தமிழில்:- Dr Ziyad Aia
Li Wenliang எனும் 34 வயதுடைய Wuhan ஐ சேர்ந்த வைத்தியர் December 30 லேயே தனது வைத்தியசாலையில் 2003 களில் Corona Virus களால் பரவிய SARS ஐ ஒத்த நோய் அறிகுறிகளுடன் 7 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு இருப்பதை சக வைத்தியர்களுக்கு சீனாவில் உள்ள WeChat Social Media மூலம் அறிய படுத்தினார். ( சீனாவில் ஃபேஸ்புக் ஏற்கனவே தடை என்பது குறிப்பிடத்தக்கது)

இந்நோய் Wuhan இல் உள்ள Sea Food & Wild Animals மார்க்கெட்டில் இருந்தவர்களுக்கு வருவதாகவும் நியூமோனியா வை ஒத்த நோய் அறிகுறிகளை கொண்டிருப்பதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்த செய்தியில் அவர் தனது சக ஊழியர்களையும் அவதானமாக இருக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.
இச்செய்தியை அவர் பகிர்ந்து சில மணி நேரங்களிலேயே அவரது பெயருடன் வைரலாக பரவியது.

இதனால் அவரும் அவருடைய சக வைத்தியர்கள் சிலரும் வதந்தி பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அவரது எச்சரிக்கையை ஆரம்பத்திலேயே கருத்தில்கொண்டு முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்றுவரையான 20,000 பேர் மற்றும் 425 மரணங்களை தவிர்த்திருக்கலாம்.

January 10, Wuhan இல் Corona Virus தொற்றுக்கு உள்ளான நோயாளியை சோதித்த பின் அவருக்கும் இருமல் காய்ச்சல் எடுத்தது. பின்னர் அவருக்கும் அந்நோய் பரவியதாக உறுதிப்படுத்தப்பட்டு இப்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ICU இருந்தவாறே WeibO வில்  “அனைவருக்கும் வணக்கம், நான் கண் மருத்துவர் லீ, Wuhan Central மருத்துவமனையில் பணியாற்றுகிறேன்,” என தொடங்கும் அந்த பதிவை மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி பகிர்ந்திருக்கிறார்.

தீவிர சிகிச்சை வழங்கியபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (06-02-2020) மரணமடைந்தார். இவரது மரணம் சீன மக்கள் மத்தியில் பாரிய உணர்வலைகளை கொண்டுவந்துள்ளது.

சீன உள்ளூர் நேரப்படி வியாழன் இரவு 9.30 மணிக்கு அவர் இறந்ததாக அரசுக்கு சொந்தமான Global Times, People’s Daily ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பின்னர் தாம் வெளியிட்ட செய்திக்கு முரணாக அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக Global Times தெரிவித்தது.
தாங்கள் வெளியிட்ட செய்தியை மாற்றுமாறு அரசு ஊடகங்களுக்கு சீன அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக லீ வெண்லியாங் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் ஊடகத்தினர் பிபிசி மற்றும் பிற செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்தனர்.
அவர்கள் யாரும் தங்கள் பெயர்களை வெளியிட விரும்பவில்லை. பின்னர் அவர் வெள்ளிக்கிழமை காலை 2:58 மணிக்கு இறந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
முதலில் சோகத்தைத் தூண்டிய அவரது மரணச் செய்தி இப்போது மக்களிடையே, அரசு மீதான கோபமாக மாறியுள்ளது. ‘வுஹான் அரசு லீயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’, ‘எங்களுக்கு கருத்துரிமைக்கான சுதந்திரம் வேண்டும்’ என்று பொருள்படும் ஹேஷ்டேகுகள் சமூக ஊடங்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
எனினும் இந்த ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி பகிரப்பட்ட ஆயிரக்கணக்கான பதிவுகளை சீன அரசு நீக்கியுள்ளது. இப்போது மிகச்சில பதிவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
“இது எச்சரிக்கை விடுத்த ஒருவரின் மரணம் அல்ல; நாயகன் ஒருவரின் மரணம்,” என்கிறது ஒரு Weibo பதிவு. மிக இளவயதில் (34) அதுவும் ஒரு வைத்தியரின் மரணம் Corona பற்றிய பீதியை மேலும் அதிகரித்துள்ளது.

Sources:-

Grief, anger in China as doctor who warned about coronavirus dies!
https://www.aljazeera.com/amp/news/2020/02/chinese-doctor-sounded-alarm-wuhan-coronavirus-dies-200207004935274.html

https://edition.cnn.com/2020/02/03/asia/coronavirus-doctor-whistle-blower-intl-hnk/index.html

https://www.bbc.com/news/world-asia-china-51364382

https://www.washingtonpost.com/world/2020/02/04/chinese-doctor-has-coronavirus/

1,414 total views, 3 views today