Kidney Failure எனும் சிறுநீரக செயலிழப்பு அதோடு சேர்ந்த Kidney Transplant அதட்கான நிதி சேகரிப்பு சமீப காலமாக மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
இது பற்றிய சரியான தெளிவூட்டல் விளக்கங்கள் மக்களிடையே சென்றடையாத காரணத்தால் இது ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
சிறுநீரக செயலிழப்புக்கான காரணங்கள்:-
இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. நீரிழிவு நோயும், உயர் இரத்த அழுத்தமும் இரு முக்கிய காரணங்களாகச் சொல்லலாம். மொத்தமாக நோயாளிகளில் 2/3 பங்கு இவ்வகைக் காரணங்களால் தாக்கப்படுகிறார்கள்.
1. நீரிழிவு நோய் : இது சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு மிக முக்கியமான காரணமாகும். சராசரியாக மூன்றில் ஒரு பங்கு, அதாவது 35 – 40 சதவீதம் நோயாளிக்கு இந்நோயினாலேயே ஏற்பட்டு விடுகிறது.
2. உயர் இரத்த அழுத்தம் : முறையாக இரத்த அழுத்தம் கவனிக்கப்படா விட்டால், நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். மொத்த நோயாளிகளில், 30 சதவீதம் இக்காரணத்தினால் தாக்கப் பட்டிருப்பது தெரிய வருகிறது. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால், உயர்இரத்த அழுத்தம் சிறுநீரக செயல்பாடுகளை மேலும் முடக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
3. க்ளோமெருலோ நெஃப்ரிடிஸ் (glomerulonephritis) : சிறுநீரகத்தில் விக்கம் மற்றும் சேதங்களை ஏற்படுத்தும் இந்நோய் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.
4. பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய் (Polycystic kidney disease) : இது இருசிறுநீரகங்களிலும் வேண்டாத சதைவளர்ச்சியை ஏற்படுத்தும் பொதுவான மற்றும் பாரம்பரிய தாக்கமாகும்.
5. CKDu என அழைக்கப்படும் Chronic Kidney Disease of Unknown etiology. காரணம் அறியப்படாத சிறுநீரக நோய். இலங்கையின் வறள் வலைய மக்களை பொதுவாக பாதிக்கும் ஒரு காரணி. இலங்கையில் Kidney நோயாளர்களில் 15% இதில் அடங்குவர்.
சிறுநீரக நோய்களைக் குறிக்கும் பொதுவான அறிகுறிகள்
- பசியின்மை, வாந்தி எடுத்தல்
- நலிவான உடல்நிலை, எடை குறைதல்.
- கால்களின் கீழ் பாகம் வீக்கம் அடைதல்
- முகத்தில் அல்லது கண்களைச் சுற்றி வீக்கம் காணப்படுதல்.(குறிப்பாக காலை நேரத்தில்)
- உயர் இரத்த அழுத்தம், அதிலும் கட்டுப்படுத்த முடியாத அளவில் அல்லது இள வயதில் ஏற்படுதல்
- தோல் நிற மாற்றம் (வெளுத்துப்போதல்).
- தூக்கம், கவனக் குறைபாடு, மற்றும் மயக்க நிலை.
- அறிப்பு, சதைப் பிடிப்பு, அல்லது ஓய்வின்மை.
- பக்கவாட்டுப் பகுதியில் வலி ஏற்படுதல்
- வழக்கத்திற்கு மாறாக, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு
- எலும்பு வலி, வயதானவர்களுக்கு எலும்பு முறிவு மற்றும் குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடு.
- பாலியல் இன்பத்தில் நாட்டமில்லாமை, ஆண்குறி விறைப்புடன் இல்லாமல் இருத்தல், பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள் ஏற்படுதல்
சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன? அதை குணப்படுத்த முடியுமா?
சிறுநீரக செயலிழப்பு காரணங்கள் , தடுக்கும் வழிகள் , குணப்படுத்தும் முறைகள்
CKDu என அழைக்கப்படும் Chronic Kidney Disease of Unknown etiology. காரணம் அறியப்படாத சிறுநீரக நோய்.
