ஆயிரம் Body Bags. அச்சம் தேவையா?
By Dr Ziyad Aia
சுகாதார அமைச்சினால் செஞ்சிலுவை சங்கத்திடம் 1000 Body Bags கோரியதாக ஒரு செய்தி இப்போது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. (இது வதந்தி என்றும் சொல்லப்படுகிறது. அதை ஆராயும் நோக்கமல்ல)

⁉️ சிலர் அப்படியென்றால் உடலை புதைக்கபோகிறார்களா?
⁉️ எரிப்பதற்கு எதற்கு Body Bags என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்?

உண்மையில் Body Bags என்பவை தடிப்பமான Plastic பைகள்.
Body Bags பாவிப்பதன் பிரதான நோக்கம் மரணித்த உடலில் இருந்து வரும் திரவங்களில் (Body Fluids) இருந்து சூழலையும் கையாள்பவர்களையும் பாதுகாக்க. அதாவது அந்த உடலை பாதுகாப்பாக சேமித்து எரிக்கும் or அடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டுசெல்லவே அது பயன்படுகிறது.

ஏற்கனவே எரியூட்டப்பட்ட பெரும்பாலான COVID-19 உடல்கள் இதனுள் வைக்கப்பட்டே மயான இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.
நாட்டில் அதிகரித்துவரும் தொற்று வீதம் காரணகமாக பல வைத்தியசாலைகளை தயார் நிலையில் வைத்தல், Ventilator வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளடங்க Body Bags களையும் தயார் நிலையில் வைப்பது அரசின் பொறுப்பாகும்.

சுகாதார ஊழியர்களுக்கு Face Mask, PPE எனும் பாதுகாப்பு உடை போன்றே, Body Bags உம் உடலை கையாள்பவர்களையும் , கொண்டுசெல்லும்போது சூழலை பாதுகாக்கவும் உதவும்.

எனவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கொண்டு யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை.
இதேநேரம் இலங்கையில் சமீப நாட்களாக COVID-19 தொற்றுக்குள்ளான அதிகளவானவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட போதும் பெரும்பாலானவர்கள் நோய் அறிகுறிகள் இன்றியே உள்ளனர்.
இலங்கையில் COVID-19 மரண வீதம் 2% ஐவிட குறைவு. இன்றைய தேதியில் ICU வில் உள்ளவர்கள் இருவரே.
Be Positive. Stay Safe

Body Bags பற்றிய மேலதிக தகவல்களுக்கு முன்னைய பதிவை பார்க்க:

www.lankahealthtamil.com/body-bag-என்றால்-என்ன-இதன்-பயன்க/

 

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

109 total views, 1 views today