காய்ச்சல் வலிப்பு! Febrile seizures
By: வைத்தியர் யு.எல்.பஸீனா (சிறு பிள்ளை வைத்திய நிபுணர்)
இது சிறு பிள்ளைகளுக்கு வரும் காய்ச்சலுடன் ஏற்படக்கூடிய வலிப்பாகும். சாதாரணமாக 06 மாதத்துக்கும் 06 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள் இதனால் பாதிக்கப்படுகின்றார்கள்.
இருந்த போதிலும் ஒரு மாதத் திலிருந்து 06 மாதம் வரை சிறார்களுக்கு வலிப்புக்கான வேறு காரணங்கள் இல்லாத விடத்து அது காய்ச்சல் வலிப்பாக கருதப்படுகின்றது. ஆனால், மூளைக் காய்ச்சலால் ஏற்படும் வலிப்பு அல்லது அசாதாரண அணுசேப தாக்கங்களால் (Metabolic Cause) ஏற்படும் வலிப்பு இதில் அடங்காது.
காய்ச்சல் வலிப்பு இரு வகையாக வருகின்றன.
01) எளிய காய்ச்சல் வலிப்பு (Simple Febrile Convulsion)
02) சிக்கலான காய்ச்சல் வலிப்பு (Complex Febrile Convulsion) என வருகின்றது.
இருவகை காய்ச்சல் வலிப்பு பற்றி கூறினீர்கள் அவைபற்றி தெளிவுபடுத்த முடியுமா?
எளிய காய்ச்சல் வலிப்பு (Simple Febrile Convulsion)
இது பொதுவாக ஏற்படக்கூடிய வலிப்பாகும். 70 வீதம் of Febrile Convulsion இதன் தன்மை குறுகிய காலத்துக்கு உரியதாக இருக்கும். இந்த வலிப்பு 15 நிமிடத்திலும் குறைவான நேரத்துக்குரியது. அதாவது வலிப்பு ஏற்பட்டு 15 நிமிடத்துக்குள் சாதாரண நிலைக்கு வந்துவிடும். ஒரு தடவை வரும் காய்ச்சலுடன் ஒரு வலிப்பு மாத்திரமே வரும்.
சிக்கலான காய்ச்சல் வலிப்பு (Complex Febrile Convulsion)
இது 30 வீதமானவர்களுக்கு வரும் காய்ச்சல் வலிப்பாகும். இந்த காய்ச்சல் வலிப்பு 15 நிமிடத்துக்கும் கூடுதலாக இருக்கும். இவ்வலிப்பானது உடலின் ஒரு பக்கத்தில் மாத்திரம் இருக்கும். ஒரு காய்ச்சலுடன் பல தடவைகள் வலிப்பு ஏற்படும். வலிப்பின் பிற்பாடு சில நரம்பு (Todds Paresis) சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றலாம்.
காய்ச்ச ல் வலிப்பு அதிகம் வரக்கூடிய சாத்தியமுள்ளவர்கள் யார்?
இந்த நோய் அதிகம் வரக்கூடிய சாத்தியமுள்ளவர்கள் (Risk Group) நெருங்கிய உறவினர்கள் (குடும்பப் பின்னணி) காய்ச்சல் வலிப்பு உள்ளவர்களாக உள்ளபோது அதாவது மூளை வளர்ச்சி குன்றிய மற்றும் முதிராக் குழந்தைகள் (Premature Babies) தாமதமான வளர்ச்சிப் படி நிலையில் உள்ள குழந்தைகள் (Develomentally Delayed Children) போன்றவர்களுக்கு அதிகம் வரக்கூடிய சாத்தியமுள்ளவர்களாக காணப்படுகின்றனர்.
காய்ச்சல் வலிப்பு மீண்டும் மீண்டும் வரக்கூடிய சாத்தியம் உள்ளதா?
