பாக்கு, இனிப்பு பாக்கு உண்போருக்கு உருவாகும் Oral Submucous Fibrosis மற்றும் வாய்ப்புற்றுநோய் பற்றிய விழிப்பூட்டல்.
By: Dr Yoonus Shiraj Mohamed, Consultant Oral Maxillofacial (OMF) Surgeon

ஓரல் சப் மியுக்கஸ் (F) பைப்றோசிஸ் தென் இந்தியா, பாகிஸ்தான், பங்களா தேஷ், இலங்கை போன்ற நாடுகளில் பரவலாகக் காணப்படும் இந்நோயானது நீண்டகால இடைவெளியில் வாய்க்குழி மேலணியின் கீழ் ஏற்படும் ஒரு மாற்றமாகும்.

வாய்க்குழி மேலணியின் கீழ் காணப்படும் இழையங்கள் (Sub mucosa) தடிப்படைவதன் மூலம் ஏற்படும் இந்நோ யினால் வாயில் தொடர்ச்சியான எரிவு, காரமான உணவுகளை உற்கொள்ள முடியாது போதல், வாய்க்குழி உலர்ந்து உணவின் சுவை அற்றுப்போதல் போன்ற ஆரம்ப அறிகுறிகள் ஏற்படும்.

பிந்திய நிலையில் நாக்கை நீட்டுவதில், அசைப்பதில் சிரமம் அத்துடன் பேசும் குரலில் மாற்றம், படிப்படியாக வாயைத் திறப்பதில் கஷ்டமேற்பட்டு இறுதியில் முற்றாக வாயைத் திறக்க முடியாத நிலை ஏற்படும்.

இந்நோய்க்கு தகுந்த முறையில் சிகிச்சையளிக்கப்படாவிடின் வாய்ப்புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

இந்நோய்க்கான காரணங்கள்:

வெற்றிலை சாப்பிடுவோர் வெற்றிலையுடன் சேர்த்து பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை மற்றும் வாசனைத்திறவியங்களை பயன்படு த்துவர். இவற்றுள் வெற்றிலை மற்றும் புகையிலையினால் வாய்ப்புற்று நோய் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

நம்மில் அனேகமானோர் வெற்றிலை போடுவதினால் ஏற்படும் பிரதிகூலங்கன அறிந்திருப்பதனால் அதைத் தவிர்த்துக் கொள்ளும் அதே நேரம் பாக்கு தீமை பயக்காது என்று நினைத்து அதை மெல்லும் பழக்கமுடையவர்களாக இருக்கின்றனர்.

ஓரல் சப் மியுக்கஸ் (F)பைப்றோசிஸ் நோயானது 100 வீதம் பாக்கினால் மட்டுமே ஏற்படுவது ஆராய்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாக்கில் (Arecanut) காணப்படும் இரசாயனப்பதார்தமான – எறிகொலீன்” (Arecoline) மூலமாகவே வாய்க்குழி மேலணியின் கீழ்ப்பகுதி தடிப்படைந்து இந்நிலை ஏற்படுகின்றது. பாக்கை நேரடியாக சாப்பிடாமல் இனிப்பு கலந்த வர்த்தகரீதியாக பைக்கற்றுகளில் அடைக்கப்பட்டு வரும் பாக்கை சாப்பிடுவோரில் இந்நோய் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

Freezed dried products என அழைக்கப்படும் Pan masala, Guthka, Mawa மற்றும் Pan parag போன்ற இப்பாக்கு வகைகளில் “எறிகொலீன்” அதிக செறிவாகக் காணப்படுவதனால் இந்நோயானது பாடசாலைப் பிள்ளைகளிடையேயும் காணப்படுவது கவலைக்குறிய விடயமாகும்.

இந்தியாவில் 1980 ஆம் ஆண்டு 250 000 கக் காணப்பட்ட இந்நோயாளர்களின் எண்ணிக்கை 1993 ஆம் ஆண்டு 2,000 000 ஆக அதிகரித்துக் காணப்பட்டது. தற்போது இனிப்பு கலந்த பாக்கு வகைகளின் பாவனை அதிகரித்தி ருப்பதால் இந்நிலைமை மேலும் மோசமடையலாம்.

மேற்படி பாக்கு வகைகளைப் பாவிப்போர் மேலே குறிப்பிட்ட ஆரம்ப அறிகுறிகள் காணப்படின் உடனடியாக வாய் முக தாடை சத்திரசிச்சை நிபுணரை நாடி பரிசோதித்துக் கொள்வது நன்று.

தேவையான போது வாய்க்குழி மேலணியின் சிறு பகுதி அகற்றப்பட்டு (Incisional Biopsy) இழையவியல் பரிசோதனைக்குற்படுத்தி நோயைக் கண்டறியலாம்.

இந்நோய் ஏற்பட்டோருக்கான சிகிச்சை முறைகள்:

(இழையவியல் (Histo Pathology) பரிசோதனைக்குற்படுத்தி உறுதிசெய்யப்பட்ட பின்)

01. வெற்றிலை, பாக்கு சாப்பிடுவோர் அப்பழக்கத்தை அடியோடு விடுதல்.

02. பல் வைத்தியரை நாடி பற்களையும் முரசையும் சுத்தம் செய்து கொள்வதுடன் அவரின் ஆலோசனைக்கிணங்க வாய்ச் சுகாதாரத்தை மேற்கொள்ளல்.

03. உடனடியாக வாய் முக தாடை சத்திரசிச்சை நிபுணரை நாடி தகுந்த வைத்திய ஆலோசனையைப் பெறுதல்.

04. மேற்படி ஓரல் சப் மியுக்கஸ் (F)பைப்றோசிஸ் நோயுடையோர் சாப்பிட முடியாமையினால் போஷாக்குக் குறைபாடு உடையவர்களாகவும் குருதிச்சோகை உடையவர்களாகவும் காணப்படுவதால் தகுந்த வைத்திய ஆலோசனையும் சத்துள்ள உணவுகளும் அவசியம்.

05. வாய் முக தாடை சத்திரசிச்சை நிபுணரின் ஆலோசனப்படி Steroid ஊசிமருந்துகளும் வாயைத் திறப்பத ற்கான பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். பிள்ளைப்பேறின் போது தாயில் இருந்து அகற்றப்படும் Placenta மூலம் பெறப்படும் ஊசி மருந்துகளும் தற்போது வழங்கப்படுகின்றன.

06. சத்திரசிச்சையின் மூலம் வாய்க்குழி மேலணி அகற்றப்பட்டு வேறு இழையங்களால் பிரதியீடு செய்யப்பட
முடியும்.

07. மேற்படி ஓரல் சப் மியுக்கள்(F)பைப்றோசிஸ் நோயுடையோர் தரப்படும் கால இடைவெளிகள் தவறாது சென்று வாய் முக தாடை சத்திரசிச்சை நிபுணரின் ஆலோச னையைப் பெற்று வாய்ப்புற்று நோய் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளலாம்.

Source:
வாய் முகம் மற்றும் தாடை சத்திர சிகிச்சை பிரிவு,
போதனா வைத்தியசாலை
யாழ்ப்பாணம்

Oral & Maxillofacial Surgical Unit Teaching Hospital – Jaffna
Oral Submucous Fibrosis (நோய் சம்பந்தமான தகவல் கையேடு)
ஆசிரியர்: Dr.யூனுஸ் சிராஜ் முஹம்மட்
தமிழாக்கம்: Dr.அகிலன்
திகதி: 01.01.2013 இதழ்: 10

701 total views, 1 views today