சமீப நாட்களாக கீழே படத்தில் காட்டியவாறு ஒரு செய்தி சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது.

” அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு அப்பிள் விதைகளை கொடுத்து கொலை செய்ததட்காக 22 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.” என்று.

உண்மையில் இந்த சம்பவம் 2015 October இல் இடம்பெற்றது. அதில் Sofia Samad என்ற பெண் தனது முன்னாள் காதலன் Arun Kamalasanan உடன் சேர்ந்து தனது கணவரான Sam Abraham ஐ கொலை செய்தது பற்றியது.

இருவருக்கும் தலா 22 மற்றும் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டன.   (தண்டனை விதிக்கப்பட்டது 2018 june 21).

உண்மையில் இந்த கொலை இடம்பெற்றபோது Sam Abraham க்கு மாரடைப்பு என்று சொல்லியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறந்தபின் பிரேத பரிசோதனையில் சயனைட் நஞ்சூட்டப்பட்டது கண்டறியப்பட்டது. உண்மையில் இந்த சயனைட் நஞ்சானது அவருக்கு வழங்கப்பட்ட Orange Juice இல் கலந்து கொடுக்கப்பட்டதே தவிர அப்பிள் விதைகளால் அல்ல.

( நீதிமன்ற தீர்ப்பின் ஆதாரம் (01))

உண்மையில் அப்பிள் விதைகள் நஞ்சா?

ஆப்பிள் விதைகளில் Amygdalin எனும் இரசாயனம் உள்ளது. இது சமிபாடடையும் போது Hydrogen Cyanide ஐ வெளியிடும்.

இந்த Amygdalin ஆனது  Rose Family ஐ சேர்ந்த ஏனைய பழங்களான  Almonds (பாதாம்), Apricots (இலந்தை பழம்) , Peaches, Cherry என்பவற்றிலும் காணப்படுகிறது. (2), (3), (4)

இந்த Amygdalin விதைகளை பாதுகாக்கும் ஒரு படலமாகும் இது முழுமையாக உண்ணப் படும் போது பாதிப்பை ஏற்படுத்தாது இது துண்டுகளாக உடைக்கப்பட்டு அல்லது கடிக்கப்படும் போது தான் ஹைட்ரஜன் சயனைட் சமிபாட்டுடன் வெளியாகும். (5), (6)

சாதாரணமாக 0.2-1.6mg Cyanide ஐ உட்கொள்வது ஆபத்தானது.

அதிலும் Sodium மற்றும் Pottassium Cyanide யே மிகவும் ஆபத்தானவை.

இவை, தசை செயல் இழப்பு, கோமா, இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழப்பை ஏற்படுத்தி மரணத்தையும் கொண்டு வரலாம்.

குறைந்தளவான Cyanide தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்று நோவு, மயக்கம் மற்றும் confusion ஐ ஏட்படுத்தலாம். (7)

1g Apple விதையில் 1-4 mg amygdalin உண்டு. (8), (9)

ஆனால் இதன் மூலம் வெளிப்படும் சயனைடின் அளவு மிகக்குறைவு.

1g நன்கு அரைத்த Apple  விதைகளில் இருந்து 0.06-0.24mg Cyanide வெளியாகும். (10), (11)

எனவே அதிக அளவு அப்பிள் விதைகளை உட்கொள்வது ஆபத்தை விளைவிக்கும்.

70kg நிறையுடைய ஒருவருக்கு ஆபத்தை விளைவிக்க 200 தொடக்கம் 5000 அப்பிள் விதைகள் தேவை.

அது பற்றிய அட்டவணையை கீழே பார்க்கலாம்.

அதேநேரம் தவறுதலாக விழுங்கப்படும் அப்பிள் விதைகள் உடலில் சமிபாடடயாமலேயே  வெளியேறுவதால் ஆபத்து குறைவு.

 

Take Home Message:-

அப்பிள் பழமானது நல்ல ஒரு ஆரோக்கியமான உணவு.

இருப்பினும் அதன் விதைகள் மென்று சாப்பிடப்படும் போது நச்சுப் பதார்த்தத்தை வெளியிடலாம்.

ஒருவருக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்துவதானால் 200க்கும் மேற்பட்ட விதைகளை அரைத்து உண்ண வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட சம்பவம் அப்பிள் பலத்தோடு  சம்பந்தப்பட்டது அல்ல.

ஓரிரு ஆப்பிள் விதைகளை தவறுதலாக விழுங்கி விட்டாலும் பயப்பட தேவையில்லை.

 

Sources:-

 1. Wife gets 22 years, ex-lover 27 for husband’s poisoned juice murder

https://www.theage.com.au/national/victoria/wife-gets-22-years-ex-lover-27-for-husband-s-poisoned-juice-murder-20180621-p4zmuh.html

 1. Amygdalin content of seeds, kernels and food products commercially-available in the UK.

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/24444917

 1. Cyanogenic Foods (Cassava, Fruit Kernels, and Cycad Seeds)

https://www.sciencedirect.com/science/article/pii/S0011502909000431

 1. Potential Toxic Levels of Cyanide in Almonds (Prunus amygdalus), Apricot Kernels (Prunus armeniaca), and Almond Syrup.

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/24171123

 1. Cyanogenesis in plants.

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/16667728

 1. Role of the gastrointestinal microflora in amygdalin (laetrile)-induced cyanide toxicity.

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/7362642

 1. Pediatric cyanide poisoning: causes, manifestations, management, and unmet needs.

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/17079589

 1. Determination of amygdalin in apple seeds, fresh apples and processed apple juices.

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/25306368

 1. Amygdalin content of seeds, kernels and food products commercially-available in the UK

https://www.sciencedirect.com/science/article/pii/S0308814613016245

 1. Acute health risks related to the presence of cyanogenic glycosides in raw apricot kernels and products derived from raw apricot kernels

https://efsa.onlinelibrary.wiley.com/doi/full/10.2903/j.efsa.2016.4424

 1. Determination of amygdalin in apple seeds, fresh apples and processed apple juices

https://www.sciencedirect.com/science/article/pii/S0308814614013077

3,857 total views, 1 views today