🤔⁉️ இலங்கை தேயிலை COVID-19 க்கு எதிராக செயற்படுமா? தமிழில் Dr Ziyad Aia
கொஞ்சம் நீளமான பதிவுதான். இதன் விஞ்ஞான அடிப்படையை விளங்குவோம்.

⁉️ தேநீரின் வைரஸ் தடுப்பு பண்புகள்: கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கு பக்க விளைவுகள் இன்றி தேநீர் (Black Tea) தனித்துவமான கஷாயமாக மாறக்கூடும்?

💓 Authors
Dr. Nelum Piyasena, Senior Research Officer, Biochemistry Division
Dr. Mahasen A B Ranatunga, Principal Research Officer, Plant Breeding Division
Dr. L S K Hettiarachchi, Director, Tea Research Institute of Sri Lanka

தமிழில் Dr Ziyad Aia

கொரோனா வைரஸ் நோய் 2019 (COVID-19) 2019 Noval Corona Virus ஸால் (SARS-CoV-2 – Severe acute respiratory syndrome coronavirus 2) ஏற்பட்டது. இந்நோய் இன்று வரை 6 கண்டங்களில் 195 க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவாகியுள்ளது. (ஆதாரம் 01)

COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, வைரஸ் தடுப்பு முறைகள் மற்றும் மருந்துகளை ஆராய உலகம் முழுவதும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Thaiwan ல் சமீபத்திய ஒரு ஆய்வில், பாரம்பரிய சீன மருத்துவ சேர்மங்களின் SARS-CoV-2 வைரஸ் தடுப்பு செயல்பாடு பற்றி ஆராயப்பட்டது.
அங்கு பாரம்பரிய மருந்துகளில் உள்ள 64 சேர்மங்களின் இரசாயன கட்டமைப்பு , அவை Virus களின் RNA களுக்கு எதிரான செயற்பாடு அதாவது RNA- dependent RNA polymerase (RdRp) எனும் நொதியத்துக்கு எதிரான செயட்பாடு ஆராயப்பட்டது. இந்நொதியமே SARS-CoV-2 மனிதர்களின் சுவாசப்பாதையில் உள்ள Epithelial கலங்களில் SARS-CoV-2 பெருக உதவுகிறது. எனவே இந்நொதியத்தை தடை செய்வதே இப்பரிசோதனையின் பின்னணியில் உள்ள தர்க்கமாகும்.

ஆய்வு செய்யப்பட்ட 64 கலவைகளில், RdRp நொதியத்தை இலக்காகக் கொண்ட SARS-CoV-2 தடுப்பானை உருவாக்குவதற்கான பிரதான சேர்மானமாக Theaflavin இருப்பதனை ஆரம்ப முடிவுகள் (Preliminary results) தெரிவிக்கின்றன.
இருப்பினும் இது இன்னும் மருத்துவ பயன்பாட்டுக்கு உறுதிப்படுத்தப்படாத ஆய்வு. இதற்கு மேலும் பல ஆய்வுகூட பரிசோதனைகள் தேவை. (ஆதாரம் 2 – இதுவே இலங்கை தேயிலை சபையின் கூற்றுக்கு முக்கிய ஆதாரமாக கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வறிக்கையை இந்த Link க்கு சென்று பார்வை இடலாம். https://doi.org/10.1002/jmv.25761 )

இந்த Theaflavins என்பவை antioxidant polyphenols. கருப்பு தேயிலை (black tea) தயாரித்தலின் போது (enzymatic oxidation) இது ஏற்படுகிறது. கருப்பு தேயிலை உற்பத்தி செயல்பாட்டில் இது பொதுவாக “நொதித்தல் (“fermentation”) ” என்று குறிப்பிடப்படுகிறது.

உற்பத்தி செயல்முறையின் வேறுபாடு காரணமாக பச்சை தேயிலையை விட கருப்பு தேயிலையிலேயே Theaflavin அதிகளவு காணப்படுகிறது.

