா Hanta Virus. புதுசு புதுசா பீதியை கிளப்புறாய்ங்களே!
” மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்”
By: Dr Ziyad Aia

சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் ஷான்டாங் மாகாணத்திலிருந்து பேருந்தில் திரும்பியபோது ஹான்டா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை ட்விட்டரில் பதிவிட்டது. மேலும், அவருடன் பயணித்த 32 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்திருந்தது.

Hanta இது புதுசா?
இது ரொம்ப பழசு. 1950 இல் அமெரிக்கா கொரியா யுத்தத்தின்போது South Korea வின் Hantan River பகுதியில் முதலில் இந்நோய் பரவியதால் இப்பெயர் வந்தது. இது ஒரு Enveloped RNA Virus ஆகும்.

இது
2010 இல் – Africa
ஆசியாவில் China, Hong Kong, the Korean Peninsula & Russia
2005 – Australia
2017 இல் Europe (Germany இல் 1,713 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.)
2017 USA இல் 728 நோயாளிகள் பதிவானார்கள்.

இது எப்படி பரவுகிறது?
கொறித்து உண்ணும் Rodents வகையில் அடங்கும் எலிகள் மூலம் , அவற்றின் மலம் , சலம், உமிழ்நீர் உணவில் கலத்தல் , எலி மனிதனை கடித்தல் என்பவற்றால் பரவுகிறது.

நோய் அறிகுறிகள் என்ன?
Hemorrhagic fever with renal syndrome
டெங்கு காய்ச்ச்சல் போன்ற காய்ச்சலோடு சிறுநீரகங்களை பாதிக்கலாம்.

Hantavirus pulmonary syndrome
காய்ச்சல், இருமல், தசை நோவு, தலைவலி, மயக்கம் போன்ற நிலைகள் ஏற்படலாம். இதனோடு சுவாச பாதிப்பு.

இது காற்றில் பரவுமா?
இந்த வைரஸ் காற்றில் பரவாது. ஆனால், ஹன்டா வைரசால் தாக்கப்பட்ட எலியின் மலம், சிறுநீர், எச்சில் ஆகியவற்றை துடைக்கும்போது வரும் தூசிகளை சுவாசிப்பதால் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் உள்ளன.

மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுமா?
இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றாது. (விதிவிலக்கு சிலி, அர்ஜென்டினா போன்ற நாடுகளிலும் மிகவும் அரிதாக இந்த வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவியுள்ளது. அதற்கு ஹன்டா வைரசில் இருந்து மாறுபடும் ஏன்டிஸ் வைரஸ் (Andes Virus) என்று அழைக்கப்படுகிறது.)

நோய் பரவலை தடுக்க என்ன செய்யலாம்?
எலிகளை கட்டுப்படுத்தல்.
இந்த நோயை பற்றிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்பாமல் இருந்தாலே பாரிய அளவு இதன் தாக்கத்தை தடுக்கலாம்.
இதற்கு ஏற்கனவே சில தடுப்பூசிகளும் , மருந்துகளும் பாவனையில் உள்ளன.

2017 களில் அமெரிக்கா போன்ற நாடுகளே பாதிக்கப்படும்போது நமக்கு எதுவும் தெரியாமல் இருந்ததுபோல் இருப்போம். கொரோனாவை தொடர்ந்து ஹண்டா Hanta Virus என வீண் பீதிகள் வேண்டாம்.

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

01. https://www.ndtv.com/…/now-hantavirus-in-china-spooks-twitt…

02. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2880890/

03. https://www.healthline.com/health-ne…/what-is-the-hantavirus

04. https://www.cdc.gov/hanta…/surveillance/reporting-state.html

05. https://www.who.int/…/don/04-January-2019-hantavirus-pa…/en/

06. https://www.mayoclinic.org/…/h…/symptoms-causes/syc-20351838

07. Martinez VP, Bellomo C, San Juan J, Pinna D, Forlenza R, Elder M, Padula PJ (2005). “Person-to-person transmission of Andes virus”. Emerging Infectious Diseases. 11 (12): 1848–1853. doi:10.3201/eid1112.050501. PMC 3367635. PMID 16485469.

1,158 total views, 2 views today