By Dr Ziyad Aia
நாட்டில் மிகப்பெரிய ஊழல் நிறைந்த ஒரு விடயமாக டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் செயன்முறை காணப்படுகிறது. 1999 க்கு முன் சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் போது அதற்குரிய மருத்துவ சான்றிதழை RTA இல் பதிவுசெய்யப்பட்ட தனியார் துறையில் உள்ள யாரேனும் வைத்தியர் ஊடாக பெறக்கூடியதாக இருந்தது.

ஆனால் பலருக்கு மருத்துவ சான்றிதளே என்னவென்று தெரியாத அளவுக்கு வெறும் Blood Group ஐ Agent (Learners) க்கு வழங்கினால் போதும் , ஏனைய தகவல்கள் Automatic ஆக நிரப்பப்பட்டு மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் Driving செய்ய Physically , Mentally Fit இல்லாதவர்களுக்கும் இது வழங்கப்பட்டது.
( வைத்தியருக்கே தெரியாமல் அவரது Rubber Stamp பாவித்த வரலாறுகளும் உண்டு.)

இதனை தவிர்க்கும் முகமாகவும், மருத்துவ சான்றிதழ் கட்டணம் 800rs இல் இருந்து, ஏனைய சோதனைக்கான கட்டணங்களை Ministry of Transport & Civil Aviation க்கு பெறும் நோக்கிலும், 8 வருடங்களுக்கு ஒருமுறை Licence ஐ புதுப்பிக்கும்போது புதிய மருத்துவ சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற Act இன் அடிப்படையிலும் National Transport Medical Institute க்கு or அதன் மாவட்ட கிளைகளுக்கு நேரடியாக சென்று சான்றிதழ் பெறவேண்டும்.
(National Transport Institute Act No.25 of 1997, Date Established 01.01.1999)

தற்போது மாவட்ட ரீதியான கச்சேரிகள் ஊடாக மருத்துவ சான்றிதழ் வழங்கும் முறையினால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

அதில் பிரதான பிரச்சினைதான் மருத்துவ சான்றிதழ் வழங்கும் வைத்தியர்கள் மற்றும் ஆளணி பற்றாக்குறை. இதனால் நீண்ட நேர காத்திருப்பு மற்றும் அலைச்சல்.

இதனை தீர்க்கும் முகமாக நல்லாட்சி அரசு National Transport Institute என் கிளை நிறுவனங்களான மாவட்ட கச்சேரிகளுக்கு வைத்தியர்களை இணைக்க விளம்பரம் வெளியிட்டது. (Source:- https://bit.ly/2SzUoj4 )

அதில் பிரதான நிபந்தனை குறிப்பிட்ட வைத்தியர் அரச வைத்தியசாலை சேவையில் இருந்து விடுபட்டு National Transport Institute இல் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு கடமை புரியவேண்டும். அரசு சேவைக்கு ஒத்த/ குறைந்த சம்பளம் வழங்கப்படும்.
2nd Category:- அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 60 வயதுக்கு மேற்பட்ட வைத்தியர்கள் ஒப்பந்த அடிப்படையில் இணைக்கப்படலாம்.

இது ஒரு முட்டாள்தனமான முடிவு என்று ஏற்கெனவே பதிவில் கூறியிருந்தேன்.

காரணம்:- 01. வெறுமனே BP, Vision Check up, Heart Checkup காக பல லட்சங்கள் செலவு செய்து உருவாக்கிய அரச வைத்தியரை NTMI க்கு இணைத்துக்கொள்வது.
2nd Category:- ஏற்கனவே ஓய்வூதியம் பெறும் வைத்தியருக்கு மேலதிக வேலை வாய்ப்பை வழங்கி அரச செலவினத்தை அதிகரிப்பது.

இந்த மடத்தனமான முடிவுகளால் பல கச்சேரிகளில் வைத்தியரின் வெற்றிடங்கள் நிரப்பப்படாமல் பற்றாக்குறை நிலவுவதும் பொதுமக்கள் பல நாட்கள் அலைய வேண்டிய உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.

பல்கலைக்கழகம், தொழில்சார் விண்ணப்பங்களுக்கான மருத்துவ சான்றிதழ்கள் வழமையாக அரச வைத்தியசாலையில் வழங்கப்படுகிறது.

சுகாதார அமைச்சும் போக்குவரத்து அமைச்சும் இரு அரச திணைக்களங்களாக இருந்தாலும் தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு வேறு என்பது போல் , போக்குவரத்து அமைச்சுக்கு வருமானத்தை ஈட்ட மக்களை பலிகடாவாக்கியது நல்லாட்சி அரசு.

கச்சேரிக்கு என்று வைத்தியர்களை நியமித்து மக்களின் அசௌகரியத்தை அதிகரித்து அதன் மூலம் வைத்திய சான்றிதழிலும் லஞ்சம் ஊடுருவும் (Monoply உருவாகும்) வாய்ப்பும் அதிகமாக இருந்தது.

வெரஹரவில் உள்ள National Transport Medical Institute க்கு ஜனாதிபதியின் திடீர் விஜயத்தின் மூலம் மக்களின் உண்மையான அவலநிலை அறியப்பட்டு வைத்தியசாலைகள் ஊடாகவே இந்த சான்றிதழை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை செய்து தருவதாக வாக்களித்தார். அவரது கூற்றை போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் உறுதிப்படுத்தினார். இதற்கான நடவடிக்கை ஒரு வாரத்துக்குள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இக்கோரிக்கையை நிறைவேற்றினால் மிகப் பெரிய சேவையாக அமையும். (News Source:- https://bit.ly/2Q3r3vs )

தேசிய போக்குவரத்து மருத்துவ சான்றிதழ் பெற செல்லும்போது கவனிக்க வேண்டியவை பற்றிய முன்னைய பதிவுக்குhttps://bit.ly/2rEdPfw )

116 total views, 2 views today