COVID-19 இன் மறுபக்கம் 06:
இரத்த வங்கியில் இரத்தம் தட்டுப்பாடு.
இலங்கையில் நாளொன்றுக்கான இரத்த தேவை சராசரியாக 1250 பைண்ட்கள்.
By: Dr Ziyad Aia

பொதுவாக May, June மாதங்களில் வழமையாகவே இரத்த தட்டுப்பாடு ஏட்படுகிறது. காரணம் April பள்ளி விடுமுறை, புதுவருட களியாட்டங்கள், குடும்ப சுற்றுலா என மக்கள் வேறு திசைகளை நோக்கி செல்வதால் அது ஏற்படுகிறது.

இம்முறை அது இன்னும் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளது.
காரணம், COVID-19 க்கான Lockdown காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வெளியே செல்ல முடியாத நிலை. இதற்குள் இரத்த தானம் பற்றியெல்லாம் சித்திக்க முடிவதில்லை. இஸ்லாமியர்களை பொறுத்தவரையிலும் இப்போது நோன்பு காலமாகையால் அதிலும் சிரமம் ஏற்படுகிறது.

நமது இரத்தத்துக்காக பல நோயாளிகள், சிறார்கள் (Talassaemia நோயுடன்) உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 

நாம் வழங்கும் ஒரு பைண்ட் இரத்தம் 3 உயிர்களை காக்கும்.

 

இது சம்பந்தமான மேலதிக விளக்கங்கள், இரத்த தானத்தால் அதிகளவு நன்மை அடைவோர் பற்றிய விபரங்களுக்கு இந்த Link ஐ பார்க்கவும்:
http://www.lankahealthtamil.com/sri-lanka-blood-donation-b…/

Lockdown இருந்தாலும் பின்வரும் இலக்கங்களை தொடர்புகொண்டு உங்களுக்கு வசதியான நேரத்தில் அருகிலுள்ள வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு சென்று இரத்த தானம் செய்யலாம்.
0115332153 or 0115332154

அல்லது கீழுள்ள இணைய முகவரியூடாக சென்று உங்களுக்கு வசதியான திகதி, நேரம் என்பவற்றை தெரிவுசெய்து நீங்கள் Booking செய்து உதவலாம்.

http://nbts.life

பதிவு செய்யும் முறையை காணொளியில் காண்க. ( 40 Secs )

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

70 total views, 1 views today