தனிமைப்படுத்தல் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தலின் பின்னரான வீட்டில் தனிமைப்படுத்தல் சம்பந்தமான சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டல்.
தமிழில் Dr Ziyad Aia

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவர்.
இவர்களுக்கு முதலாவது நாழும் 10 to 12 நாட்களுக்கிடையிலும் என இருமுறை PCR சோதனை செய்யப்படும்.

அதேநேரம் உள்நாட்டில் நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப் படுபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு 11 -14 ஆம் நாளுக்கிடையில் ஒரு முறையே PCR சோதனை செய்யப்படும்.

இதன் பின்னர் COVID-19 சம்பந்தமான புதிய தகவல்களின் அடிப்படையில் பின்வரும் நடைமுறை மேற்கொள்ளப்படும்.

Category 01:

வெளிநாட்டில் இருந்து வருகை தந்து 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் #வீட்டிலும்_14_நாட்கள்_தனிமைப்பட_வேண்டும்.

Category 02:

உள்நாட்டில் Positive ஆன நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்தலின் பின்னர் #வீட்டில்_தனிமைபட_அவசியமில்லை.

Category 03:

Positive ஆன நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டாலும் கட்டாய தனிமைப்படுத்தலின் பின்னர் #மேலதிகமாக_வீட்டில்_தனிமைபட_அவசியமில்லை.

Category 04:

COVID-19 நோய்த்தொற்று உறுதிப் படுத்தப் பட்டவர்கள் வைத்தியசாலை அல்லது தனிமை படுத்தல் நிலையங்களில் தனிமைப் படுத்தப்பட்ட பின்

A) நோய் அறிகுறிகள் இன்றியோ அல்லது சாதாரண நோய் அறிகுறிகளைக் காண்பித்தாலோ #வீட்டில்_தனிமைப்பட_அவசியமில்லை.

B) பாரதூரமான நோய் அறிகுறிகளை காண்பித்தவர் PCR சோதனை Positive ஆன திகதியில் இருந்து 21 நாட்கள் தனிமைப்பட வேண்டும். அந்த இருபத்தொரு நாள் என்பது PCR Positive ஆனதிலிருந்து தனிமைப்படுத்தல் நிலையம் + வைத்தியசாலை + வீடு என்பவற்றில் கழிக்கும் மொத்த நாட்களாகும்.

 

 

175 total views, 5 views today