01. அதிகளவு நீர் அருந்தவும்.
02. சீனி சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்களை தவிர்க்கவும்.
03. வெளியே செல்லும் போது தலையை மறைத்தல் மற்றும் குடை பாவித்தல்.
04. முடிந்த அளவு வெளிக்கள நிகழ்வுகளை தவிர்த்தல்.
05. மென்மையான ஆடைகளை அணிதல்.
06. அதிக சூடான நேரங்களில் முகம் கைகளுக்கு நீறினால் நனைத்தல்.
07. 11am முதல் 3pm வரையான காலப்பகுதியில் அதிக வெப்பம் நிலவுவதால் கட்டாயம் வெளிக்கள நிகழ்வுகளை தவிர்த்தல்.

பாடசாலை அதிபர்களுக்கான வேண்டுகோள்:-
01. வகுப்பறைகளில் போதுமான நீர் அருந்தக் கூடிய வசதியை ஏற்படுத்தல்.
02. மின்விசிறி இல்லாத வகுப்புகளுக்கு அதனை பொருத்துதல் மற்றும் கை விசிறிகளை பாவித்தல்.
03. முதல் உதவி குழுக்களை ஏற்படுத்தி அவர்களுக்கு பயிற்சி அளித்தல்.
04. மாணவர்களையும் ஆசிரியர்களையும் இதுபற்றி அறிவுறுத்தல்.
05. மாணவர்களின் சுகாதார பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்து அதற்குரிய முதல் உதவிகளை வழங்கல்.
06. வகுப்பறைகளில் நீர் நிரம்பிய வழிகளை வைத்து கைகளை நனைப்பதட்குரிய ஏற்பாடுகளைச் செய்தல்.
07. நல்ல காற்றோட்டம் ஏற்படுத்த வகுப்பறை கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்தல்.
08. நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை அவர்கள் நோய் குணமாகும் வரை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோரை அறிவுறுத்தல்.

பி.கு:- இதற்கிடையே இல்ல விளையாட்டுப் போட்டிகளை இந்த மாதமே நடத்தி முடிக்க வேண்டும் என்ற சுற்றுநிறுபம் சுற்றி திரிவதாக தகவல் கிடைக்கிறது.

Source:-

http://adaderana.lk/news_intensedebate.php?nid=60738

500 total views, 3 views today