இலங்கை மருத்துவத் துறை இனவெறியில் மூழ்கியுள்ளதா?
ஒரு உளவியல் மருத்துவ நிபுணரின் தற்போதைய சூழ்நிலையைப் பற்றிய கருத்து!
தமிழில்: Dr Ziyad Aia

இந்த நாட்டில் மரணித்த உடலின் தகனப் பிரச்சினைகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தின் மீது அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன், குறிப்பாக LRH இல் 20 நாள் குழந்தை சமீபத்தில் இறந்த சூழலில் மனக்குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளேன்.

நான் வெறும் மனநல மருத்துவர், அதனால் இதன் அறிவியல் பின்னணியில் போதுமான அளவு உரையாடவில்லை, இது தொற்று நோய் நிபுணர்களால் தெளிவாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ள நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின் பின்னணியில் தங்கள் அன்புக்குரியவர்களுக்காக வருத்தப்பட முடியாதபோது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்படும் மனரீதியான விளைவுகளை அடிப்படையாகக் கொண்டது எனது இப்பதிவு.

LRH இல் சமீபத்திய சம்பவம் எங்கள் வைத்திய நிபுணர்களின் தகவல்தொடர்பு மற்றும் நெறிமுறைகளை அவர்கள் கையாண்ட விதத்தில் இது மேலும் புலனாகிறது. சிகிச்சையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் குழந்தைக்கு தங்களால் முடிந்ததைச் செய்திருப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எவ்வாறாயினும், பிரச்சினை என்னவென்றால், எங்கள் நோயாளிகள் அல்லது அவர்களது குடும்பத்தினருடன் மோசமான செய்திகளை வெளியிடுவதில் (breaking bad news) அல்லது பச்சாதாபம் கொள்வதில் (empathising) நாங்கள் தோல்வியுற்றோம், மேலும் சம்பந்தப்பட்ட மூத்த தொழில்முறை வல்லுநர்கள் ( senior most professional) நம் நாட்டில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த பொறுப்பை சரியாக கையாள்வதில்லை.

தகனம் செய்வதற்கான கட்டாயப்படுத்தலின் விஞ்ஞான அடிப்படையை முன்வைக்க SLMA ICC ( Sri Lanka Medical Association Inter Collegiate Committee) க்கு முக்கிய பொறுப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

பல சிக்கல் நிலைமைகளின்போது எங்கள் மருத்துவத் தொழிலின் மெளனம் என்னை மிகவும் கவலையுறச் செய்கிறது. எங்கள் ஸ்தாபனமும் இனவெறியில் மூழ்கியிருக்கிறதா? அல்லது பயம் காரணமாக அறிவியல் மற்றும் நெறிமுறைகளை புறக்கணிக்கத் தயாராக இருக்கிறதா? என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் இழிவுபடுத்தப்பட்ட டாக்டர் ஷாஃபியின் பிரச்சினை இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம்! (classic case) டாக்டர் ஷாஃபி வெறும் MO / SHO இந்த குற்றங்களைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டபோது அவரை மேற்பார்வை செய்த மகப்பேறியல் நிபுணர் எங்கே இருந்தார்? ஜூனியர்களை அவர் மேற்பார்வை செய்யவிலையா?

ஒரு தேன் கூட்டைத் தொந்தரவு செய்ததற்கு வருந்துகிறேன், ஆனால் இனி அமைதியாக இருக்க முடியாது.
இதற்கு உங்கள் மனசாட்சியை ஒரு கணம் தொட்டுப்பாருங்கள்.

Dr Shehan Williams
Consultant Psychiatrist

ஆங்கில மொழிமூல பதிவுக்கு:
https://m.facebook.com/story.php?story_fbid=10158273101538477&id=526858476

173 total views, 3 views today