இதற்கு முன்னரான பல ஆய்வுகளில் தேயிலையில் காணப்படும் catechins, methylxanthines (caffeine, theophylline and theobromine) Virus களுக்கு எதிரான செயற்பாடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஏற்கனவே வேறு இடங்களில் வெளியிடப்பட்ட ஆய்வுகளில் (Literature) Virus களுக்கு எதிரான சேர்மங்களின் இருப்பிடமாக கருப்பு தேநீரின் திறனை இங்கே முன்னிலைப்படுத்த விரும்புகிறோம். இதன் செயற்பாடு Influenza Virus க்கு எதிராகவும் தொழிற்படுவதற்கும் பல ஆய்வுகள் உள்ளன.

இருப்பினும், SARS-CoV-2 (COVID-19) க்கு எதிரான கருப்பு தேயிலையின் (Black Tea) ஆன்டிவைரல் செயல்பாடு குறித்த தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் SARS-CoV-2 பெருக்கத்தின் RdRp செயல்பாட்டைத் தடுக்கும் ஒரு நம்பிக்கைக்குரிய பொருளாக Theaflavin ஐ கருதலாம்.

தேயிலை என்பது தண்ணீருக்குப் பிறகு உலகில் மிகவும் பரவலாக நுகரப்படும் விலை குறைந்த ஒரு பானமாகும். இதில் ஊட்டச்சத்து குறைவாக காணப்பட்ட போதும், நல்ல தேநீர் புத்துணர்ச்சியூட்டுகிறது,மனதை இலேசாக்க தூண்டுகிறது, நிரூபிக்கப்பட்ட சுகாதார நன்மைகள் உட்பட நல்வாழ்வின் உணர்வைத் தருகிறது. தேயிலை நுகர்வு காரணமான சுகாதார நலன்கள் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றை கொண்டவை.

தேயிலையின் ஆரோக்கிய நன்மைகளை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் முக்கிய சேர்மானங்கள் catechins, alkaloids (caffeine, theobromine and theophylline), amino acids, volatile compounds, carbohydrates, lipids, vitamins, inorganic elements and organic acids. கருப்பு தேயிலையில் polyphenols அதிகளவு காணப்படும். இவற்றால் பல சுகாதார நன்மைகள் கிடைப்பதாக ஆய்வகள் (Observational and clinical studies) கூறுகின்றன. (ஆதாரங்கள் 3, 4 ,5)

மேலும் பல ஆய்வுகளில் தேயிலையானது Cholesterol இன் அளவை குறைத்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல், இருதய நோய்களை தடுத்தல் என்பவற்றுக்கு உதவுகிறது. இதில் காணப்படும் polyphenols வைரசுகளுக்கு எதிரான மற்றும் Cancer க்கு எதிரான இயல்புகளையும் கொண்டுள்ளது. (ஆதாரம் 3)

தேயிலையில் காணப்படும் Alkaloid ஆன Theophylline எனும் பதார்த்தம் பல சுவாச நோய்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. Asma, இருமல் போன்ற பல சுவாச நோய் நிலைமைகளில் வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் Theophylline (Deryphillin) எனும் மருந்து தேயிலையில் காணப்படுகிறது. இது சுவாச குழாய்களை விரித்து சுவாசித்தலை இலகுவாக்குகிறது.

தேயிலையில் காணப்படும் சில இரசாயனங்கள் HIV க்கு எதிரான செயட்பாடுகளையும் கொண்டுள்ளன. (ஆதாரம் 5)
தேயிலையின் polyphenol, catechins blended with Theaflavins என்பவை Influenza வுக்கு எதிரான செயற்பாட்டுக்காக சர்வதேச காப்புரிமையையும் கொண்டுள்ளன.  (ஆதாரம் 6)

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுகளால் பொதுவாக ஏற்படும் காய்ச்சல் மற்றும் தடிமலை கட்டுப்படுத்துவதில் தேநீரின் சாத்தியமான நன்மைகளை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. (ஆதாரங்கள் 7,8)

ஜப்பானில் நடத்தப்பட்ட தொற்றுநோயியல் ஆய்வுகள், தினசரி பச்சை தேயிலை (Green Tea) அருந்துவது மற்றும் வாய் கொப்பளிப்பது பெரியவர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி குழந்தைகளில் Influenza காய்ச்சல் பாதிப்பைக் குறைக்கிறது என்பதை நிரூபிக்கிறது. (ஆதாரங்கள் 9,10). இதே பலன் கருப்பு தேயிலை அருந்துவதாலும் கிடைக்கிறது. (ஆதாரம் 11)

