இலங்கைக்கு சீனா, தாய்வான் மற்றும் தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 74 கொண்டைனர்கலில் இருந்த டின்மீன்கள் பாவனைக்கு உதவாது என இலங்கை சுங்கத்தினால் திருப்பி அனுப்ப பட்டுள்ளது.

இவற்றின் நிறை 137,000kg மற்றும் பெறுமதி Rs 388 million.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் தரத்தை பரிசோதனை செய்யும் Sri Lanka Standards Institute (SLSI)  மற்றும் சுகாதார அமைச்சின் உணவு சோதனை பிரிவு  இந்த மீன்கள் பாவனைக்கு உதவாதவை என அனுமதி மறுத்துள்ளது. இதனிடையே ஏற்கனவே சந்தைக்கு விடப்பட்ட 18 கோள்கலன்களில் இருந்த டின் மீன்களை மீள பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இவற்றின் பெயர் விவரம் மற்றும் Batch விபரம் கீழே லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுகாதார அமைச்சின் சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் கடைகளில் பரிசோதனை மேற்கொண்டு மேற்படி டின்மீன்களை சந்தையில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பிரதி சுகாதார பணிப்பாளர் Dr சரத் அமுனுகம தெரிவிக்கையில் இது போன்ற சம்பவங்கள் முன்னரும் இடம்பெற்றுள்ளன. அதன்போது டின் மீன்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளன.

நீதி:-
என்னதான் பல கம்பெனிகள் டின்மீன்களை போட்டி போட்டு விற்றாலும் எல்லா டின்மீன்களும் பெரும்பாலும் ஒன்றுதான் லேபில் மட்டுமே வித்தியாசம்.

நாலு புறமும் கடலால் சூழப்பட்டு, ஆறுகள், குளங்கள் தோறும் மீன்பாடும் தேன் நாட்டில் இரசாயனங்கள் கலந்த டின் மீன்கள் எதற்கு.

நுகர்வோர் கவனத்திற்கு


Sources:- Informayion Unit, Ministry of Health

http://www.frontpage.lk/page/74-containers-of-canned-fish-unsuitable-for-consumption-to-be-sent-back/25016

https://www.newsradio.lk/local/sri-lanka-customs-rejects-74-canned-fish-containers

உறுதிப்படுத்தப்பட்ட சுகாதார தகவல்களுக்கு எமது பக்கத்தை Like செய்து இணைந்திருங்கள்.
https://www.facebook.com/LankaHealthTamilPage/

COVID-19 பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட தமிழ்மொழிமூலமான செய்திகளுக்கு இதனை Click செய்க.

 

4,354 total views, 1 views today