ஒரே மாதத்தில் Sixpack.
ஓடாமல் Run எடுப்போம், சும்மா உட்கார்ந்தே Win எடுப்போம்.

படத்தில் காட்டப்பட்டிருப்பது Sixpad என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படும் EMS எனும் Electrical Muscle Stimulators கருவி.
3.7V மின்சாரத்தின் மூலம் தசைகளை துடிக்கச்செய்து நரம்புகளை தூண்டி உள்ளே உள்ள கொழுப்புகளை கரைத்து 6 பைகளை (6 packs) தருவதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. பிரபல உதைபந்தாட்ட வீரரும் இதன் விளம்பரத்தில் தோன்றுகிறார்.

உண்மையில் EMS எனும் Electrical Muscle Stimulators கருவி என்பது என்ன? இதன்மூலம் 6 பைகளை அடைய முடியுமா?

இந்த வகை Electrical Muscle Stimulator கள் 1940 ஆம் ஆண்டு காலப்பகுதியில் Russia வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1970 முதல் விளையாட்டு வீரர்களுக்கு (Athletes) களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இதன் முக்கிய பிரயோசனங்கள் இரண்டு. (source 01)
01. பொதுவாக காயங்களுக்கு உள்ளான தசை நார்களை உயிர்ப்பிக்க பயன்படுகிறது. (கொழுப்பை குறைப்பதற்காக அல்ல.)
To help people re-strengthen injured areas not to burn fat or tone muscle effortlessly.
பாரம்தூக்குதல், வேகமாக ஓடுதல் போன்ற விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு இது உதவும்.

02. Physiotherapy துறையில் வலிகளை குறைப்பதற்கு இது பயன்படுகிறது.
பொதுவாக எமக்கு நுளம்பு கடிக்கும்போது சொறிதல், உடலில் வலிக்கும் போது கையால் ஊண்டுத்தல் or Massage செய்தல்:- இவற்றின் போது Endophin எனும் Hormon சுரந்து வலியை குறைக்கும்.
Muscle stimulators are also used to help with pain and muscle spasm relief.
அதுபோன்ற ஒரு செயற்பாடு இதன் போது நிகழும்.
பொதுவாக Physiotheraphy இன்போது TENS (Transcutaneous Electrical Nerve Stimulator) பயன்படுத்தப்படும்.
இது பொதுவாக Arthritis எனப்படும் மூட்டு வலி, Back pain, Cancer pain , பாரிசவாதம் மற்றும் தசை சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Physiotheraphy வழங்க இது பயன்படும். (Source 02)

விளம்பரப்படுத்தப்படும் கருவியில் காணப்படும் EMS ஆனது TENS ஐ விட வீரியம் கூடியது.
அளவுக்கு அதிகமாகவும் அதிக நாட்களுக்கும் பாவித்தால் சிறுநீரகத்தை கூட பாதிக்கலாம்.

பலர் நினைப்பது தொப்பை என்பது முழுக்க முழுக்க கொழுப்பு படிவதால் உருவாவது என்று. அது தவறு. கொழுப்பு சிறிய படலமாக இருந்தாலும் உடற்பயிற்சி இன்றி தசைநார்கள் தளர்வடைந்து நீட்சி அடைவதாலேயே தொப்பை உருவாகிறது.
( தோய்ந்த கயிறும், தொப்பையான வயிறும் இறுக்கி கட்ட சரியாகும்)
உடற்பயிற்சி மூலம் தசை நார்களை உறுதிப்படுத்தினாலே தவிர வெளித்தள்ளி இருக்கும் வயிற்றை உள்ளே கொண்டு செல்வது கடினம்.

நோகாமல் நொங்கு எடுக்க பலர் தயாராக உள்ளோம்.
ஒருவனின் ஆசையைத் தூண்டி குறைந்த விலையில் பொருளை விற்கும்போது நிறைய மக்களை சென்றடையும்.
EMS என்று மிக குறைந்த விலையில் சந்தையில் விற்கப்படும் பல கருவிகள் எந்த விதமான பாதுகாப்பு Standards ஓ முறையான Certification இல்லாமலோ இணைய சந்தைகளில் (Online Market Places) பரவலாக விற்கப்படுகின்றன. (Source 03)
இவ்வகையான கருவிகளை அதிக நேரம், அதிக நாட்கள் பாவிக்கும்போது தோல் எரிவு, Rabdomyelitis எனும் தசை நார்கள் பாதிப்பு முதல் சிறுநீரகங்களும் பாதிக்கப்படலாம். (Source 04)

EMS பாவனை சம்பந்தமான பொதுவான ஆய்வுகளில் அவை வயிற்றில் கொழுப்பையோ நிறையையோ குறிப்பிடக்கூடிய அளவு குறைக்கவில்லை என்பதும், ஏனைய உடற்பயிற்சி உணவுக் கட்டுப்பாட்டுடன் செயற்படுத்தப்படும்போது ஓரளவு முன்னேற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. (Source 05)

விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு பலர் இதற்கு ஏமாறுவதுதான் தவிர்க்க முடியாதது.

உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க மாவுச்சத்து உணவுகளை குறைத்து நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் செய்வதே சிறந்தது.

No pain. No gain.

Sources:-

01.  Electrical Muscle Stimulators – Can They “Zap” the Fat Away?
http://corydonphysiotherapy.com/blog/electrical-muscle-stimulators-can-they-zap-the-fat-away

02. Is E-Stim the Answer to Your Pain?
https://www.healthline.com/health/pain-relief/e-stim

03. Electronic Muscle Stimulators
https://www.fda.gov/medical-devices/consumer-products/electronic-muscle-stimulators

04. Muscle Stimulation Dangers
https://www.leaf.tv/4995583/muscle-stimulation-dangers/

05. All About Ab Stimulators
https://www.healthline.com/health/ab-stimulator

 

412 total views, 1 views today