ஆய்வுகளில் தேயிலையில் காணப்படும் antioxidants மற்றும் L-Theanine நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது (enhance immune system) கண்டறியப்பட்டுள்ளது. (ஆதாரம் 4)

ஒருவரின் சொந்த நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உதவுவதன் மூலமும், பலப்படுத்துவதன் மூலமும், நோய்களை எதிர்த்துப் போராடுவதில் ஒருவரின் உள்ளார்ந்த திறனைத் தொடர்ச்சியாக உயர்த்துவதற்கும் அல்லது வளர்ப்பதற்கும் தினசரி தேநீர் நுகர்வு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது மேற்கூறியவற்றிலிருந்து தெளிவாகிறது.

தேயிலை சிகிச்சை விளைவுகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மீதான அதன் அறியப்பட்ட நன்மைகள் பற்றிய ஆய்வுகள் மூலம் இதனை அனுமானிக்கப்படலாம், RNA வைரஸ்கள் குடும்ப கொரோனா வைரஸ்கள் இதற்கு விதிவிலக்கல்ல. சுவாசக் கோளாறுகளுக்கு தேயிலையின் Theophillin னால் நிவாரணம் பெறலாம். Theaflavin உடலுக்கு அதன் சொந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதன் மூலம் நுண்ணங்கிகள் பெருகாமல் தடுக்கும்.

SARS-CoV-2 க்கு எதிரான ஆன்டிவைரல், மருந்தியல் செயல்பாடு பற்றிய தேயிலையின் தகவல்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் SARS-CoV-2 பெருகுவதற்கு உதவும் RdRp செயல்பாட்டைத் தடுக்கும் ஒரு நம்பிக்கைக்குரிய பொருளாக Theaflavin அறியப்பட்டுள்ளது. COVID-19 க்கு மருந்து தேடும் உலகுக்கு ஒரு செய்தி இதன்மூலம் சொல்லப்படுகிறது.

💓 நாளாந்தம் தேநீர் அருந்துவது, உங்கள் சொந்த நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 💓

🤔 Take Home Message By Dr Ziyad Aia: 🤔

 01. இந்த ஆய்வறிக்கையில் எங்குமே தேயிலை COVID-19 க்கான மருந்து என்றோ முழுமையாக தடுக்கும் என்றோ கூறப்படவில்லை. ஆனால் அதில் காணப்படும் Theaflavin COVID-19 வைரசுக்கு எதிரான செயற்பாடுகளை கொண்டுள்ளதற்கு ஆதாரம் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வெறும் ஆரம்பகட்ட சோதனை (Preliminary Study) மாத்திரமே. இதனை உறுதிப்படுத்த இன்னும் நிறைய ஆய்வுகள் தேவை.

 02. அப்போ Theaflavin ஐ மருந்தாக தயாரித்து வழங்கலாமே? என்றால் அதற்கு இன்னும் பல ஆய்வுகூட பரிசோதனைகள் மற்றும் Clinical Trials செய்யப்பட்டு நிரூபிக்கப்பட வேண்டும்.

 03. நாங்கள் இவ்வளவு காலமும் தேநீர் தானே அருந்துகிறோம் அப்போ எங்களுக்கு COVID-19 வராதா? என்றால் இது வெறும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மருந்தாகவோ, தடுப்பு மருந்தோ அல்ல. ஊடகங்களில் இதனை மிகைப்படுத்தப்பட்ட வசனப்பிரயோகங்கள் அலங்கரிக்கின்றன

 04. இந்த ஆய்வறிக்கையை பார்த்துவிட்டுத்தான் நாங்கள் தேநீர் அருந்தப்போகிறோமா? என்றால் அதுவும் இல்லை. தேநீர் என்பது பெரும்பாலானோர் வழமையாக அருந்தும் ஒரு பானம். இப்போது GMOA வின் பால்மாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பால்மாவுக்கு நிலவும் தட்டுப்பாடுகளால் எப்படியும் தேநீர் அருந்த நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

