சமீபத்தில், தனிமைப்படுத்தல் (Quarantaine) குறித்து பரவலான பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன, இத்தாலி மற்றும் தென்கொரியாவிலிருந்து இலங்கைக்கு பயணிக்கும் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் (Quarantaine) என்றால் என்ன?
தனிமைப்படுத்தல் என்பது ஒரு நாட்டிற்குள் நோய் நுழைவதற்கான அல்லது பரவுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கத் தொடங்கப்படும் ஒரு செயல்முறையாகும். நோயைக் காவுவதற்கான அதிக நிகழ்தகவு கொண்ட, அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து வரும் மக்கள் இந்தச் சட்ட விதிகளின் கீழ் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதிக ஆபத்து உள்ள இந்த நாடுகளிலிருந்து வரும் சிலர் வெளிப்படையாக ஆரோக்கியமாக இருக்கக்கூடும், ஆனால் நோயின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளின் வளர்ச்சிக்கு நேரம் ஆகக்கூடும்.
இலங்கையின் தனிமைப்படுத்தப்படும் சட்டம் ஒரு சக்திவாய்ந்த சட்டமாகும். அதன்படி, தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட ஒருவர் அதிகாரிகள் வழங்கிய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், அபராதம் அல்லது சிறைவாசம் கூட ஏற்படக்கூடும்.
இலங்கையர்களாகிய நாம் இந்த தனிமைப்படுத்தப்படும் செயல்முறைக்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டும், ஏனெனில் நாங்கள் சட்டப்படி அவ்வாறு செய்ய கடமைப்பட்டுள்ளோம் என்பது மட்டுமல்லாமல், நமது தேசத்தின் மற்றும் நமது அன்புக்குரியவர்களின் பாதுகாப்பிற்கும் இது மிகவும் முக்கியமானது.
A message by: Health Promotion Bureau, Ministry of Health
உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/
COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.
1,187 total views, 1 views today