நாட்டில் நிலவிவரும் அதிக வறட்சி காரணமாக அரசாங்கம் செயற்கை மழையை பொழிய வைக்கும் முயற்சியை மேற்கொண்டது.
பல ஊடகங்களிலும் இது முதல் முறையான முயற்சி என்று கூறப்பட்டது.

ஆனால் இலங்கையில் முதலாவது செயற்கை மழை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் 1970இல் மேற்கொள்ளப்பட்டது.
அது பெரிய அளவில் வெற்றி அளிக்கவில்லை. (Only Cloud Seeding)

1980 களிலும் இதுபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றி அளித்ததாக CEB Chief Engineer Mr Jayasinghe தெரிவித்தார்.

செயற்கை மழை பொழிவிக்கும் முறை 1949 – 1955 காலப்பகுதியில் தாய்லாந்து மன்னர் Bhumibol Adulyadei இன் காலத்தில் தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்டு வெற்றி அளித்தது.
இவரே செயற்கை மழையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
தற்போதும் தாய்லாந்தில் செயற்கை மழைக்கென Royal Rain Making Agricultural Aviation Department உள்ளது.
இதன் தொழில் நுட்பம் 2005 இல் காப்புரிமை பெற்றது. (Thai Technology.)
இந்த Department உடனேயே இலங்கை அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொண்டு அவர்கள் மூலம் பயிற்சி பெற்று இந்த செயற்கை மழை பொழிவித்தலை மேற்கொள்கிறது.

இம்முறையை ஏற்கனவே இந்துநேசியா, மலேசியா, சீனா அமேரிக்கா போன்ற நாடுகள் பயன்படுத்துகின்றன.

செயற்கை மழை என்பது மேகங்களை புதிதாக உருவாக்குவது அல்ல. இருக்கும் மேகங்களை மழையாக பொழிவிப்பது.
இதனை செயற்படுத்த ஈரப்பதம் 60 வீதமாகவும் காற்றின் வேகம் 20 knots ஐவிட குறைவாகவும் இருக்க வேண்டும்.

இது மூன்று படிமுறைகளில் மேற்கொள்ளப்படும்.
01. Cloud Triggering or Seeding:-
விமானம் மூலம் சோடியம் குளோரைடு(கறியுப்பு) ஆங்காங்கே காணப்படும் மேகங்கள் மீது தூவப்படும்.
இதனால் சிதறிக்கிடந்த மேக துணிக்கைகள் ஒன்று சேரும். (Seeding)

02. Cloud Fattening:-
ஒன்று சேர்ந்த முகில்களை மேலும் ஒன்று சேர்த்து தனி ஒரு படையாக கொண்டு வர கல்சியம் குளோரைட்டு மற்றும் கால்சியம் ஒக்சலேட் விசிறப்படும்.
(கல்சியம் குளோரைட்டு என்பது நாம் உண்ணும் உலர் உணவு பொதிகளில் நீரை அகத்துறிஞ்ச சிறிய filter பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டிருக்கும் பதார்த்தம்.)

03. Cloud Attacking:-
இதுவே மழை பொழிவிக்கும் கடைசி நிகழ்வு. ஏற்கனவே ஒன்று சேர்ந்த மேகங்களின் மேலாக ஒரு விமானமும் கீழாக ஒரு விமானமும் சென்று
A. மேலிருக்கும் விமானம் சோடியம் குளோரைட்ஐயும் கீழிருக்கும் விமானம் யூரியாவையும் தெழிக்கும்.

அல்லது
B. மேலிருந்து விமானம் யூரியாவையும் கீழிருந்து விமானம் உலர்ந்த Ice ஐயும் தெறிக்கும்.

யூரியா, சோடியம் குளோரைடு க்கு பதிலாக முன்னர் சில்வர் அயடைட் பாவிக்கப்பட்ட போதும் அதன் விலை, மற்றும் சூழல் மாசுபடுதல் காரணமாக புதிய தொழில்நுட்பத்தில் அவை பாவிக்கப்படுவதில்லை.