ஆம், சாதாரணமாக மூன்றில் ஒரு பங்கினருக்கு மீண்டும் வரக்கூடிய வாய்ப்புள்ளது. (Recurrence) இதில் அடங்குவர். குடும்ப பின்னணி உள்ளவர்கள் (Resk Group of Recurrence), சாதாரண சிறிய காய்ச்சலின்போது வலிப்பு ஏற்பட்டவர்கள், ஒரு வருடத்துக்குள் காய்ச்சல் வலிப்பு ஏற்படும் குழந்தைகள், ஒரு காய்ச்சலுடன் பல தடவை வலிப்பு (Multiple Fit) ஏற்படும் குழந்தைகள் போன்றவர்களுக்கு இந்த காய்ச்சல் வலிப்பு மீண்டும் மீண்டும் வரக்கூடிய சாத்தியம் உள்ளது.
இதன் அறிகுறிகள் பற்றி கூறுவீர்களா?
திடீர் என்ற மயக்கம் அல்லது உணர்விழந்து போதல், கண் மேல் பார்த்தவாறு காணப்படும். மேலும், கை கால்களில் விறைப்புத் தன்மையுடன் நடுக்கம் ஏற்படலாம். இது ஒரு பக்கமாகவும் காணப்படலாம். அல்லது இரு பக்கங்களும் வரலாம். இதன்போது சிறுநீர், மலம் வெளியாகலாம்.
வலிப்பு ஏற்படும்போது முதலில் ‘செய்யவேண்டியது என்ன?
குழந்தைகளுக்கு காய்ச்சல் வலிப்பு ஏற்படும்போது முதலில் பெற்றோர்கள் பதற்றப்படாமல் நிதானமாக செயற்படவேண்டும். குழந்தையின் உடலை இடது பக்கமாக சரித்து (Left Lateral Position) தலையையும், கழுத்தையும் சற்று உயர்த்தி வைக்கவேண்டும், அந்த நேரம் வாயினுள் எதையும் கொடுக்க முயற்சிக்கக் கூடாது. குழந்தையின் உடல் நிலையை சரியாக அவதானிக்கவேண்டும். அதாவது வலிப்பு ஏற்படும் விதத்தை அவதானிக்கவேண்டும். இதன்போது எவ்வித மருந்துகளையோ கொடுக்கக் கூடாது, வலிப்பு 5 நிமிடத்தையும் தாண்டினால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதுகூட குழந்தையின் உடலை இடது பக்கமாக சரித்து (Left Lateral Position) தலையையும், கழுத்தையும் சற்று உயர்த்தி வைக்கப்பட்ட நிலையிலேயே கொண்டு செல்லவேண்டும்.
செய்யக்கூடாத விடயங்கள் என்ன?
பெரும்பாலான தாய்மார்கள் குழந்தைக்கு காய்ச்சல் வலிப்பு வந்துவிட்டால் காய்ச்சலை குறைப்பதற்காக துணியை ஈரப்படுத்தி குழந்தையின் உடலை துடைத்துவிடும் பழக்கமுடையவர்களாக இருக் கின்றார்கள்.
இது தவறான முறையாகும். ஏனெனில், இது Core Temperature யை குறைத்து நடுக்கத்தை ஏற்படுத்தும். இது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன் நோய் நிலைமையினை சரியாக பிரித்தறிய கடினமாகவும் இருக்கும்.
வலிப்பு இருக்கும்போது வாயினுள் எதையும் போடவேண்டாம். வலிப்பு இருக்கின்றபோது இரும்புப் பொருள் ஒன்றை கையில் இறுகப்பிடிக்க வைப்பது இப்போதும் எமது சமூகத்தில் காணப்படுகின்றது. இதுவும் முற்றாக தடுக்கப்படவேண்டியதாகும்.
காய்ச்சல் குறைந்து விட்டால் வலிப்பு நின்றுவிடும் என்று நினைத்து சில பெற்றோர்கள் பரசிடமோல் சப்போஸ்டரியை (Paracitamol Suppository) குத வழியில் செலுத்தி குழந்தையின் காய்ச்சலை உடனடியாக குறைக்க முயற்சிக்கின்றார்கள். காய்ச்சில் வலிப்பு தானாகவே சரியாகிவிடும்.
