பிள்ளைகள் காயங்களுக்கு உள்ளாகும்போது உடனடியாக Surgical Sprit or கொண்டிஸ் கொண்டு காயங்களை தேய்க்க வேண்டுமா?

நடைபயிலும் காலங்களில் or விளையாடும்போது குழந்தைகள் விழுந்து எழுவது வழக்கம்.

இதனால் அடிக்கடி சிராய்ப்புகள் (தேய்ப்புண்), காயங்கள் ஏற்படுவது சகஜம்.

அவ்வாறு நிகழும்போது மரத்திலிருந்து விழுந்தவனை மாடு மிதித்த கணக்காய் பெற்றோர்கள் Dettol, Surgical Sprit அல்லது Hydrogen Peroxide கொண்டு காயத்தை தேய் தேய் என தேய்த்து குழந்தையை இன்னும் வேதனைக்கு உள்ளாக்குகிறார்கள்.

இவை ஒன்றும் இல்லாதவிடத்து ஓடிக்களோன் (Colongue) சரி பாவித்து தமது பாசத்தை வெளிக்காட்டுகிறார்கள்.
ஆனால் இவை யாவுமே தவறான நடைமுறையாகும்.

சாதாரணமாக விழுந்து எழுகின்றபோது உண்டாகும் காயங்களை Clean Wound என்போம்.

இவற்றுக்கு மேலே குறிப்பிட்ட தொற்று நீக்கிகள் அவசியமில்லை.

மேலே குறிப்பிட்ட ஐதரசன் பெராக்சைடு அல்லது ஆல்கஹோல் கொண்ட தொற்று நீக்கிகள் புதிய காயங்களில் (Clean Wound) பயன்படுத்தப்படும் போது நல்ல நிலையில் உள்ள திசுக்களையும் அவை பாதிப்பதால் காயம் குணமடைவதை பிற்போடும். (It can harm the tissue and delay the healing process.)

மேலும் அந்த தொற்று நீக்கிகள் தோலை சிதைவடையச் செய்வதால் வலி, எரிச்சல் (irritation), சொறிச்சல் (itching) என்பவற்றை ஏற்படுத்தும்.

எனவே இவற்றை புதிய காயங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

❓என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க? ❓வைத்தியசாலைக்கு போனால் காயத்தை போட்டு தேய் தேய் என தேய்க்கிறார்களே?

இங்குதான் தவறான புரிதல் உள்ளது.
வைத்தியசாலைகளில் Surgical Sprit எனும் ஆல்கஹோல் கொண்ட தொற்று நீக்கியானது

🛑 1. ஊசி போடும் தோல் பகுதி மற்றும் சத்திர சிகிச்சைக்கு முன்னர் குறிப்பிட்ட தோல் பகுதியை கிருமி தொற்று நீக்கம் செய்ய பயன்படுகிறது.

இங்கே காயங்கள் சம்மந்தப்படாததால் முன்னர் சொன்ன பாதிப்புகள் நிகழாது.

🛑 02. காயங்களை பொறுத்தவரையில் நாட்பட்ட சீள் பிடித்த காயங்களுக்கே (Infected Wound) ஐதரசன் பர ஒட்சைட்டு மற்றும் Surgical Sprit பயன்படுத்தப்படுகிறது.

இங்கே இவற்றின் நோக்கம் சீள் பிடித்த பகுதியை சுத்தம் செய்தல் மற்றும் கிருமி தொற்றால் சிதைவடைந்த கலங்களை நீக்கி புதிய திசுக்கள் வளர இடம் அளித்தல்.

(இந்த செயன்முறையை அவதானித்த பல பெற்றோர்கள் பிழையாக விளங்கி புதிய காயங்களுக்கும் Surgical Sprit பிரயோகிக்கிறார்கள்.)

உண்மையில் புதிய காயங்களுடன் (Clean Wound) வைத்தியசாலைக்கு செல்லும் போது அவற்றுக்கு தூய நீர் (Distilled Water) or Normal Saline (உப்பு நீர்) கொண்டு சுத்தப்படுத்தியே மருந்து கட்டப்படுகிறது.

❓பிள்ளைகள் விழுந்து காயங்களுடன் வந்தால் என்னதான் முதலுதவி செய்ய வேண்டும்?

✅ முதலில் நமது கைகளை கழுவிக்கொள்ள வேண்டும்.

✅ காயத்திலிருந்து இரத்தம் வடிந்தால் தூய துணி அல்லது பஞ்சு கொண்டு சில நிமிடங்களுக்கு (இரத்தம் வெளியேறுதல் நிற்கும் வரை) அழுத்தி பிடிக்க வேண்டும்.

✅ சிராய்ப்பு காயங்கள் அல்லது இரத்தம் வெளியேறுதல் நின்ற காயங்களுக்கு ஓடுகின்ற நீர் கொண்டு (Tap Water) அல்லது Normal Saline (உப்பு நீர்) கொண்டு கழுவ வேண்டும்.
தேவை ஏற்படின் Soap பாவிக்கலாம்.

✅ சிராய்ப்பு போன்ற மென்மையான காயங்களுக்கு Bandage தேவைப்படாத போதும் அந்த காயங்கள் அழுக்காகக்கூடிய இடங்கள், ஆடைகளால் அடிக்கடி உராய்வு ஏற்படக்கூடிய இடங்களில் ஏற்பட்டால் Bandage ஆல் மூடுவது சிறந்து.

✅ ஆழமான காயங்களுக்கு Bandage போட்டு (தேவை ஏற்படின் Antibiotic Ointment பாவித்து) கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்கலாம்.

✅ ஆழமான காயங்கள் மற்றும் இரத்த ஓட்டம் நிற்காத காயங்களுக்கு அந்த இடத்தை துணி/பஞ்சினால் அழுத்தி பிடித்து வைத்திய உதவியை நாடவும்.

 

மேலதிக வாசிப்புகளுக்கு:

01. https://www.onhealth.com/content/1/wound_care

02. https://www.thehealthsite.com/diseases-conditions/why-you-should-not-use-alcohol-to-clean-wounds-b1016-441713/

03. https://www.webmd.com/first-aid/first-aid-tips

1,535 total views, 1 views today