செயற்கை மழையின் நன்மைகள் என்ன?
01. இலங்கையில் இது பிரதானமாக மின் உற்பத்தியை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
சென்ற ஆண்டு வரை இலங்கையில் மின் உற்பத்தி 50% நீர் மின்சக்தியையும் 50% நுரைச்சோலை அனல் மின் நிலையத்தையும் நம்பி இருந்தது.
இப்போது நீர் மின் உற்பத்தி 40% ஆக குறைந்து அனல் மின்னுற்பத்தி 60% ஐ தாண்டுகிறது.
ஒரு Unit நீர் மின் உற்பத்திக்கு 2 ரூபாவும் ஒரு Unit அனல் மின் உற்பத்திக்கு 25 ரூபாயும் செலவாகிறது.
இந்த செலவினத்தை கருத்தில் கொண்டே செயற்கை மழை பொழிவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

02. விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம்.
பல விவசாய நிலங்கள் வரட்சி காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இருப்பதனால் செயற்கை மழை அதன் மூலம் கிடைக்கும் நீர் பாசனம் வருமானத்தை ஈட்டித் தரும் என நம்பப்படுகிறது.
( யூரியாவை வேறு இலவசமாக தூங்கிவிடுகிறார்கள்.☺)

செயற்கை மழையின் தீமைகள்:-
01. செயற்கை மழை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறது.
இதன் Cost-Benefit Anslysis, Environmental Impact Study இன்னும் சரியான முறையில் மேற்கொள்ளப்படாததால் இதன் செலவுக்கு ஏற்ற நன்மை கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

02. இலங்கையில் ஏற்கனவே வடமேல் மாகாணத்தில் காரணம் அறியப்படாத சிறுநீரக செயலிழப்புக்கு(CKDu) கட்மியம் (Cd), மெக்னீசியம் (Mg) போன்ற பார உலோகங்கள் நீரில் கலப்பது, மற்றும் விவசாய இரசாயனங்கள் நீரில் கலப்பது காரணமாக கருதப்படுகிறது.
இலங்கையில் சிறுநீரக செயலிழப்பில் 15% இந்த Chronic Kidney Disease of Unknown Eitiology உள்ளது.
நீருடன் கல்சியம் ஆக்சலேட் போன்றவை கலக்கும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றும் வாய்ப்புகள் அதிகம்.

அதேநேரம் silver iodide இனால் பல பாதிப்புகள் ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டாலும் இலங்கையில் செயற்கை மழை பொழிவிப்பில் அது பாவிக்கப்படவில்லை.

இதே நேரம் CEB Chief Engineer Kapila Jayasinghe கருத்து தெரிவிக்கையில் செயற்கை மழை பாவிக்கும் இரசாயனங்களால் பாதிப்பில்லை என்றார்.

03. செயற்கை மழை பொழிவிக்கும் ஆலோசனை குழுமத்தில் கீழுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட்டிருந்தாலும் சுகாதார அமைச்சின் பிரதிநிதிகளோ அதன் பரிந்துரைகளோ உள்வாங்கப்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.
Committe Members:- CEB, the Sri Lanka Air Force, the Power and Energy Ministry, the Mahaweli Authority, the Irrigation Department, the Central Environmental Authority, the Met Department and the Department of Agriculture.

04. செயற்கை மழையை தொடர்ந்து பொழி விப்பது சம்மந்தமான தீர்மானங்கள் இன்னும் இல்லை. இது சம்மந்தமான தீர்மானம் அதன் செலவினத்தை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்.
உதாரணமாக தாய்லாந்தில் செயற்கை மழை பொழிவிக்க 24 பிரத்தியேகமான விமானங்கள் பாவிக்கப்படுகின்றன. அவற்றின் வெளிப்பகுதி இரசாயனங்களால் பாதிப்பு ஏற்படாத விஷேட கவசத்தால் தயாரிக்கப்பட்டது.
இலங்கையில் தற்போது பாவிக்கும் விமானங்கள் படிமுறை மூன்றின் போது பாதிப்புக்கு உள்ளாகி அவற்றின் செலவினமும் செயற்கை மழையுடன் சேர வேண்டி வரும்.

கவனிக்க வேண்டியவை:-
மழை பொழிவதற்கு காடுகள் இன்றியமையாதவை. மரநடுகையும் காடழிப்பை தவிர்த்தலும் முக்கியமானது.

இலங்கையின் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை 2000 mm.
ஆனால் பாகிஸ்தானில் வருடாந்த மழைவீழ்ச்சி 300 தொடக்கம் 400mm. இருப்பினும் அவர்கள் நீர்நிலைகளை சரியாக பேணுவதன் மூலம் தன்னிறைவு காண்கின்றனர்.
இலங்கையில் சரியான நீர் பராமரிப்பு இன்மையால் மழைநீர் பல நேரங்களில் எந்த பிரயோசனமும் இல்லாமல் கடலில் கலக்கிறது.

 

Sources:-

01. Artificial rain: Climatologist urges Govt. to conduct a trial first

http://www.sundaytimes.lk/190127/news/artificial-rain-climatologist-urges-govt-to-conduct-a-trial-first-333251.html

02. Power Ministry to set up artificial rain department

http://www.sundaytimes.lk/180225/news/power-ministry-to-set-up-artificial-rain-department-283696.html

2,703 total views, 1 views today