எனவே, காய்ச்சில் வலிப்பு இருக்கும் வேளையில் காய்ச்சல் நிவாரணியை உடனடியாக கொடுக்கத் தேவையில்லை. வலிப்பு முடிந்த குழந்தை சாதாரண உணர்வுக்கு வந்தவுடன் அதைக்கொடுக்கலாம்.
காய்ச்சல் வலிப்பை எவ்வாறு தடுக்கலாம்?
காய்ச்சல் வலிப்பை தடுக்க முடியாது. காய்ச்சல் வருவதை தவிர்ப்பதற்கான முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்ளலாம். உதாரணமாக, காய்ச்சல் வலிப்பு வருவதற்கான முக்கிய காரணியாக (Viral Fever) அமைவதால் பெற்றோர்கள் பிள்ளைகளை சன நெருக்கடியான இடத்துக்கு செல்வதை குறைத்தல், அடிக்கடி கை கழுவுதல் போன்ற நடவடிக்கையால் காய்ச்சல் அடிக்கடி வருவதை தவிர்க்கலாம்.
காய்ச்சல் நிவாரணியை தொடர்ச்சியாக கொடுப்பதன் மூலம் காய்ச்சல் வலிப்பு வருவதை தடுக்கலாமா?
ஆராய்ச்சிகளின் முடிவாக, Regular Antipyretocs பரசிடமோல் (Paracetamole), வுருபன் (Brufen) போன்ற காய்ச்சல் நிவாரணிகள் காய்ச்சல் வலிப்பு மீண்டும் வருவதைத் தவிர்ப்பதாக அறியப்படவில்லை . ஆனால், காய்ச்சலைக் குறைப்பதால் Comfotable ஆக வைத்திருக்க உதவும்.
காய்ச்சல் வரும்போது வலிப்புக்கான மருந்துகளைப் பாவிப்பதால் காய்ச்சல் வலிப்பு மீண்டும் வருவதை தவிர்க்க முடியுமா?
ஆம், காய்ச்சல் ஆரம்பித்த வேளையில் இருந்து வாய் வாழியாக (Oral) Diazepam, Clobazam CUTIN Anti Convuision மருந்துகளை இரு நாட்களுக்கு பாவிப்பதன் மூலம் வலிப்பு வருவது குறைவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
எனினும், இதனால் வரும் பக்க விளைவுகள் உதாரணமாக, அதிக தூக்கத் தன்மை (Transient Ataxiac) தன்னம்மறி நடத்தல் அதிகமாக இருப்பதால் இந்த மருந்துகளை காய்ச்சல் வலிப்பு இருக்கின்ற எல்லா குழந்தைகளுக்கும் சிபாரிசு செய்வதில்லை . ஆனபோதிலும், அடிக்கடி அதிகமான வலிப்பு வருபவர்களுக்கும், குழந்தையைப் பராமரிக்க திடமான நம்பிக்கையான பெற்றோர்கள் இல்லாதவிடத்தும், அதிக பதட்டமான பெற்றோர்கள் அல்லது அருகில் வைத்தியசாலை வசதி இல்லாதவர்களுக்கும் சிறுபிள்ளை விஷேட வைத்திய நிபுணர் இதைக் கொடுப்பதனை தீர்மானிக்கலாம்.
காய்ச்சல் வலிப்பு உள்ளவர்களை அடையாளங்காண எவ்வாறான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது?
சாதாரண காய்ச்சல் வலிப்புக்கு எந்த இரத்தப் பரிசோதனைகளோ, அல்லது Brain Imaging, EEG அவசியமற்றது. மேலும் இவை மிகையான செலவையும் ஏற்படுத்தும். சில சந்தர்ப்பங்களில் சில பரிசோதணைகள் செய்வதற்கு அவசியம் ஏற்படுகின்றது.
