குடல் / இரைப்பை புண் (Ulcer) – ஓர் உண்மை சம்பவம். Dr M.J.M. Suaib இன் 21/07/2018 நாட்குறிப்பேட்டில்  இருந்து…

30 வயதுப் பெண் சில நாட்களாக மேல் வயிற்றில் எரிவுடனான வலி இருப்பதாக வர அவள் வாட்டில் அனுமதிக்கப்பட்டாள். ஓரளவு வலியுடன் இருந்தவள் திடீரென தாங்கிக் கொள்ள முடியாதளவு மிகப் பெரும் வலியால் துடிதுடித்து மயக்கமுற்று விட்டாள்.
சோதித்துப் பார்க்கையில், soft ஆக இருந்த அவளது வயிற்றுச் சுவர், rigid எனும் கடினமான நிலைக்கு மாறியிருந்தது. இது acute abdomen எனும் அவசர சத்திரசிகிச்சைக்குறிய நிலையானதால் உடனே சத்திரசிகிச்சைக் கூடத்திற்கு எடுத்து வயிற்றைத் திறந்து பார்க்க…

இரைப்பையில் இருக்க வேண்டிய உணவு மற்றும் இரைப்பையின் உள்ளடக்கங்களோடு இரத்தமும் இரைப்பைக்கு வெளியே இருந்தது.

எங்கிருந்து இவை வெளியே வந்திருக்கும் என்று தேடிப் பார்க்க இரைப்பையின் ஓரிடத்தில் ஒரு துளையிருந்ததைக் காண முடிந்தது. அத்துளையினாடாகவே அவை வெளியேறின.

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே… என்ற கண்ணதாசனின் கண்ணான வரிகளுக்கொப்ப, இரைப்பையை விட்டு உள்ளடக்கங்கள் வெளியேறியமையே அவள் அளவில்லா வலியோடு மயக்கமுறக் காரணம்.

அவளுக்கு gastritis எனும் இரைப்பை அழற்சி மாதக்கணக்கில் இருந்தும் உரிய முறையில் மருந்து செய்யாமல் சுயமாக மருந்து செய்து வந்திருக்கிறாள். Gastric Ulcer எனும் இரைப்பைப் புண் ஏற்பட்டு அது ஆழமாகி வாட்டில் இருக்கும் போதே இரைப்பையின் முழுத் தடிப்பையும் ஊடறுத்துத் துளையாகி விட்டது.

துளை ஏட்படும் விதம்:-

இதிலிருந்து இரு படிப்பினைகள் பெறலாம்.

1. எந்த வருத்தமாக இருப்பினும் வைத்திய ஆலோசனை முக்கியம்.

2. அல் குர்ஆனின் 47:15 இன் கடைசியில் குறிப்பிடப்பட்ட படி…
கொதி நீர் புகட்டப்படும் போது அது குடல்களை துண்டுதுண்டாக்கும்…

குடலுக்குள்ளே சாதாரண நீர் இருக்கையில் எந்த வலியையும் காணாத போதும் அது குடலுக்கு வெளியே இருப்பின் தாங்க முடியாத வலி ஏற்படுவது நிச்சயமான போது கொதி நீர் பற்றி சொல்லத்தான் வேண்டுமா?
குடல்கள் துண்டு துண்டாகி உள்ளடக்கங்களெல்லாம் “கொதிநீரோடு” வெளியே வருகையில் வெறும் கொதிநீரால் மட்டும் வரும் வேதனையோடு நின்றுவிடாமல் மேலும் மிகப்பன்மடங்கு வேதனை கொடுக்கப்படும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

குடல் மற்றும் இரைப்பையின் உட்புறப் படையில் வலியை உணரக்கூடிய நரம்பு முடிவுகள் காணப்படாமையால் அவை வலியை இலகுவில் உணர்வதில்லை.
மாறாக வயிற்றுச் சுவரின் உட்புறத்தைச் சுற்றியிருக்கும் parietal peritoneum எனும் படை வயிறு, நெஞ்சின் தோல் மற்றும் சதையில் வலியை உணர்கின்ற அதே நரம்பு முடிவுகளைச் செறிவாகக் கொண்டது. இதனால் அப் parietal peritoneum எனும் படையில் ஏதாவது (அங்கு இருக்கக் கூடாத) அசாதாரணப் பதார்த்தங்கள் படுமிடத்து அவை மிக அதிகளவில் வலியை உணர்வதாலேயே இப்பெண்ணுக்கு இந்நிலை ஏற்பட்டது.

வயிற்றுப் புண் உள்ளவர்கள் இப்படி அறிகுறி இருந்தால் ஜாக்கிரதையா இருக்கனும்..!

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

5,697 total views, 3 views today