By: Dy Ziyad Aia

பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படும் நோய்களில் ஒன்று இந்த கண்புரை எனும் Cataract.
கண்புரை (cataract) என்பது கண் வில்லையில் (lens) ஒளி ஊடுருவுதம் தன்மையைக் (transparency) குறைக்கும் ஒரு நிலைமை ஆகும்.
ஆங்கிலத்தில் இதன் பெயரான காட்ராக்ட் என்பது இலத்தீனில் நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் cataracta என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாக காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது. பேச்சுவழக்கில் ஆங்கிலத்தில் இது pearl eyed என்றும் அழைக்கப்படுகிறது.

கண்புரைகள் தன் இயல்பு-நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை

பல ஆண்டுகள் ஆன பின்பும் கண்புரை (பெரும்பாலும்) பெரியளவு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும் புரை முற்றிய பின்பு விழித்திரையை அடையும் ஒளியின் அளவு வெகுவாகக் குறைந்து பார்வையில் குறைவோ பார்வை முற்றிலும் பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம். இதை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமாயினும் ஒரு கண்ணிற்கும் மற்றொன்றிற்கும் இடையே கால இடைவெளி இருக்கும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மங்கலான அல்லது தெளிவற்ற பார்வை.

இரவு நேரங்களில் பார்ப்பதில் சிரமம்.

தெளிவாக பார்ப்பதற்கு பெரிய எழுத்துக்களாக இருத்தலும் கூடுதல் வெளிச்சமும் தேவைப்படுகிறது.

வண்ணங்கள் பிரகாசமற்று தெரிதல்.

சூரிய ஒளி அல்லது விளக்குகளை பார்க்கும் போது கண்களில் கூச்சம் ஏற்படுதல்.
இரட்டை பார்வை.

வெளிச்சமான/ஒளிரும் பொருட்களைச் சுற்றி ஒரு வளையம் அல்லது ஒளிவட்டம் தெரிதல்.

மருந்தின் முறை மற்றும் கண்கண்ணாடி எண்ணில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுதல்.

இதனை (Cataract ) எவ்வாறு உறுதிப்படுத்தலாம்?

சாதாரணமாக கண்ணின் கருவளையப்பகுதில் Torch Light கொண்டு பார்க்கும்போது புகைபோன்ற படிவுகள் கண்வில்லையில் காணப்படும்.

வைத்தியர் லென்ஸ், கருவிழி, கண்விழிப்படலம் மற்றும் அவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளிகளை சோதித்துப் பார்க்கும் ஸ்லிட் லேம்ப்/பிளவு விளக்கு பரிசோதனை.
கண்புரையை கண்டறிய விழித்திரை பரிசோதனை போன்றவற்றை மேட்கொண்டு உறுதிப்படுத்துவார்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

வயது அதிகரிப்பு. (பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்புரை ஏற்பட வாய்ப்புண்டு. புரைகளில் 80 சதவிகிதம் முதுமைப் புரையாகும்.)
நீரிழிவு நோய் போன்ற பிற உடல் நலப் பிரச்சினைகள்.
ஸ்டெராய்டு ( Prednisolone, Dexamethasone ) போன்ற மருத்துகளின் நீண்டகால பயன்பாடு.
புற ஊதா கதிர்களால் லென்ஸை உருவாக்கும் திசுக்களில் மாற்றங்கள்.
மரபணு கோளாறுகள்.
கண்ணில் அடிபடுவதால் வரும் புரை

இந்தப்புரை எந்த வயதினருக்கும் வரலாம். பலமான அடி, ஊசி முனைக்காயம், வெட்டுக்காயம், அதிகமான வெப்பம், இரசாயனப் பொருட்கள் போன்ற காரணங்களால் லென்ஸ் பாதிக்கப்பட்டு புரை உண்டாகலாம்.

முந்தைய கண் பிரச்சினைகள், Radiation என்பவற்றாலும் கண்புரை ஏற்படலாம்.

 

கண்புரை ஏட்படுவதை தவிர்ப்பது எப்படி?

கண்ணிலுள்ள லென்ஸ் மங்கலாவது வயதாவதால் ஏற்படக்கூடிய இயற்கையான விளைவாகும். வாழ்க்கை முறை மாற்றங்களை மெற்கொள்வதன் மூலம் கண்புரை நோய் ஏற்படுவதை தாமதப்படுத்த அல்லது தவிர்க்க முடியும்.

நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால், அதை நிறுத்திவிட முயற்சிக்கவும்.
நீண்டகால நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கண்புரை ஏட்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், நீரிழிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
நிறைய பழங்கள், காய்கறிகள் கொண்ட சம்ச்சீரான உணவு உட்கொள்ளவும்.
100% புற ஊதாகதிர்கள் A மற்றும் B ஆகியவற்றை தடுக்கும் குளிர் கண்ணாடிகளை (sunglasses with 100% UV A and B protection) அணியவும் மற்றும் அதிக வெயிலிலிருந்து காத்துக்கொள்ளவும்.

கண்புரை எனும் Cataract ஐ குணப்படுத்துவது எப்படி?

கண்புரை (Cataract) இன் ஆரம்ப நிலைகளில் பரிந்துரைக்கப்பட்ட கண் கண்ணாடிகள் பாவிப்பதன் மூலம் பார்வை திறனை மேம்படுத்தலாம்.

கண்ணாடிகள் உதவாத போது, கண் புரையை சரி செய்ய மற்றும் பார்வை திறனை மேம்படுத்த அறுவை சிகிச்சையே ஒரே வழியாகும்.
கண்புரைக்கான அறுவை சிகிச்சை என்பது நிரூபணம் செய்யப்பட்டது மற்றும் பாதுகாப்பானதாகும். இதனால் ஏற்படும் முன்னேற்றம் விரைவானதாகவும் தொந்தரவற்றதாகவும் இருக்கும். கண்புரையுடன் கூடிய லென்ஸ் ஒரு செயற்கை லென்ஸ் கொண்டு மாற்றப்படுகிறது. பின்னர் இது கண்ணின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.

FAQ:

கண்மருந்துகள் ( Eye Drops ) கொண்டு கண்புரையை குணப்படுத்த முடியுமா?
சமீபத்திய ஆய்வுகளில் சில மருந்துகள் சாதகமான பெறுபேறுகளை தந்தாலும் இன்னும் Trial நிலையிலேயே உள்ளன.

லேசர் கதிர்கள் மூலம் கண்புரையை நீக்க முடியுமா?
சில நோயாளிகள் சத்திர சிகிச்சைக்கு பயந்து Laser Treatment செய்ய முடியுமா என வினவுவதுண்டு. அப்படி செய்தவர்களையும் உதாரணம் காட்டுவது உண்டு.
உண்மையில் கண்புரை பாதிப்பால் பார்வை தெளிவின்மை லென்ஸின் உட்பகுதிகளில் ஏற்படுவதால், இது சாத்தியமில்லை.

ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின் நாளடைவில் கண்புரை நோயாளிகள் வேறுவித இரண்டாம் நிலை கண்புரையால் பாதிக்கப்படலாம். புதிய செயற்கை லென்ஸை தாங்கியிருக்கும் சதைப் பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால, பார்வை தெளிவின்மையை அதிகப்படுத்த வாய்ப்பு உண்டு. இதை லேசர் கதிர் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். இந்த எளிய அறுவை சிகிச்சை மூலம், சிறிய குளையை சதைப்பகுதியில் ஏற்படுத்தி, ஒளி புகும் வண்ணம் மருத்துவர் மாற்றியமைப்பார்.

கண்புரை அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண் கண்ணாடி அணியத் தேவையில்லையா?
கண்களுக்குள் பொருத்தப்படும் செயற்கை லென்ஸின் வகையை பொறுத்து இது மாறுபடும். மோனோஃபோகஸ் லென்ஸ்கள் (monofocal lens) பொருத்தப்பட்ட நோயாளிகளுக்கு, நடுத்தர தூரங்களில் உள்ளவற்றை படிக்க மற்றும் கண்-னியில் வேலை செய்ய கண்ணாடி தேவைப்படலாம். மல்டிஃபோகஸ் லென்ஸ்கள் பொருத்தப்பட்டவர்களுக்கு அனைத்து குறைகளும் நீக்கப்படுவதால், அவர்களுக்கு கண்ணாடி தேவைப்படாது.
உங்களுக்கு இவை பொருந்துமா என்பதை பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.

ஒரு கண்ணிலிருந்து மறு கண்ணிற்கு கண்புரை நோய் பரவுமா?
கண்புரை நோய் ஒரு கண் அல்லது இரண்டு கண்களிலும் தோன்றலாம். பொதுவாக வேறுபட்ட கால இடைவெளிகளில் தோன்றும் . ஆனால் அது ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு பரவாது.

Sources:-

http://nationaleyehospital.health.gov.lk/education.html

https://www.healthline.com/health/cataract

https://ta.vikaspedia.in/

457 total views, 1 views today