அதாவது மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் காய்ச்சல் வலிப்பு ஏற்படும் போதும்,
06 மாதத்துக்கும் 01 வயதுக்கும் உட்பட்ட சிறுபிள்ளைகள்,
முதல் தடவை காய்ச்சலுடன் வலிப்பு ஏற்படும்போதும் LP முள்ளந்தண்டின் நீர் பரிசோதனை செய்யவேண்டிய நிலை ஏற்படலாம். ஏனெனில் இந்த வயதுக்குள் மூளைக் காய்ச்சலையும், சாதாரண காய்ச்சல் வலிப்பையும் பிரித்தறிவது சிக்கலானதாகும். ஏற்கெனவே மருந்து கொடுத்து அதன் பிறகு காய்ச்சல் வலிப்பு ஏற்பட்டால் LP முள்ளந்தண்டின் நீர் பரிசோதனை அவசியமாகிறது. ஏனென்றால், Antibiotics முளைக் காய்ச்சலின் அறிகுறிகளை வெளிப்படுத்தாத தன்மை ஏற்படுகின்றது.
EEG பரிசோதனை யாருக்கு அவசியம் செய்யவேண்டும்?
இது சாதாரண பிள்ளைகளுக்கும், நரம்பியல் பிரச்சினை இல்லாத வர்களுக்கும், சாதாரண விருத்திப்படி நிலையுள்ள (Neurologically and Developmentally Normal Children) செய்யத் தேவையில்லை.
இரத்தப் பரிசோதனை எவ்வாறானவர்களுக்கு செய்யவேண்டும்?
இது, சில நேரம் காய்ச்சலுக்கான காரணத்தை அறிவதற்காக இரத்தப் பரிசோதனை செய்யப்படுகின்றது.
‘Neuro Imaging Scan அவசியம் செய்யவேண்டுமா?
இல்லை , அநேகமாக Scan செய்தால் இது சாதாரணமாக (Normal) ஆக இருக்கும். மேலும் Scan பரிசோதனையில் Management இல் எந்த மாற்றமும் வராது. கதிர்வீச்சு ஆபத்து இருக்கிறது.
காய்ச்சல் வலிப்பின் விளைவு ‘ பற்றிக் சொல்ல முடியுமா?
காய்ச்சல் வலிப்பு ஒரு பாரதூரமற்ற வருத்தமாகும். இது பிள்ளைகளின் Development சாதாரணமாகவே இருக்கும். இதனால் எவ்வித நரம்புப் பிரச்சினைகளும் ஏற்படாது. இது தானாகவே 06 வயதுக்குள் சரியாகிவிடும். 2 வீதமான சிறுவர்களுக்கு பிற்காலத்தில் Unpeoroked Seizure/ Epilepsy வரக்கூடும்.
காய்ச்சல் வலிப்பு இருக்கின்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எவ்வகையான அறிவுரைகளை வழங்க விரும்புகின்றீர்கள்?
காய்ச்சல் வலிப்பு காய்ச்சலால் ஏற்படுகின்ற 06 மாதத்துக்கும் 06 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு வரும் ஒரு வலிப்பாகும். இது மூன்றில் ஒரு பங்கினருக்கு மீண்டும் வரும் வாய்ப்புள்ளது. அதனால்
காய்ச்சல் வலிப்பு வருகின்றபோது பெற்றோர்கள் பதற்றப்படாமல் குழந்தையின் உடலை இடது பக்கமாக சரித்து (Left Lateral Position) தலையையும், கழுத்தையும் சற்று உயர்த்தி அவதானிக்கவேண்டும்,
வலிப்பு ஏற்பட்டு 2 அல்லது 3 நிமிடத்தைத் தாண்டும்போது அருகிலுள்ள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவேண்டும்,
வலிப்பு ஏற்படுகின்றபோது வாயால் எதையும் கொடுக்கவேண்டாம், அதேபோல் காய்ச்சல் நிவாரணிகளையோ அல்லது குழந்தையை ஈரத் துணியால் நனைப்பதை செய்யவேண்டாம்,
தேவையற்ற மருந்துகளை கொடுப்பதை தவிர்க்கவேண்டும் போன்ற விடயங்களில் பெற்றோர்கள் கவனம் செலுத்தவேண்டும்.
வைத்தியர் யு.எல்.பஸீனா
சிறு பிள்ளை வைத்திய நிபுணர்
MBBS, MD, (Paediatrics)
ஆதார வைத்தியசாலை
நிந்தவூர்
2,687 total views, 4 views today