இலங்கையின் வறள் வலைய மக்களை பொதுவாக பாதிக்கும் ஒரு காரணி. இலங்கையில் Kidney நோயாளர்களில் 15% – 20% இதில் அடங்குவர்.
பாதிக்கப்பட்டோரில் 60% க்கும் மேட்பட்டோர் வருமானம் குறைந்த விவசாயிகள்.
70% க்கு மேல் ஆண்களையே பாதிக்கிறது.
இன்னும் சரியான காரணம் அறியப்படாத போதும் இதுவரை செய்த ஆராய்ச்சிகளின் முடிவு படி WHO எதிர்வு கூறும் காரணிகள்:-
01. ஆசனிக் , கட்மியம் போன்ற பார உலோகங்கள் உணவு, நீரில் கலத்தல்.
02. சிறுநீரகத்தை பாத்திக்கும் விவசாய இரசாயனங்களின் பாவனை.
03. சிறுநீரகத்தை பாதிக்கும் ஆயுர்வேத மருந்து வகைகள்.
Click Here to see Research Article
Al-Jazeera வினால் CKDu பற்றி வெளியிடப்பட்ட 2 நிமிட Documentary. (Worth Watching)
சிறுநீரக நோய் பற்றி இலங்கை வைத்தியர் Dr Rayes இனால் தயாரிக்கப்பட்ட Documentary.
நீண்டகால சிறுநீரக நோய் (CKDu) பற்றிய மர்மத்தை கண்டறிய இலங்கை மற்றும் சீனா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
காரணம் அறியப்படாத நீண்டகால சிறுநீரக நோய் இலங்கையில் மிகப்பெரிய பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. இது 12 மாவட்டங்களில் பாதிப்புகளை ஏட்படுத்தி உள்ளதோடுவட மத்திய மாகாணத்தில் இருந்தே அதிகளவு நோயாளிகள் பதிவாகி இருப்பதாக அறிக்கைகள் வருகின்றன. இதன் விளைவாக பல மனித உயிர்களை இழக்க நேர்ந்துள்ளது. இது சமூகத்தின் மீது ஒரு பெரிய பாதகமான தாக்கத்தை ஏட்படுத்தி உள்ளதோடு இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் அதிகளவிலான உடல் இயலாமையை உண்டாக்கியுள்ளது. பல ஆண்டுகளாக ஆய்வுகள் பெரிய அளவில் செய்யப்பட்டிருந்தாலும் கூட காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன இலங்கை மற்றும் சீன மக்கள் ‘குடியரசு அரசு இடையே சீன-இலங்கை உறவுகளை புதுப்பிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சியின் கீழ் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர், கலாநிதி கெளரவ ராஜித சேனாரட்ன சீன அரசாங்கம் இலங்கையில் சிறுநீரக நோய் பற்றிய மர்மம் தீர்க்க ஒத்துழைப்பை நாடியுள்ளார். இதன் விளைவாக, ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை 25 அக்டோபர் 2016 அன்று சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சு மற்றும் சீன அறிவியல்அ காடமி இடையில் கையெழுத்தானது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணம் தெரியாத நீண்டகால சிறுநீரக நோய் தாக்கத்திற்கு சாத்தியமான காரணிகளை அடையாளம் காண மேலும் ஆய்வு நடத்த கவனம் செலுத்துகிறது. இது மேலும் CKDu குறித்து தடுக்கும் திறன் மற்றும் குணப்படுத்தும் அம்சங்களில் இலங்கை சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்கவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மற்ற முக்கிய பகுதிகளில் சில இருக்கும் சிறுநீரக பதிவுகளை வலுப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய புள்ளிவிபரங்களை மேம்படுத்துமதல், மற்றும் CKDu கண்டுபிடிக்கும் பயோமார்க்கர்களை (biomakers) ஆய்வு செய்தல்.
இந்த ஒப்பந்தம் ஊட்டச்சத்து மற்றும் சுதேச வைத்திய அமைச்சர், கெளரவ ராஜித சேனாரத்ன மற்றும் சீன அறிவியல் அகாடமி துணை தலைவர் , பேராசிரியர் Zhongli டிங் இடையில் கையெழுத்தானது.
Resource:- http://www.health.gov.lk/moh_final/english/news_read_more.php?id=209
Some Useful Links
5,140 total views, 3 views today