 05. COVID-19 ஐ பயன்படுத்தி பல உலக நாடுகள் “எரியும் வீட்டில் பிடுங்கின மட்டும் இலாபம்.” என்ற குறிக்கோளில் இருக்கும்போது எமது நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தேயிலையை விளம்பரப்படுத்துவதற்கும் இந்த ஆய்வுகளை வெளியிட்டு இலங்கை தேயிலை சபை முயற்சி செய்து வருகிறது. வெறுமனே தேயிலை COVID-19 குணப்படுத்துமா? or தடுக்குமா? என கேள்வி கேட்டு மொக்கை ஆக்காமல் அதில் அடங்கி உள்ள விஞ்ஞான அடிப்படையை ஏனையவருக்கும் புரியவைப்போம்.
( அதனாலதான் அமைச்சர் ஆங்கிலத்தில் பேசுகிறார். https://youtu.be/5RssnlR3JJY )

 06. உலக நாடுகளே COVID-19 இன் வேகமான பரவல் மற்றும் மரணங்களால் அல்லலுறும்போது இலங்கை போன்ற நாடுகளில் அதன் பரவல் வேகம் குறைவாக இருப்பதற்கு சிறந்த தடுப்புமுறைகள், அதிகளவு சோதனைகளை மேற்கொண்டு நோயாளிகளை கண்டுபிடிக்காமை என்பவற்றுக்கு மேலாக வேறு சில காரணங்களும் இருக்கலாம்.

 07. தேநீருக்கு சீனி சேர்த்து அடிக்கடி அருந்துவது சக்கரை வியாதியை அதிகரிக்கலாம்.
தேனீரை வெறும் வயிற்றில் அடிக்கடி குடிக்கும்போது Gastritis போன்ற நோய் நிலைமைகளும்;
சாப்பிட்டவுடன் குடிக்கும்போது இரும்பு சத்து உடலில் அகத்துறிஞ்சப்படுத்தலில் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்பதையும் கவனிக்க.
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.”

💓 இப்பதிவின் ஆங்கில மூலமான விரிவான பதிவுக்கு
https://www.facebook.com/202837120395987/posts/529072204439142/

💓 இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்கள் (References)

1. Lung J, et al. (2020) The potential chemical structure of anti-SARS-CoV-2 RNA- dependent RNA polymerase. J Med Virol. ;1–5. https://doi.org/10.1002/jmv.25761

2. Guangdi Li and Erik De Clercq (2020) Therapeutic options for the 2019 novel coronavirus (2019-nCoV) Nature Rev. Drug Discovery Vol 19 :149 -150

3. McKay, D L et al. (2011) Teas, tisanes and health. Teas, cocoa and coffee: plant secondary metabolites and health: 99-142.
4. Sharangi, A B (2009) Medicinal and therapeutic potentialities of tea (Camellia sinensis L.) –A review. Food Res Int. 42.5-6: 529-535.

5. Hamilton-Miller, J M (1995) Antimicrobial properties of tea (Camellia sinensis L.). Antimicrobial agents and Chemotherapy 39.11: 2375.

6. Shimamura, T. and Y. Hara. (1991). Preventive and curative medicament against infection with influenza virus, containing tea or tea polyphenols. European patent EP 417385 A2.

7. Nakayama et al. (1994) Inhibition of the infectivity of influenza virus by black tea extract. J Jpn Assoc Infect Dis 21: 824-829

8. Nakayama et al. (1993) Inhibition of the infectivity of influenza virus by tea polyphenoles. Antiviral Res 21: 589-299

9. Matsumoto K et al. (2011) Effects of green tea catechins and thaeanine on preventing influenza among healthcare workers; A Randomized control trial. BMC Complement Altern Med 11:15

10. Park M et al. (2011) Green tea consumption is inversely associated with the incidences of influenza among schoolchildren in tea plantation area of Japan. J Nutr 141: 1862-1870

11. Iwata M et al. (1997) prophylactic effect of black tea extract as gargle against influenza. J Jpn Assoc Infect Dis 71: 487-49

2,517 total views, 1 views today