அதிக வெப்பத்தால் உடலில் தோன்றும் மாற்றங்கள்:-
சிவப்பு நிறமான தோல் உயர்வுகள் (Rashes) கழுத்து நெஞ்சு அக்குள் பகுதிகளில் தோன்றல். (Heat Rash)
சிவந்த வலி உள்ள தோல் பகுதி. (Sun Burn)
வழமையை விட அதிகளவு வியர்த்தல்.
தசை நோவு.
தசைப்பிடிப்புகள்.
அதிக மன அழுத்தம் மற்றும் அதிக தலைவலி.
வாந்தி உண்டாதல்.
போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறவும்.

 

அதிகம் பாதிக்கப் படக் கூடியவர்கள்:-
* மழலைகள் மற்றும் இளம் சிறார்கள்.
* 65 வயதைத் தாண்டிய முதியவர்கள்
* அதிக நிறை மற்றும் கொழுப்பு கொண்ட உடல் கட்டமைப்பை கொண்டவர்கள்
* திறந்த வெளிகளில் உடல் உழைப்பினால் வேலை செய்பவர்கள்.
* நோயாளிகள் குறிப்பாக உயர் குருதி அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

 

வெப்பமான கால நிலையால் ஏற்படும் சுகாதார பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகள் பற்றிய சுகாதார அமைச்சின் ஆலோசனைகள்.

1. மென்மையான கனம் குறைந்த ஆடைகளை அணியவும். ( Cotton ஆடைகள் விரும்பத்தக்கவை.) கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது.

02. ஆடைகள் கால் உட்பட உடலை மறைக்கக் கூடியதாக இருப்பது விரும்பத்தக்கது.

03. வெளியே செல்லும்போதும் முடிந்த அளவு குடை அல்லது அகலமான விளிம்புடைய தொப்பியை பாவிக்கவும்.

04. வாகனங்கள் ஓட்டும்போது Sun Glasses பாவிப்பது சிறந்தது.

05. தேவை ஏற்படின் வெளியே செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் (SPF) – Sun Protection Factor 30 Cream பாவிக்கலாம்.

06. விவசாயம் மற்றும் கட்டுமான பணிகள் போன்ற வெளிக்கள வேலைகளில் ஈடுபடுவோர் அதிக வெயில் நிலவும் வேளைகளில் வேலைகளை முடிந்த அளவு குறைப்பது நல்லது. இடைக்கிடையே நிழலான பகுதிகளுக்குச் சென்று சற்று ஓய்வு எடுப்பது சிறந்தது.

07. அதிகமான வெப்பம் நிலவும் காலப்பகுதியில் வாகனங்களில் குழந்தைகள் செல்லப்பிராணிகளை விட்டுச் செல்ல வேண்டாம்.

08. மின்விசிறிக்கு முன்னால் நீர் கோப்பை ஒன்றை வைப்பதன் மூலம் அதிலிருந்து நீர்த்தாரையை உடம்புக்கு படச் செய்து வெப்பத்தை தணித்து நீரிழப்பையும் தவிர்க்கலாம்.

09.வழமையைவிட அதிகமாக நீர் அருந்துவோம்:-
தாகம் வரும் வரை காத்திருக்காமல் 2 மணித்தியாலத்துக்கு ஒரு முறை நீர் அருந்துவது சிறந்தது.
அதிக இனிப்பு சுவையுடைய பானங்கள், சாராயம் போன்றவற்றைக் தவிர்ப்போம். ( இவை உடல் கலங்களில் உள்ள நீரை வெளியேற்றும்.)
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்போது மேலதிக நீர் போத்தல் ஒன்றை அனுப்பவும்.
உடலில் அதிகமாக வியர்க்கும் நாட்களில் கனியுப்புக்கள் வெளியேறுவதால் அவற்றை நிவர்த்தி செய்ய ஜீவனீ , இளநீர் போன்ற பானங்களை குடிக்கக் கொடுப்போம்.

இந்த ஆலோசனையை வழங்குவது சுகாதார அமைச்சின் Health Promotion Brureau
தமிழ் மொழிபெயர்ப்பு:- Dr Ziyad A.I.A

1,392 total views, 3 views today