By:- Dr Ziyad Aia
சக்கரை வியாதிக்கும் Cola பானங்களுக்குமிடையிலான தொடர்பு பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் இப்போது அதன் அடுத்த வடிவம் Diet Soda அல்லது Zero Calorie என்ற பெயரில் செயற்கை சுவையூட்டிகளான Aspatame (Artificial Sweetner) சேர்க்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது.
எந்த சுவையாக இருந்தாலும் Soft Drinks சிறுவர்களுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.

12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு (even upto 18 years) Cola பானங்கள் உட்பட எந்த Soft Drinks உம் பரிந்துரைக்கப்படாதற்கான காரணங்கள் பல உள்ளன.

01. அதில் காணப்படும் அதிக கலோரி குழந்தைகளை இளவயதிலேயே கொழுத்தவர்களாக்கும். (Obesity)

02. Soda பானங்கள் குழந்தைகளின் பசியை குறைப்பதால் ஏனைய போசாக்குள்ள உணவுகளை உட்கொள்வது தடைபடும்.

03. Cola பானங்களில் காணப்படும் Phosphorus என்புகளை பலமிழக்க செய்வதோடு இலகுவாக முறிவுகள் ஏற்பட வழிவகுக்கும்.

04. சோடாவில் காணப்படும் அமிலம் மற்றும் அதிக இனிப்பு ஒன்று சேர்ந்து பல் enamel ஐ பாதித்து அதன் மூலம் பற்சூத்தை மற்றும் பற்களில் குழிகள் ஏற்படுத்தும்.

05. Cola பானங்களில் காணப்படும் Caffeine அதற்கு அடிமையாக்குவதோடு உடல் ரசாயனத்தை (neurochemistry) பாதிக்கும்.

06. சிறுவர்கள் தொடர்ந்து அருந்துவதால் இளவயதிலேயே சர்க்கரை நோய் உண்டாகும்.

07. அதில் காணப்படும் Aspartame (பொதுவாக Diet Soda க்கள்) ஓமோன்கள் மற்றும் மூளை நரம்பு மண்டலத்தை பாதிக்கும். (Brain Toxin & endocrine disrupter)

08. அதில் காணப்படுகின்ற செயற்கை ரசாயனங்கள் (Artificial Flavours) மூளையை பாதிக்கலாம்.

09. தொடர்ந்து Cola பானங்களை அருந்துவதன் மூலம் அதில் காணப்படுகின்ற அமிலங்கள் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் inflammation ஐ ஏற்படுத்தி Gastritis போன்ற அடிக்கடி வயிற்று வலியை ஏற்படுத்தலாம்.

10. Soda பானங்கள் அதிக அளவு நீர் இழப்பை ஏற்படுத்தி (dehydrating Diuretics) உடல் சமநிலையை குலைப்பதோடு குழந்தைகளுக்கு மயக்க நிலை மற்றும் சோர்வையும் ஏற்படுத்தும்.

இப்படி பல பின் விளைவுகள் உள்ளன.
இது இப்படி இருக்க பொதுவாக பாடசாலை விழாக்களுக்கு இந்த மாதிரி நிறுவனங்கள்தான் அடிக்கடி அனுசரணை வழங்குகிறது.
இலங்கை மருத்துவ சங்கமும் அடிக்கடி பாடசாலை நிகழ்வுகளில் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினாலும் Cooperate முதலைகளை மிஞ்சி எதுவும் செய்ய முடியாது.

#மக்களை_விழிப்பூட்டுவதே_ஒரே_வழி.

இதே நேரம் Harverd பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வொன்றில் Soft Drinks மற்றும் Sport Drinks அதிகளவு அருந்துவது இருதய நோய்கள் மற்றும் குடல், மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும் என நிரூபித்துள்ளது.
Source:- https://cnb.cx/2DA9jkg

மேலும் Soft Drinks அருந்தும் ஒவ்வொரு நாளும் Cancer வருவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. https://bit.ly/2Y1IVcA

169 total views, 3 views today